பர்ஸ்ட் ‘அண்ணாத்த’… நெக்ஸ்ட் அமெரிக்கா… லாஸ்ட் அரசியல்…; ரஜினி போடும் 3 ப்ளான்ஸ்

annatthe (2)ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘அண்ணாத்த’.

சிவா இயக்கி வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

முதன்முறையாக ரஜினி படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு கடந்த டிசம்சர் 13-ந்தேதி இப்படம் சூட்டிங் மீண்டும் தொடங்கப்பட்டது.

படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் ரஜினிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29-ந்தேதி ரஜினியை நேரில் சந்தித்தார் இயக்குனர் சிவா.

மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்குவது குறித்து இருவரும் ஆலோசித்துள்ளனர்.

அதன்படி, மார்ச் மாதம் முதல் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி.

ஒரே மாதத்தில் தன் காட்சிகளை முடித்துக் கொடுத்து விட்டு பின்னர் தான் உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கவிருக்கிறாராம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதத்தில் நடைபெறவுள்ள சமயத்தில் வீண் அரசியல் பிரச்னைகளை தவிர்க்க இந்த திட்டம் என கூறப்படுகிறது.

Super star Rajni’s Annaatthe shooting to resume soon?

Overall Rating : Not available

Latest Post