சீமான்-வீரலட்சுமிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

சீமான்-வீரலட்சுமிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini styleகடந்த 25 வருடங்களாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த வாரம் ரஜினி பேசிய அரசியல் பேச்சு, தற்போது அதிகளவில் சூடுபிடித்துள்ளது.

இதனிடையில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பா.ஜ.க-வில் ரஜினிகாந்த் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

ஆனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என நாம் தமிழர் கட்சி சீமான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.

அதுபோல் தமிழர் முன்னேற்றப்படையின் நிறுவனத் தலைவர் கி.வீரலட்சுமி தலைமையிலும் ரஜினி எதிராக போராட்டம் நேற்று நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று, ரஜினியை எதிர்ப்பவர்களை கண்டித்து ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, சீமான், வீரலட்சுமி ஆகியோர் உருவபொம்மையை எரிக்க ரசிகர்கள் முயன்றனர். இதையடுத்து ரசிகர்கள் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

Super Star Rajini fans protest against Seeman and Veeralakshmi

rajini fans protest

50 லட்சம் பேர் சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்றாங்களாம்.!

50 லட்சம் பேர் சிவகார்த்திகேயனை ஃபாலோ பண்றாங்களாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

siva 3m followersகடந்த 2011ஆம் ஆண்டு ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரின் படம் தொடர்பான செய்திகள் மட்டுமல்லாது, சமூகம் சார்ந்த சில பதிவுகளையும் இங்கே பதிவுட்டு வருகிறார்.

தற்போது ஆறு ஆண்டுகளில் 3 மில்லியன் ஃபாலோயர்கள் அதாவது 30 லட்சம் பாலோயர்கள் ட்விட்டரில் கிடைத்துள்ளனர்.

இது தமிழ் நடிகர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது… ‘இப்போது எனது பாலோயர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை எட்டியுள்ளது.

எனவே என் சகோதர, சகோதரிகளுக்கும் நல விரும்பிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் பேஸ்புக் பக்கத்தில் சுமார் 20 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தம் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தை சேர்த்து சிவகார்த்திகேயனுக்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர்.

Sivakarthikeyan has 3 million followers in Twitter and 2 Million in Facebook

சூர்யா-சத்யராஜ்-சரத்குமார்-விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்

சூர்யா-சத்யராஜ்-சரத்குமார்-விவேக் உள்ளிட்ட 8 பேருக்கு பிடிவாரன்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya Vivek Sathyaraj Sarathkumarகடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர், நடிகைகள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த நடிகர், நடிகைள் ஆஜராவதில்லை.

இன்று (மே 23, 2017) இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவை பிறப்பித்தார்.

Arrest warrant for 8 actors including Suriya Vivek Sarthkumar Sathyaraj

அனுஷ்கா-நயன்தாரா-தமன்னா; இவர்களில் யார் சீதை.?

அனுஷ்கா-நயன்தாரா-தமன்னா; இவர்களில் யார் சீதை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anushka Nayanthara Tamannahதமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் ரூ. 500 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் ராமாயணம்.

இப்படத்தை அல்லு அரவிந்த், மது மந்தீனா மற்றும் நமீத் மல்கோத்ரா ஆகிய 3 தயாரிப்பாளர்கள் தயாரிக்க உள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் 3 பாகங்களாக தயாராகவுள்ள இதில் அல்லு அர்ஜீன் நாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சீதை கேரக்டருக்கு அனுஷ்கா, தமன்னா, நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம்.

இவர்களில் ஒருவர் ஒப்பந்தம் ஆனவுடன் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

வருகிற அக்டோபர் மாதம் முதல் இதன் சூட்டிங் துவங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Among Anushka Nayanthara Tamannah who will act as Sita in Ramayana 3d movie

ரஜினி-விஜய்யின் சென்னை ரெக்கார்டுகளை முறியடித்த பாகுபலி2

ரஜினி-விஜய்யின் சென்னை ரெக்கார்டுகளை முறியடித்த பாகுபலி2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali 2தமிழ் சினிமாவின் முக்கிய பகுதியாக சென்னை விளங்கி வருகிறது.

சென்னையில் இதுவரை எந்த படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னையில் முதன்முறையாக ரூ 10 கோடியை தாண்டிய படமாக ரஜினியின் எந்திரன் படம் அமைந்தது.

பின்னர் மீண்டும் ரஜினியின் கபாலி படமே ரூ 12 கோடி வசூலை அள்ளி முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தற்போது அனைத்து சாதனைகளையும் முறியடித்து பாகுபலி 2 ரூ. 15 கோடியை வசூலித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதனிடையில் விஜய் நடித்த தெறி ரூ. 11 கோடியை வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி2 படம் உலகளவில் இதுவரை ரூ. 1600 கோடிக்கும் மேல் வசூலித்து, 2000 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Baahubali 2 broke records of Kabali and Theri movie in Chennai Box Office

விஜய்-சாய் பல்லவி இணையும் படத்தின் ஹீரோ இவர்தான்

விஜய்-சாய் பல்லவி இணையும் படத்தின் ஹீரோ இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Naga Shourya romance with Sai Pallavi for Karu movie directed by Vijayஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் படத்தை இயக்கியுள்ளார் விஜய்.

இதனையடுத்து ‘கரு’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதில் ‘பிரேமம்’ பட புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி நாயகியாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தின் நாயகனாக நடிக்க நாகசெளரியா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகவுள்ள இப்படத்தின் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Naga Shourya romance with Sai Pallavi for Karu movie directed by Vijay

More Articles
Follows