ஜெயலலிதா வீட்டருகே புதிய வீடு கட்டும் ரஜினி மருமகன் தனுஷ்

தமிழகத்தில் பிரபலமான இடங்கள் பல இருந்தாலும் போயஸ் கார்டன் பகுதிக்கு தனிச்சிறப்பு உண்டு.

இங்கு தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடுகள் உள்ளன.

தற்போது ஜெயலலிதாவின் வீடு அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷும் இந்த போயஸ் கார்டன் பகுதியில் குடியேறவுள்ளார்.

போயஸ் கார்டனில் தனுஷ் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

இந்த பூஜையில் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது யாரோ ஒருவர் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super Star at Dhanush new house Bhoomi pooja in Poes Garden

Overall Rating : Not available

Latest Post