சீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்

சீமராஜா-வில் *சூப்பர் சிங்கர்* செந்தில் கணேஷுக்கு வாய்ப்பளித்த இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Super Singer fame Senthil Ganesh croon for Immans music in Seemarajaஓரிரு தினங்களுக்கு முன் விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 6வது சீசன் இறுதிச் சுற்று நடைபெற்றது.

இதில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார் நாட்டுப்புற கலைஞரான செந்தில் கணேஷ்.

இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் போதே இவர் மிக பிரபலமானார்.

இவருக்கு தன் இசையில் பட ஒரு வாய்ப்பு அளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் ஒரு பாடலை பாட வாய்ப்பளித்திருக்கிறார் இசையமைப்பாளர் இமான்.

இப்படத்தில் நாட்டுப்புற பாடலை அவர் பாடியுள்ளார் என்றும் அந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார் என இமான் தெரிவித்துள்ளார்.

Super Singer fame Senthil Ganesh croon for Immans music in Seemaraja

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்

கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை “ஹாட்”டாக்கும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Pauls recent hot pictures goes viralதங்களை பற்றி செய்திகள் எதுவும் வரவில்லை என்றால் தங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை நடிகைகள் வெளியிடுவது வழக்கம்.

அது வைரலாக அவர்களை பற்றி ஏதாவது செய்திகள் வெளியாகும். இதனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இது போல் நடிகை அமலா பாலும் அவ்வப்போது தன் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிடுவார்.
சில காலம் அதை நிறுத்தி வைத்திருந்தார்.

தற்போது மீண்டும் அதுபோன்ற படங்களை வெளியிட தொடங்கிவிட்டார்.

அண்மையில் இவர் வெளியிட்ட படம் ஒன்றில் செம கவர்ச்சியாக இருக்கிறார். எனவே அவரது ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

இவர் தற்போது ரட்ச‌சன், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Amala Pauls recent hot pictures goes viral

தனுஷ்–சசிகுமார் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு

தனுஷ்–சசிகுமார் இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New title logo will be release for ENPT on 20th July 2018கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’.

நீ….ளமான படம் போல நீண்ட நாட்களாக உருவாகுகிறது. பின்னர் நிற்கிறது. பின்னர் தொடங்குகிறது.

கவுதம் மேனனின் ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இணைந்து தயாரிக்கின்றனர்.

முதன்முறையாக கவுதம் மேனன் படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை முன்பே வெளியிட்டு விட்டனர். இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க, ராணா டகுபதி, சுனைனா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

நடிகரும், இயக்குநருமான சசிகுமார் இந்த படத்தில் தனுசுக்கு அண்ணனாக சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இதன் கடைசி கட்ட படப்பிடிப்பு நேற்று இரவு துவங்கியிருப்பதாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் – சசிகுமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளனர்.

இந்த வாரத்திற்குள் மீதமுள்ள காட்சிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் புதிய டைட்டில் லோகோவை வருகிற ஜூலை 20-ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

New title logo will be release for ENPT on 20th July 2018

ரஜினி படத்தில் இறைவி குழுவை இணைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி படத்தில் இறைவி குழுவை இணைக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anjaliதான் இயக்கிய அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தில் நடித்த கலைஞர்களை ரஜினியின் கபாலி படத்தில் நடிக்க வைத்தார் ரஞ்சித் என்பதை பல முறை பார்த்தோம்.

அவரது வரிசையில் கார்த்திக் சுப்பராஜீம் தன் படத்தில் நடித்த கலைஞர்களை ரஜினி படத்தில் நடிக்க வைத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

ஏற்கெனவே இறைவி படத்தில் விஜய்சேதுபதியும் பாபி சிம்ஹாவும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.

தற்போது அஞ்சலியும் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம்.

நடிகரில் சூர்யாவை மட்டுமே பாஃலோ செய்யும் துணை ஜனாதிபதி

நடிகரில் சூர்யாவை மட்டுமே பாஃலோ செய்யும் துணை ஜனாதிபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor suriyaட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தில் தனக்கு பிடித்த நபர்களை பாஃலோ செய்வது வழக்கம்.

பிடிக்காதவர்களை ப்ளாக் செய்துவிடலாம் என்ற விதிமுறையும் அதில் உள்ளது.

இந்நிலையில் பாஜக.வை சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார்.

அவர் இதுவரை 37 பேரை மட்டுமே பாலோ செய்கிறார்.

பெரும்பாலும் பிரதமர் மோடி, தமிழிசை, எஸ்வி சேகர், ஈஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களையே அவர் பாலோ செய்கிறார்.

ஆனால் நடிகர்களில் நடிகர் சூர்யாவின் ட்விட்டரை மட்டுமே அவர் பாலோ செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி இருந்தார்.

மீண்டும் சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூன் பறந்தார் சூப்பர் ஸ்டார்

மீண்டும் சூட்டிங்கில் கலந்துக் கொள்ள டேராடூன் பறந்தார் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthமுதன்முறையாக கார்த்திக் சுப்பராஜ் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றது.

இதனை முடித்து விட்டு சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பினார்.

இங்கு ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். பத்திரிகையாளர்களை சந்தித்தார். சிறுவன் யாசினை அழைத்து பாராட்டினார்.

இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்புக்காக டேராடூன் சென்றுள்ளார்.

இந்த 2ஆம் கட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதியும் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

More Articles
Follows