இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு.. – சுந்தர் பிச்சை

sundar pichaiவருகிற 2021 முதல் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

Google For India 2020 அதாவது… 2020-ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சியில் இன்று அவர் பேசினார்.

அப்போது… கூட்டு முதலீடு மற்றும் செயல்பாட்டு, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம்” என தெரிவித்தார்.

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் சுந்தர் பிச்சை உரையாடிள்ளார்.

அப்போத சுந்தர் பிச்சையுடன் தகவல் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்து உரையாடியதாக பிரதமர் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இவையில்லாமல் சுமார் 2.6 கோடி சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிஸினஸ்-க்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post