ப்ப்ப்பா… இன்னா ஒரு ஆட்டம்..; கமலுக்கு ஓட்டு போட நடுரோட்டில் மகள்கள் ஆட்டம்

ஏப்ரல் 6ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரின் அண்ணன் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அதுபோல் கமலின் 2வது மகளும், நடிகையுமான அக்ஷராஹாசனும் பிரச்சாரம் செய்தார்.

அப்போது கமலுக்கு ஓட்டு போட சொல்லி அக்ஷராவும் சுஹாசினியும் நடுரோட்டில் குத்தாட்டம் போட்டனர்.

அதனை வீடியோ படம் பிடித்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது இப்போது வைரலாகி வருகிறது.

Suhashini and Aksharahassan road dance for Kamal MNM Campaign

Overall Rating : Not available

Latest Post