தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முகப்பேர் வேலம்மாள் பள்ளியின் மாபெரும் வேல்ஸ் மகா உத்சவ் 10-ஆம் ஆண்டு கலைவிழா நிகழ்வு பிப்ரவரி 29 அன்று மிகப் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றது.
இக்கலைவிழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கர்நாடக இசைக்கலைஞரும் பின்னணிப் பாடகியுமான திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் விழா நிகழ்வினைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார்.
மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் சிறப்பான இசைப் பங்களிப்பினை வழங்கிய சிறப்பு விருந்தினர், மாணவர்கள் கலைத்திறன் மட்டுமல்லாது கல்வியிலும் மேம்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
பின்னர் நடைபெற்ற கலைவிழாவில் வேல்ஸ் ராகாஸ் இசைமாணவர்கள் 70 பேர் பங்கேற்ற இசை நிகழ்வு மற்றும் வேல்ஸ் நாட்டியாலயா மாணவர்கள் 501பேர் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் வேலம்மாள் மாணவர்கள் அரங்கேற்றிய ஆரோக்கியம் தரும் யோகாசனா நிகழ்வு நடைபெற்றது.மற்றும் 701 ஓவிய மாணவர்களின் கண்கவர் ஓவியங்கள் இடம்பெறும் மாபெரும் ‘வர்ணா ‘ ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.
வேலம்மாள் பள்ளி நடத்திய இம்மாபெரும் கலைவிழா நிகழ்வு மாணவர்களின் பல்கலைத் திறன்கள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
Sudha Ragunathan participated in Vels Maha Utsav 2020