கடந்த ஆட்சியில் போலீஸ் அராஜகம் குறித்து பேச ரூ 2 கோடி பேரம்.: சுசீத்ரா சீக்ரெட்ஸ்

suchitraசாத்தான்குளம் என்ற ஊரில் பொது முடக்கத்தின் போது மொபைல் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அவர்களின் கொடூர தாக்குதால் இருவரும் மரணமடைந்தனர்.

இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.

திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முதல் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பாடகி சுசித்ரா இந்த கொடூர தாக்குதல் குறித்து ஆங்கிலத்தில் பேசி வீடியோவாக பதிவிட்டார்.
இதனையடுத்து இந்த வீடியோ இந்தியா முழுக்க வைரலானது.
இந்த நிலையில் மற்றொரு போலீஸ் தாக்குதல் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை சுசித்ரா வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆட்சியின்போது இதேபோன்று ஒரு போலீஸ் அராஜகம் குறித்த சம்பவம் நடந்தபோது என்னிடம் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தனக்கு ரூபாய் 2 கோடி வரை பேரம் பேசப்பட்டது என சுசித்ரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் என்ன விவகாரம்? பேரம் பேசியவர்கள் யார்? என்ற தகவல்கள் இல்லை.

Overall Rating : Not available

Latest Post