ஆக்சன் அகாடமியை தொடங்கும் ஆக்சன் பிரதர்ஸ் அன்பறிவ்

ஆக்சன் அகாடமியை தொடங்கும் ஆக்சன் பிரதர்ஸ் அன்பறிவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Action Brothers Anbariv going to launch Action Academyகார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்புறிவ்.

அதனையடுத்து இதுவரை 95க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள்.

அண்மையில் வெளியாகி இந்தியா முழுவதும் வெற்றிக்கரமாக ஒடிக்கொண்டிருக்கும் ‘கே ஜி எஃப் ’என்ற படத்தில் இவர்களது உழைப்பை பாராட்டதவர்களேயில்லை.

இவர்களின் அண்மை பேட்டியில் அவர்கள் தெரிவித்தாவது…

கே ஜி எஃப் வெற்றியில் உங்களின் பங்களிப்பு குறித்து…?

முதலில் அனைவருக்கும் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொருவரும் தங்களின் கனவுகளையும், இலட்சியங்களையும் அடைய எங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்கிறோம்.

கே ஜி எஃப் படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதை களம் என்ற ஒரு விசயம் எங்களை கவர்ந்தது. அதன் பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ் சார், இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்தது.

இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக கிட்டத்தட்ட முப்பத்தைந்து நாள் முதல் நாற்பது நாள் வரை படபிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகம் அளித்துக் கொண்டேயிருந்தனர்.

திரைக்கதையில் ஆக்சன் காட்சிகள் வரும் போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது. அதற்கேற்ற வகையில் நன்றாக திட்டமிட்டு, பணியாற்றினோம். ஒரு ஆக்சன் காட்சியை படமாக்கும் போது முதலில் நடிகர்கள் மற்றும் சண்டைக் கலைஞர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து கொண்டோம்.

பிறகு கேமரா கோணங்களையும், அதற்கு தேவையான விசயங்களையும் ஒருங்கிணைத்து பணியாற்றினோம். அதனால் தான் எங்களால் திட்டமிட்ட நாள்களுக்குள் அதாவது முப்பத்தைந்து நாள்களுக்குள் ஆக்சன் காட்சிகளை படமாக்க முடிந்தது.

இந்த கதை பீரியட் ஃபிலிம் என்பதால் ஆக்சன் காட்சிகளுக்காக ஏதேனும் ரெஃபரென்ஸ் எடுத்தீர்களா?

இல்லை. முழுக்க முழுக்க எங்களுடைய இமேஜினேசன் தான். கதை நிகழும் காலகட்டத்தையொட்டிய பல படங்களின் ஆக்சன் காட்சிகள் Rawவாகத்தான் இருந்தது. அதனை தற்போது காட்சிப்படுத்த இயலாது.

அதனால் இயக்குநர் கொடுத்த சுதந்திரத்தையும், நாங்கள் இருவரும் எங்களுக்குள் விவாதித்தும், திரைக்கதையின் தேவையை மனதில் வைத்துத் தான் ஆக்சன் காட்சிகளை உருவாக்கினோம்.

அதே போல் ஆக்சன் காட்சிகள் Mass ஆக இருக்கவேண்டும் என்று இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதிலும் தென்னிந்திய ரசிகர்களின் விருப்பதையும் மனதில் வைத்து தான் ஆக்சன் காட்சிகளை வடிவமைத்தோம்.

பொதுவாக ஆக்சன் காட்சிகளில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகமாக இருக்குமே.. இந்த படத்தில் எப்படி?

இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு. கேமராமேனின் அயராத உழைப்பால் தான் இதனை சாத்தியப்படுத்த முடிந்தது. இந்த விசயத்தில் ஹீரோ யஷ்ஷின் ஈடுபாடு அபாரம்.

தான் ஒரு ஹீரோ என்பதையே மறந்து, எங்களிடம் ஆக்சன் காட்சியில் எப்படி இருக்கவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்பதை கேட்டு கேட்டு நடிப்பார். 90 சதவீதத்திற்கும் மேல் அவரே தான் ஆக்சன் காட்சிகளில் நடித்தார்.

இந்த படத்தில் சவாலாக அமைந்த ஆக்சன் சீன்..?

சுரங்கத்தில் நடைபெற்ற சண்டைக்காட்சியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர். முதலில் இவர்கள் அந்த இடத்தைப் பற்றிய பயத்தை போக்கினோம்.

அத்துடன் அவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த விசயத்தில் முழு அக்கறை எடுத்துக் கொண்டோம். இதற்கும் தயாரிப்பாளருக்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

அதே போல் சுரங்கத்திற்குள் அமைக்கப்பட்ட ஆக்சன் சீனில் போதிய வெளிச்சம் இல்லை என்றாலும் ஒளிப்பதிவாளர் மிகவும் சிரமத்திற்கு இடையே குறைவாக லைட்டிங் செய்து அதனை பிரமிப்பாக திரையில் காண்பித்தார்.

அடுத்து என்ன படங்களில் பணியாற்றுகிறீர்கள்?

கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணியாற்றுகிறேன். மாநகரம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து இயக்கவிருக்கும் படத்தில் பணியாற்றுகிறேன்.

ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்திலும் வேலை செய்யவிருக்கிறேன்.

தொடர்ந்து சண்டை பயிற்சி இயக்குநர்களாகவே இருக்கவிருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?

சென்னையில் ஆக்சன் அகாடமி ஒன்றை தொடங்கவிருக்கிறோம். அதாவது ஆக்சனுக்கான ஸ்டூடியோ அது. இங்கு வந்து ஆக்சனுக்காக உருவாக்கிய சண்டை காட்சிகளை ஒத்திகை பார்க்கலாம்.

இதன் மூலம் படபிடிப்பின் போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டு சண்டை காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்சன் காட்சியில் எப்படி நடிக்கலாம். அதற்கான தொழில்நுட்பத்தையும் கற்பிக்கவிருக்கிறோம். அத்துடன் பாதுகாப்பாக சண்டை காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்கவிருக்கிறோம்.

சண்டை கலைஞர்கள், சண்டை பயிற்சி இயக்குநர்கள், நடிகர்கள், ஆக்சன் காட்சியில் பணியாற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் என பலருக்கும் இந்த அகாடமி பயனுள்ளதாக இருக்கும். workshop நடத்தவிருக்கிறோம்.

ஒரு துறையில் சிறந்து விளங்கும் வெளிநாட்டு கலைஞர்களை அழைத்து வந்து இங்கு ஆர்வமாக இருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கவிருக்கிறோம்.

உதாரணத்திற்கு ஸ்கேட்டிங் ஃபைட், சைக்கிளிங் ஃபைட். இந்தியாவைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, கொரியா, சீனா போன்ற நாடுகளில் எல்லாம் இது போன்ற ஆக்சன் அகாடமிகள் இருக்கின்றன. இந்தியாவிலும் இதனை தொடங்கவேண்டும் என்று எண்ணி, 2019 ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்குகிறோம்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் உதவியது ஒரு காலம், இசை உதவியது ஒரு காலம். படத் தொகுப்பு, ஒளிப்பதிவு உதவியது ஒரு காலம்.

தற்போது ஒரு படத்தின் வெற்றிக்கு சண்டை பயிற்சி இயக்குநர்களும் உதவுகிறார்கள் என்பது கே ஜி எஃப்பின் வெற்றி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன் பின்னணியில் கடுமையான உழைத்த அன்பறிவ் போன்றவர்களின் புதுமையான சிந்தனைக்கு திரையுலகமும், ரசிகர்களும் கைகொடுத்து ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது மட்டும் உறுதி.

Action Brothers Anbariv going to launch Action Academy

புத்தாண்டு விருந்தாக சூர்யா-மோகன்லாலின் காப்பான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

புத்தாண்டு விருந்தாக சூர்யா-மோகன்லாலின் காப்பான் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriyas 37 movie Titled Kaappaan First look Releasedஅயன், மாற்றான் ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி. ஆனந்த் கூட்டணி இணைந்துள்ளது.

இதுநாள் வரை சூட்டிங் தொடர்ந்து நடைபெற்றாலும் படத்தின் தலைப்பு வெளியாகவில்லை.

எனவே 3 தலைப்புகளை அறிவித்து படத்தலைப்பை ரசிகர்களை வாக்கு அளித்து தேர்ந்தெடுக்கலாம் என அறிவித்தனர்.

அதன்படி இன்று 2019 புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் காப்பான் என்ற தலைப்பை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Suriyas 37 movie Titled Kaappaan First look Released

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்

தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paulபுதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் இந்த நாயகியை மையப்படுத்திய படத்தில் தடய அறுவை சிகிச்சை நிபுணராக அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயக கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம் இது தான். ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை.

மேலும், இந்த படம் கேரள முன்னாள் காவல்துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் அவர்கள் கையாண்ட ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அனூப் பணிக்கர் மற்றும் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் 6 மாதங்கள் ஆழமாக கலந்துரையாடி கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவ கல்லூரிகளையும் கூட இந்த இருவரும் பார்வையிட்டனர்.

சுவாரஸ்யமாக, ‘ராட்சசன்’ படத்தின் படத்தொகுப்பாளர், கலை இயக்குனர், சண்டைப்பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்படும். ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2019ல் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மொத்த படமும் படமாக்கப்பட இருக்கிறது.

ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்

ரங்காவிற்கு டப்பிங் பேசி முடித்த சிபிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sibiraj in rangaநடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார்.

படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் படத்தை முடித்துக் கொடுக்கும் இயக்குனர் கிடைப்பது வரம். படத்தின் இறுதி வடிவம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது, அதை பார்க்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் இறுதி வடிவத்தை பார்க்கும்போது ஒரு பார்வையாளராக எனக்கும் ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் படத்தின் முன்னேற்றத்திற்கு மிகுந்த கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்த இயக்குனர் வினோத்துக்கு தான் எல்லா பாராட்டுக்களும் சாரும்” என்றார்.

படத்தின் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் படப்பிடிப்பு முழுவதும் ஆதரவாக இருந்தனர் என ஒப்புக்கொள்கிறார் தயாரிப்பாளர். “திறமையான நடிகர்கள் என்பதை தாண்டி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளை மனதில் வைத்து நடிக்கும் நடிகர்களுடன் பணியாற்றுவது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நல்லது. இந்த முறையில், ‘ரங்கா’ படக்குழு என் நலனையும் கருத்தில் கொண்டது. குறிப்பாக, சிபிராஜ் மற்றும் நிகிலா விமல் ஆகியோர் காஷ்மீரின் கடுமையான பனிப்பொழிவு சூழலிலும், படப்பிடிப்பு குறித்த நேரத்தில் முடிவடைய தங்களால் முடிந்ததை செய்தனர்” என்றார்.

சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர். ஜனவரி 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இசையை வெளியிடவும், பிப்ரவரியில் படத்தை உலகமெங்கும் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

நயன்தாராவின் ஐரா படபிடிப்பு நிறைவு

நயன்தாராவின் ஐரா படபிடிப்பு நிறைவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

airaaஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே நயன்தாராவின் ‘ஐரா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. நயன்தாராவின் இரட்டை கதாபாத்திரங்களை பார்க்கும் போது ஆர்வம் மிகவும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்னவென்பதை பற்றி நிறைய வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது.

“நயன்தாரா மேடம் உடன் பணிபுரிவது எப்போதுமே எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் ஒரு மென்மையான அனுபவம், குறிப்பாக எனக்கு. மேலும், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான அறம் படத்தில் இருந்து ஐராவில் இன்னும் பெருகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ஐராவிற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில், அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நட்சத்திரமாக இருந்தாலும், தோற்றத்தை மட்டும் பாராமல், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் அவரது உழைப்பு தான் தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கியிருக்கிறது” என்றார் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ்.

இயக்குனர் கேஎம் சர்ஜூன் பற்றி அவர் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாரா மேடமிற்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார். எனெனில் இது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் திரைப்படம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன கலந்துரையாடினார்களோ அதை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளனர்.

ஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘அவள்’ பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் மற்றும் இயக்கம் கே. எம் சர்ஜூன்.

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் 3D அடல்ட் படம்

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் 3D அடல்ட் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babu and yaashikaதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

“இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது. ஸ்கிரிப்ட் எழுதும்போது நான் கவனத்தில் வைத்திருந்த முக்கிய விஷயம், யாரையும் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ கூடாது என்பது தான்.

வேடிக்கையான மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் அச்சமூட்டும் விஷயங்களும் படத்தில் இருக்கும். மேலும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் 3D மூலம் திகிலான மற்றும் பயமுறுத்தும் புதிய அனுபவத்தை வழங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம்” என்கிறார் விஷுவல் கம்யூனிகேஷன் பட்டதாரியான அறிமுக இயக்குனர் விநாயக் சிவா. அவர் தொடர்ந்து கூறும்போது, “சில பிரபல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

கூடிய வரைவில் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். இப்போதைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோரும் அவருடன் இணைந்து நடிக்கிறார்கள்” என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் பணியாற்றிய பிரபலமான தொழில்நுட்ப வல்லுநர்கள் சிலர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த படம் 3Dயில் படம்பிடிக்கப்படும் முதல் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஜனவரி மாதத்தின் மத்தியில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

More Articles
Follows