ஜோதிகாவின் “காற்றின் மொழி” படத்திற்காக டப்பிங் பேசிய சிம்பு

STR dubs for his portions in Jyotika starrer Kaatrin Mozhiராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி ‘ படத்தில் நடிகர் சிலம்பரசன் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

நேற்று இப்படத்திற்கு சிம்பு டப்பிங் பேசி முடித்தார். பெரும் எதிர்பார்புக்குள்ளான இப்படத்தில் ஜோதிகா நடிக்க பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், S விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ளார்கள் .

இப்படத்தில் FM ரேடியோ ஷோ ஒன்றில் கதாநாயகி ஜோதிகாவுடன் திரைப்பட நட்சத்திரமாக சிம்பு தோன்றுவது போல் காட்சி இடம் பெறுகிறது.

அவர் வரும் சீன்களை கேட்டதும் சிம்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. கண்டிப்பாக நடிக்கிறேன் என்று நடித்துக்கொடுத்தார் சிம்பு.

டப்பிங் பேசி முடித்த சிம்பு தன்னுடைய காட்சி சிறப்பாக வந்துள்ளதாக என்னை அழைத்து கூறினார். அவர் இந்த படத்தில் பணியாற்றியது படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் இந்த படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி என்றார் தாயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

காற்றின் மொழி போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வருகிற அக்டோபர் 18 ஆயுத பூஜை சிறப்பு வெளியீடாக வெளியாகவுள்ளது இத்திரைப்படம். அக்டோபர் 18 நாயகி ஜோதிகாவின் பிறந்த நாள் என்பது கூடுதல் தகவல்.

STR dubs for his portions in Jyotika starrer Kaatrin Mozhi

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

தனஞ்செயன் தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில்…
...Read More
ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம்…
...Read More
‘காற்றின் மொழி’ படத்தின் இசையமைப்பாளர் A.H.காஷிஃப்…
...Read More

Latest Post