விளம்பரங்களில் முதலாளியே நடிக்கலாம் என ஆரம்பித்தவர்.; வசந்தகுமார் மறைவுக்கு சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த காங் எம்.பி. தொழிலதிபர் வசந்தகுமாருக்கு சிம்பு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்…

உழைக்கும் வர்க்கத்தின் உதாரணம். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவது என்பதை எப்படியாவது இவரிடமிருந்து படித்துக் கொள்ள வேண்டும் தன்னம்பிக்கையற்ற ஒவ்வொருவரும்.

விளம்பரங்களில் பிராண்டின் முதலாளியே நடிக்கலாம் என துவக்கி வைத்தவர்.

கன்னியாகுமரி மக்களின் முன்னேற்றத்தை கனவு கண்டவர். அதற்காக உழைத்தவர்.

குடும்பத்தின் மீது செலுத்தும் தீவிர அன்பை வலிமையாக்கிக் கொண்டவர்.

சூட்ட நிறைய புகழாரங்கள் உண்டு. ஆனால் இவ்வளவு விரைவில் அவரை இழப்போம் என எண்ணியதே இல்லை.

ஏற்க முடியாத இழப்பு இது. நண்பன் விஜய் வசந்தின் குடும்பம் இந்த பேரிழப்பை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.

திரு வசந்த குமார் அவர்களை இழந்துவாடும் குடும்பம், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், தொகுதி மக்கள் என அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.

அஞ்சலிகள்!

– சிலம்பரசன் TR

BREAKING கொரோனா அன்லாக் 4; செப் 7ல் மெட்ரோ… செப். 21ல் தியேட்டர்; தளர்வுகள் இருக்கா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’கொரோனா அன்லாக் 4.o: செப். 30ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கில் 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு.. அந்த தளர்வுகள் என்ன..?

நாடு முழுவதும் செப்.7 ஆம் தேதி முதல் மெட்ரோ சேவைகள் தொடங்குகிறது

செப்.21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார, அரசியல் நிகழ்ச்சிகளை 100 பேருடன் நடத்த மத்திய அரசு அனுமதி

9-12 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்கள் வழிகாட்டுதல் பெற அனுமதிக்கலாம்; ஆனால் கட்டாயமல்ல.

செப்.30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் – மத்திய உள்துறை

திறந்த வெளி திரையரங்கம் (டிரைவிங் தியேட்டர்) செப்.21ம் தேதி முதல் செயல்படும்.

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் அளவில் ஊரடங்கு பிறப்பிக்க தடை. மேலும் மாநில, மாவட்ட, கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது எனவும் உத்தரவு.

போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது. மத்திய அரசு மாநிலங்களுக்குள் மக்கள் சென்று வர இ பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது.

நீச்சல் குளங்கள், சினிமா தியேட்டர்கள் செப்டம்பர் இறுதி வரை மூடப்பட்டிருக்கும்.

ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட வெப் சீரிஸ்..; சிக்குவாரா சீயான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ ஆன்லைன் இணையத்தளங்கள் நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர்.

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போட்டிக் போட்டுக் கொண்டு பெரிய படங்களை வாங்கி ஆன்லைன் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

பொன்மகள் வந்தாள், பெண்குயின், ஒன்பது குழி சம்பத் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.

எவரும் எதிர்பாராத வகையில் தன் சூரரைப் போற்று படத்தை அக்டோபர் 30ல் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று பிரம்மாண்ட வெப்சீரிஸ் தொடரை தயாரிக்கவுள்ளதாம்.

இதில் நடிக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சீயான் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினியே கால்ஷீட் கொடுக்க ரெடியான இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கி பெரும் பாடுபட்டு 5 வருட போராட்டத்திற்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரியில் ரிலீஸ் செய்தார்.

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தேசிங்கு பெரியசாமியை வெகுவாக பாராட்டி தனக்கும் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான கதையை தேசிய பெரியசாமி எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் ’டாக்டர்’ ஆகிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

‘தனி ஒருவன் பார்ட் 2’க்கு சூப்பர் அப்டேட் கொடுத்த மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படம் தனி ‘தனி ஒருவன்’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடியாகும் என ரசிகர்கள் கடந்த 5 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.

தற்போது இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளாகிறது.

இந்த நிலையில் இதில் நடித்த ஹரிஷ் உத்தமன், ‘தனி ஒருவன்’ தனது பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்படியே ‘தனி ஒருவன் 2’ குறித்து மோகன்ராஜாவிடம் அப்டேட் கேட்டு இருந்தார்.

“தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட் விரைவில் வெளியாகும்” என மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றுக்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல.

சினிமா துறையினரும் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடிகர்

வசந்த் அண்டு கோ உரிமையாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஐசரி கணேஷுக்கு கொரோனா தொற்று பாதிப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுகுறித்த நம் தரப்பில் விசாரித்தபோது… அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஐசரி கணேஷ் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். மேலும் தேவி, போகன், எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் தரப்பை எதிர்த்து பலமான எதிரணியை உருவாக்கியுள்ளார் ஐசரி கணேஷ் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows