தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா தங்களது 5வதாக படைப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு உடன் இயக்குநர் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
சென்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான இந்த படம் உருவாகவுள்ளதாம்.
ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
அடுத்தாண்டு 2021-ம் படத்தைத் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளனர்.
STR 39 cast and crew details
