தீராத திருட்டுக் கதை பிரச்சினைகள்; சர்கார்ரை அடுத்து பிகிலும் சிக்கியது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தின் கதை திருட்டு வெட்ட வெளிச்சமாக பின்னர் ஒப்புக் கொண்டு படத்தின் தலைப்பை கதாசிரியர் பெயரை போட்டனர்.

தற்போது விஜய் நடித்து வரும் பிகில் படமும் திருட்டுக் கதை பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில், ஏஆர். ரஹ்மான் இசையில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பிகில்’.

இப்படத்தின் கதை தன்னுடையது என கே.பி. செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தள்ளார்.

மேலும் படத்திற்கு தடையும் கேட்டிருந்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப் போவதாக கே.பி. செல்வா அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

“அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !!

அவங்க சொன்னதெல்லாம் ‘காப்பிரைட்’ கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க” அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு ,

அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல திரும்ப பெறும் மனு தாக்கல் பண்ண !! அதுக்கு நீதிபதி அத ஏற்றுக்கொண்டு பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !!

இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் தாக்கல் பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல ஏஜிஎஸ் தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் திரும்ப பெறும் மனு பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !!

நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !!,” எனப் பதிவிட்டுள்ளார்.

Story theft case against Atlee for Bigil

‘அசுரன்’ ஆடியோ வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த தாணு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து 4வது முறையாக வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள படம் அசுரன்.

இப்படத்தில் தனுஷ் 3 கெட் அப்புகளில் நடித்து வருகிறார்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

மலையாள நடிகை மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க பசுபதி, பாலாஜிசக்திவேல், சுப்ரமணியம் சிவா, ஆடுகளம் நரேன், பவன், அம்மு அபிராமி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

கலைப்புலி தாணு என்றாலே பிரம்மாண்டம்தானே…

Asuran audio launch grand function updates

சூட்டிங் முடியும் முன்பே வியாபாரத்தில் கலக்கும் ‘காக்கி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமிரு பிடிச்சவன் மற்றும் கொலைக்காரன் படங்களை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் படம் காக்கி.

ஏ. செந்தில்குமார் இயக்கி வரும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்ய அவ்கத் இசையமைத்துள்ளார்.

ஜீன் மாதம் இதன் முதற்கட்ட சூட்டிங் தொடங்கியது.

அக்டோபர் மாதத்திற்குள் படத்தின் ஒட்டு மொத்த சூட்டிங்கும் நிறைவு பெறும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்டு இப்பட உரிமைகளை வாங்கியுள்ளது.

அடுத்த ஆண்டு 2020 ஜனவரியில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

Vijay Antonys Khaki movie trade updates

திருட்டு கதையில் சிக்கிய விஜய்யின் ‘பிகில்’ மீதான வழக்கு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது.

இப்படம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

கே.பி. செல்வா என்பவர் ‘பிகில்’ என்று தற்போது பெயரிடப்பட்டிருக்கும் ‘தளபதி 63’ படம், எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தனது கதையின் பதிப்புரிமையை மீறுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அவ்வழக்கில், பிகில் படத்தின் படப்பிடிப்பு மற்றும் திரையிடலுக்கு தடை கோரியிருந்தார்.

இயக்குனர் அட்லியின் சார்பாக அவரது வழக்கறிஞர்கள் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சாரதா விவேக், மற்றும் தயாரிப்பாளர்கள் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் இவ்வழக்கை எதிர்த்து வாதிட்டு, வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார்கள்.

இயக்குனர் அட்லியின் சார்பில் கடுமையான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், தோல்வியை உணர்ந்த கே.பி.செல்வா, வழக்கைத் திரும்ப பெறுவதற்கு அனுமதி கோரியும், புதிதாக ஒரு வழக்கு தொடுக்க உரிமை கேட்டும், விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்தார்.

வழக்கை திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ் பெற்றதன் பேரில், தள்ளுபடி ஆனது.

கிட்டத்தட்ட பெரிய படங்கள் அனைத்துமே கதை திருட்டு என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகும் இக்காலத்தில், பெரிய படங்கள் மற்றும் பெரிய திரை நட்சத்திரங்களின் புகழ் வெளிச்சத்தில், கொஞ்ச நேரம் உலா வரத்துடிக்கும் அனைத்து விளம்பர பிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது இந்த தீர்ப்பு.

Vijays Bigil movie story theft case dismissed by court

Breaking அனிருத் இசையில் தளபதி 64 & ரிலீஸ் அறிவிப்பு வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படம் விஜய்யின் 63வது படமாகும்.

இதனையடுத்து அவரது 64 படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக முன்பே தெரிவித்திருந்தோம்.

அதன்படி தற்போது முறையான அறிவிப்பும் வெளியானது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க  ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் என மிகவும் வலுவான படக்குழு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

2019 அக்டோபரில் இதன் சூட்டிங் தொடங்கவுள்ளது.

அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட உள்ளனர்.

Thalapathy 64 official announcement and release date is here

ஒருவழியா ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் தேதி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இதில் நடிகரும் இயக்குருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் ரிலீஸ் கடந்த 2 வருடங்களாக தள்ளிக் கொண்டே போனது.

தற்போது படம் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதன் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

Finally Enai Noki Paayum Thota release date is here

More Articles
Follows