‘துணிவு – வாரிசு’ மோதல்.: கதையே வெற்றியை தீர்மானிக்கும் – திருப்பூர் சுப்ரமணியன்

‘துணிவு – வாரிசு’ மோதல்.: கதையே வெற்றியை தீர்மானிக்கும் – திருப்பூர் சுப்ரமணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு படங்களும் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரையில் மோத உள்ளன .

இரு படங்களும் படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் இந்த படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

‘துணிவு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி தான் ‘வாரிசு’ படத்தையும் ஐந்து ஏரியாக்களில் வெளியிடுகிறார்.

ஆனாலும் மற்ற ஏரியாக்களிலும் தியேட்டர் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தியேட்டர் உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியன் இந்த மோதல் குறித்து தன் கருத்தை தெரிவித்தார்..

அவர் கூறியுள்ளதாவது… “அஜித் – விஜய் ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ளது.

‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எனவே இரு படங்களுக்கும் சரிசமமாக பிரித்து தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்.

அந்தப் படத்தின் கதை தான் வெற்றியை தீர்மானிக்கும்” என தெரிவித்துள்ளார்.

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ போட இணையும் ‘ஈரம்’ கூட்டணி

13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘சப்தம்’ போட இணையும் ‘ஈரம்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் அறிவழகன், முதல் பட ஹீரோ ஆதியுடன் இணையும் புதிய படம் “சப்தம்” !!

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்க, இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் ஆதி நடிக்கும் “சப்தம்” திரைப்படம் (டிசம்பர் 14, 2022) பூஜையுடன் துவங்கியது.

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன்.

திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.

ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார்.

ஈரம் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘ஈரம்’ படம் மூலம் மாபெரும் வெற்றியை தந்த அறிவழகன், ஆதி வெற்றிக் கூட்டணி இப்புதிய படத்தில் இணைகிறது.

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து தயாரிக்கும் “சப்தம்” படத்தை திரைக்கதை எழுதி இயக்குகிறார் இயக்குநர் அறிவழகன். ஈரம் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில், ரசிகர்களை உறைய வைக்கும் ஹாரர் திரில்லராக இப்படம் உருவாகவுள்ளது.

‘சப்தம்’ படத்தில் பணியாற்றவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

சிம்பு நடித்த பத்து தல இந்த ரிலீஸ் தேதிக்கு தயாராகிறதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து தல டிசம்பர் 14-ம் தேதி திரைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது ஆனால் நவம்பர் இறுதி வரை படப்பிடிப்பு நடந்ததால் தாமதம் ஆனது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புதிய வெளியீட்டுத் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை என்றாலும், 30 மார்ச் 2023 அன்று பத்து தல திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட குழு திட்டமிட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

சூர்யா 42 படத்தின் புதிய ஷெட்யூல் குறித்த ரெட் ஹாட் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா 42 படப்பிடிப்பின் புதிய ஷெட்யூலை தயாரிப்பாளர்கள் சென்னையில் தொடங்கினர்.

இந்த ஷெட்யூலில் சில ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் தற்போதைய ஷெட்யூலில் இருக்கிறார்.

கோவா ஷெட்யூலில் தற்காலப் பகுதிகளுக்கு திஷா பதானி யோகி பாபுவுடன் இணைந்து அதிரடி காட்சிகளில் நடித்து வருகிறார்.

இப்படம் சரித்திரம் (1000 ஆண்டுகள் பழமையான) மற்றும் சமகாலப் பகுதிகளைக் கொண்டிருக்கும் என்றும் சூர்யா முதல்முறையாக ஐந்து விதமான வேடங்களில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

‘வாரிசு’ கதை தளபதி விஜய்க்காக எழுதப்படவில்லையா? – தயாரிப்பாளர் பதில்

‘வாரிசு’ கதை தளபதி விஜய்க்காக எழுதப்படவில்லையா? – தயாரிப்பாளர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தில் ராஜு அளித்த பேட்டியில் வாரிசு படத்துக்கு விஜய் முதல் சாய்ஸ் இல்லை என்று கூறினார்.

“வம்ஷி என்னிடம் கதை சொன்னபோது, ​​இதை மகேஷ் பாபுவுடன் செய்ய விரும்பினோம், ஆனால் அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருந்தார்.

அதனால், ராம் சரனை அணுகினோம், ஆனால் அவர் எனது சொந்த பேனரின் 50வது படத்தில் பிஸியாக இருந்தார்.

“அல்லு அர்ஜுன், பிரபாஸ் கூட பிஸியாக இருந்தார்கள். பிறகு விஜய் சாரை அணுகினோம்.

விஜய் சார், அரை மணி நேரம் கதையைக் கேட்டு, ப்ராஜெக்ட்டை ஏற்றுக்கொண்டார்” என்று வாரிசு தயாரிப்பாளர் கூறினார்.

அஜித்தின் ‘பைக் உலக சுற்றுப்பயணம்’ குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை

அஜித்தின் ‘பைக் உலக சுற்றுப்பயணம்’ குறித்து சுரேஷ் சந்திரா அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் உருவான ‘துணிவு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித்.

இதனையடுத்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தை முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறாராம் அஜித்.

இந்தியாவில் கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார்.

தாய்லாந்து நாட்டிலும் பயணம் செய்தார்.

தற்போது அஜித் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை முடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தன் ட்விட்டரில்..

“நடிகர் அஜித்குமார் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் பயணித்திருக்கிறார்.

இதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயண முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவில் அவர் சென்ற இடமெல்லாம் அவருக்கு அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது.

பைக் அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்” என பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows