போலீசுக்கு அடுத்த தலைவலி.; மாணவர் மீது தாக்குதல்… மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

போலீசுக்கு அடுத்த தலைவலி.; மாணவர் மீது தாக்குதல்… மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பொது மக்கள் மீதான போலீசாரின் தாக்குதல் குறித்த செய்திகள் வலம் வருகின்றன.

தற்போது காவல்துறைக்கு அடுத்த தலைவலி வந்துள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினகிரி என்ற பகுதியில் ஒரு தம்பதியினர் டிபன் கடை நடத்தி வந்துள்ளனர்.

கடையை மூடும்படி எச்சரித்துள்ளார் அப்பகுதி காவல் உதவி ஆய்வாளர் செல்லமணி.

இதை கடைக்காரரின் மகன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த போலீசார்கள் அந்த பையனின் செல்போனை பறித்துக் கொண்டு கிளம்பினர்.

ஆனால் போலீசை வழி மறித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், மாணவனை லத்தியால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வேகமாக பரவிவிட்டது.

இதனையடுத்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோவை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மகள் முன்பு கணவரை லிப் கிஸ் அடித்த வனிதா.; கிண்டலடித்தவர்களுக்கு நக்கல் பதிலடி

மகள் முன்பு கணவரை லிப் கிஸ் அடித்த வனிதா.; கிண்டலடித்தவர்களுக்கு நக்கல் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vanitha vijayakumarவனிதா விஜய்குமாருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

பீட்டர் பால் வனிதாவுக்கு 3வது கணவர் ஆவார்.

திருமணத்தின் போது, இருவரும் மாறி மாறி லிப் கிஸ் அடித்துக் கொண்டனர். அப்போது வனிதாவின் மகள்கள் அந்த இடத்திலேயே இருந்தனர்.

முத்தம் கொடுத்த வீடியோ வைரலானது. மகள்கள் கண்முன்னே இப்படி அநாகரீமாக கிஸ் அடிப்பது சரியா? என நெட்டிசன்கள் வனிதாவை கிண்டலடித்தனர்.

இதனையடுத்து வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கார்ட்டூன் படங்களிலும், ஃபேரி டேல் புத்தகங்களிலும் இருக்கும் முத்தக்காட்சி புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.

”பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளை டிஸ்னி கார்ட்டூன், ஃபேரி டேல்ஸ் உள்ளிட்டவற்றை பார்க்க விடாதீர்கள். அதில் இந்த முத்தக்காட்சிகள் இருக்கின்றன.

ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கும் பொழுதோ, இல்லை திருமணம் செய்யும் பொழுதோ, அவர்கள் முத்தம் கொடுத்து கொள்வார்கள் என்பதை குழந்தைகள் அறியவே கூடாது” என தனது லிப் கிஸ்க்கு நக்கலாக விளக்கம் கொடுத்துள்ளார் வனிதா.

இதனிடையில் பீட்டர் பாலின் முதல் மனைவி அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என் அம்மாவுக்கு கொரோனா இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க.. அமீர்கான் உருக்கம்

என் அம்மாவுக்கு கொரோனா இருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க.. அமீர்கான் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aamir khan with his motherஉலகின் மிகப்பெரிய கொடிய வைரசாக உருவெடுத்துள்ளது கொரோனா.

இதன் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.

இதனால் உலகின் பல நாடுகளில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட கடந்த 6 மாதங்களாக இதுபோன்ற உத்தரவுகளால் உலகமே ஸ்தம்பித்துள்ளது.

இதுவரை கொரோனா நோய்க்கு தீர்வு காணப்படாததால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”என்னிடம் பணிபுரியும் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களை நன்றாக கவனித்துக் கொண்டதற்காக சுகாதாரப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இப்பொழுது என் அம்மாவை கொரோனா டெஸ்ட் அழைத்து செல்கிறேன். அவருக்கு கொரோனா இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்” என உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் அஜித்; துணை முதல்வர் பாராட்டு

கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் அஜித்; துணை முதல்வர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka Deputy CMசினிமாவில் நடிப்பை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல், பைலட், ஆளில்லா குட்டி விமானங்களை (ட்ரோன்) இயக்குவது என நடிகர் அஜித்தின் ஆர்வங்களை பட்டியல் போடலாம்.

கொரோனா காலங்களில் ட்ரோன்களை மருந்துகளை எடுத்துச் செல்லும் பறக்கும் ஆம்புலன்சாக பயன்படுத்தலாம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோனை பயன்படுத்துமாறும் நடிகர் அஜித் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி கொரோனா சிவப்பு மண்டலங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனையறிந்த கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராணயன், அஜித்தின் ட்ரோன் குழுவினரை நேரடியாக பாராட்டி உள்ளார்.

அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு “அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சரக்கு கடத்திய தாதா 87 தயாரிப்பாளர்

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சரக்கு கடத்திய தாதா 87 தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Beer and alcohol bottles seized from DhaDha87 Producers carகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் விடப்பட்டுள்ளது. இதனால் மது கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

தற்போது சில தளர்வுகளுடன் மதுக்கடைகள் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா சிவப்பு மண்டலங்களில் முற்றிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மற்ற மாவட்டங்களில் வாங்கப்படும் மது பாட்டில்களை காரில் கடத்தி செல்கின்றனர் மது பிரியர்கள்.
இதனை தடுக்க சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் வாகன சோதனைக்கு நிறுத்தினர்

கார் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த காரை பரிசோதனை செய்தனர் காவலர்கள். காருக்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.

அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்துள்ளனர் போலீஸ்.

அப்போது அவர்களை அதிர்ச்சியுள்ளாக்கும் வகையில் கார் முழுக்க பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தன.

போலீஸ் விசாரணையில் காரில் வந்தது ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் தாதா87 படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார்.

மேலும் டைம் இல்ல என்ற படத்தை தற்போது தயாரித்து வருகிறாராம்.

அந்த தயாரிப்பாளரோடு ஆனந்தராஜ் என்ற பல் டாக்டரும் இருந்துள்ளார்.

மது கடத்தல் வழக்கில் இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

சில தினங்களுக்கு முன் நடிகை ரம்யாகிருஷ்ணனும் இதுபோல தனது காரில் மது கடத்தலில் சிக்கியது தஙகளுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே காரை டிரைவரை ஜாமீனில் அழைத்து சென்றுவிட்டார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Beer and alcohol bottles seized from DhaDha87 Producers car

மெடிக்கல் மிராக்கிள்.; கொரோனாவை தடுக்க இந்தியா தயாரித்த தடுப்பூசி

மெடிக்கல் மிராக்கிள்.; கொரோனாவை தடுக்க இந்தியா தயாரித்த தடுப்பூசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Covaxin India to hold human trial of Covid 19 vaccine in July வைரஸ் கொரோனா கடந்த 6 மாதங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகளே மிரண்டு வருகின்றன.

இதை தடுக்க தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதாம்.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகையை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்.

கொரோனாவை வெல்ல காத்திருப்போம்… அதுவரை வீட்டில் இருப்போம்..

Covaxin India to hold human trial of Covid 19 vaccine in July

More Articles
Follows