எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா புதிய படத் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம் !!

SRS production‘எஸ் ஆர் எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியா’ என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனம் அண்மையில் தொடங்கப்பட்டது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் இந்த நிறுவனத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இளைஞர் எஸ்ஆர்எஸ் சபரீஷ் இந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஏற்கெனவே குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுத்துப் புகழ்பெற்ற நிறுவனம் இது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்துக்கு ‘மனிதி’ என்ற புரமோஷனல் பாடலை உருவாக்கியதும் இந்த நிறுவனம்தான். இது தவிர ஜெயாஸ் ஸ்பைசிஸ், மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கான விளம்பரப் படம் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள்தான்.

இப்போது ‘தாய் எங்கள் தமிழ்நாடே’ என்ற இசை வீடியோ – படத்தை உருவாக்கி வருகிறது இந்த நிறுவனம். நிறுவனத்தின் சிஇஓவாக உள்ள எஸ்ஆர்எஸ் சபரீஷ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழகத்தின் இயற்கை அழகு, கலை, கலாச்சாரத்தை முழுவதுமாகக் காட்டும் ஒரு முயற்சி இது. இந்த புரொஜக்ட் முழுமையடைய 5 ஆண்டுகள் ஆகும்.

‘எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் இந்தியாவின்’ அடுத்து வெப் சீரிஸ் தயாரிப்பிலும், தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளது.

2017-ம் ஆண்டுக்கான சிறந்த விளம்பரப் பட ஐடியாவுக்கான விருதினைப் பெற்றவர் சபரீஷ். வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட உள்ளது எஸ்ஆர்எஸ் புரொடக்ஷன்ஸ். இதற்கென சகல வசதிகளும் கொண்ட புதிய அலுவலகம் சென்னை முகப்பேரில் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் விதார்த், மேயாத மான் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post