சூர்யா-தனுஷ் உடன் இணைய ஆசைப்படும் ஸ்ரீதிவ்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார் ஸ்ரீதிவ்யா.

இந்த ஒரே படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பாப்புலர் ஆனார்.

இதனையடுத்து விஷால், விக்ரம் பிரபு, கார்த்தி, விஷ்னு, அதர்வா ஆகியோருடன் இணைந்தார்.

தற்போது மீண்டும் அதர்வா உடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.

இளம் ஹீரோக்களுடன் இணைந்து விட்டாலும், தற்போது சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாம்.

இதனை அவரே ஓபனாக தெரிவித்தும் விட்டார்.

சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் அம்மணிக்கு சான்ஸ் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sri Divya wish romance with Suriya and Dhanush

சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி விலக இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தை போல், மிகப்பிரம்மண்டாக சங்கமித்ரா படத்தை உருவாக்க இருக்கிறார் சுந்தர் சி.

இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.

இப்படக்குழுவினர் அண்மையில் கான்ஸ் திரைப்பட விழாவில் கூட கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் இருக்கிறாராம்.

பெரிய படம், இரண்டு வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.

தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார்.

ஆனால், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தாம்.

முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை என்றும் படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவே விலகலுக்கான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார்.

தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

Shrutihaasan walks out of Sundar Cs epic Sangamithra

‘காலா’ ஜீப் இன்னும் இருக்கா..? நாங்க வாங்குறோம்.. – மஹிந்திரா சேர்மன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி இணையத்தில் கலக்கி வருகிறது.

இந்த போஸ்டரில் ரஜினி உட்கார்ந்திருக்கும் ஜீப்புக்கு தற்போது அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

இந்த ஜீப் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனத்தின் ‘தார்’ மாடல் ஜீப் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மஹிந்திரா சேர்மன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது..

‘காலா’ பட போஸ்டரில் ரஜினி அமர்ந்திருக்கும் தார் ஜீப் பயன்படுத்துவது குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்.

அந்த காரை விலைக்கு வாங்கி, எங்கள் நிறுவனத்தின் ஆட்டோ அருங்காட்சியகத்தில் வைக்கப் போகிறோம் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மற்ற ஒரு பதிவில், ‘அந்த கார் படத்தின் போஸ்டரில் போட்டோஷாப் செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த கார் தற்போது ஒரு கலெக்டரிடம் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஜய்யை பார்த்து வியக்கும் நித்யா மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி வரும் தளபதி 61 படத்தில் விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்ஜே சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் 3 நாயகிகளில் ஒருவரான நித்யா, விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து தன் சமீபத்திய பேட்டில் தெரிவித்துள்ளதாவது…

‘விஜய்யுடன் நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.

அவர் அமைதியாக சுபாவம் கொண்டர். அந்த அமைதிதான் அவரிடம் ரொம்ப பிடித்தது.

தனக்கு தேவையில்லாத விஷயங்களில் தலையிட மாட்டார்.

அவரிடம் பழகினால் நிறைய கற்று கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

‘கடவுளும் அஜித்தும் ஒரே மாதிரிதான்…’ ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் என பன்முக காட்டிய ஆர்.கே. சுரேஷ் தற்போது ஹீரோவாக அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பில்லா பாண்டி என்ற ஒரு படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் அஜித்தை பற்றி தன் பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது…

‘என்னை வழிபடுங்கள், எனக்கு கோவில் கட்டுங்கள் என்று கடவுள் ஒருபோதும் சொல்வதில்லை.

ஆனாலும் பக்தர்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.

அதுபோல தான் அஜித்தும். ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அவர் சொன்னாலும் அவருக்கு ரசிகர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

RK Suresh compared God with Actor Ajith

‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் இவர்கள்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து, மீண்டும் தன் காலா படத்தை இயக்கும் வாய்ப்பை ரஞ்சித்துக்கு கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் ஸ்டில்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்கள் யார்? யார்? என்ற முழுவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா’ ஆகியோர் நடிக்கிறார்களாம்.

மும்பையில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று, இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது.

The complete cast list of Rajinikanth 164th movie Kaala

More Articles
Follows