கொரோனா சேவை… சூர்யா கார்த்தி ரசிகர்களுக்கு SR பிரபு அட்வைஸ்

கொரோனா சேவை… சூர்யா கார்த்தி ரசிகர்களுக்கு SR பிரபு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR Prabu advice to Suriya and Karthi fans during Social Serviceகொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்னர்.

இதனால் வேலையிழந்து ஏழை மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஒரு மாதமாக வீட்டில் இருப்பதால் தங்களின் அன்றாட வாழ்க்கையே இவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களால் இயன்றளவில் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களும் நிவாரண பொருட்களை வழங்யும் உணவளித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா கார்த்தியின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு இது குறித்து கூறியுள்ளதாவது…

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஓய்வின்றி ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுத்து வருகின்றனர். அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்.

ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், சமூக விலகலையும் கடைபிடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

SR Prabu advice to Suriya and Karthi fans during Social Service

https://twitter.com/prabhu_sr/status/1251399678983192578

ஊரே பத்தி எரியுது.. திருந்துங்க; தல தளபதி ரசிகர்களை கண்டித்த கஸ்தூரி

ஊரே பத்தி எரியுது.. திருந்துங்க; தல தளபதி ரசிகர்களை கண்டித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ignore negativity Kasthuri advice to Vijay Ajith fansநடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்.

நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இவரின் கருத்துக்கள் அவ்வப்போது வந்து ட்விட்டரில் விழும்.

அண்மையில் விஜய் இறந்த தேதி என அஜித் ரசிகர்கள் மற்றும் அஜித்துக்கு பாடைக்கட்டு என விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்தனர்.

கொரோனாவில் கொடிய காலத்திலும் இவர்கள் திருந்தவில்லை என நடுநிலையான நெட்டிசன்களே கண்டித்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த மோதல் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளா. அதில்…

அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை;

ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு என்று பதிவு செய்துள்ளார்.

என கடுமையாக பதிவிட்டுள்ளார்.

Actress Kasthuri slams Vijay and Ajith fans

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வசந்த் ரவி

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vasanth Ravi donates Mask and Gloves to Chennai Corporation ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்து தமிழக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் வசந்த் ரவி.

தற்போது ‘ராக்கி’ என்ற படத்தில் நடித்துள்ளார் வசந்த் ரவி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது :

இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம்.

நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன்.

இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாருக்கிறார்கள்.

ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன்.

இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.

நடிகர் வசந்த் ரவி, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சென்னை மக்களின் நலனுக்காக உழைக்கும் அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை (கையுறைகள், முகமூடிகள் மற்றும் துப்புரவாளர்கள்) வழங்கினார்.

மேலும், கோவை மாவட்டம் தரமணி வசந்த் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பாக மே மாதம் 3 ஆம் தேதி வரை இடிகரை பகுதி அனைத்து வீடுகளுக்கும் மதிய சாப்பாடு தர ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு உறுதுணையாக திரு.வசந்த் ரவி அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கோவை மாவட்ட தரமணி வசந்த ரவி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தார்கள்.

Actor Vasanth Ravi donates Mask and Gloves to Chennai Corporation

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தை நீக்கியது அமேசான் பிரைம்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தை நீக்கியது அமேசான் பிரைம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans Hero removed from Amazon Prime பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

இந்த படம் கடந்தாண்டு வெளியானபோதே இப்பட கதை தன்னுடையது எனக்கூறி வழக்கு தொடர்ந்தார் உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு.

இதை விசாரித்த தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், இரண்டு கதைகளிலும் ஒற்றுமை இருப்பதாகவும், கதை திருட்டு உண்மைதான் என தெரிவித்தார்.

இதையனை அடுத்து கதை திருட்டு தொடர்பாக போஸ்கோ பிரபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வேறு மொழிகளில் வெளியிடவும், டிஜிட்டல், சாட்டிலைட், மொழிமாற்றம் செய்து வெளியிடவும் தடைவிதித்து உத்தரவிட்டு இருந்தது.

ஆனாலும் கடந்த மார்ச் 20-ம் தேதி இத்திரைப்படம் தெலுங்கில் சக்தி என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு படம் தெலுங்கில் ரிலீசாகவில்லை.

இதனிடையில் ஹீரோ திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.

எனவே டிஜிட்டல் தளத்தில் வெளியிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை போஸ்கோ பிரபு அமேசான் பிரைம் தளத்துக்கு அனுப்பவே தற்போது படத்தை தங்கள் இணையத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளது அமேசான்.

Sivakarthikeyans Hero removed from Amazon Prime

ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் மெகா பட்ஜெட் படம்

ராஜமௌலி & மகேஷ் பாபு இணையும் மெகா பட்ஜெட் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SS Rajamouli and Mahesh Babu to team up for mega project பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்து உலக சினிமாவையே இந்தியா பக்கம் திருப்பியவர் இயக்குனர் ராஜமவுலி.

இவர் தற்போது ராம் சரண் மற்றும் ஜீனியர் என்டிஆர் நடிக்கும் RRR படத்தை இயக்கி வருகிறார்.

அதாவது ஒரு ஹீரோ கேரக்டரை நீரை போன்றும் மற்றொரு கேரக்டரை நெருப்பை போன்றும் உருவாக்கியுள்ளார்.

இவர்களுடன் ஆலியா பட் அஜய்தேவ்கன் சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

RRR படத்தின் வேலைகள் முடித்துவிட்டு பழம்பெரும் தயாரிப்பாளர் KL நாராயணனின் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு அடுத்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.

அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிப்பார் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

ராஜமௌலிக்கு சரி.. மகேஷ் பாபுக்கும் சரி வணிக வியாபாரம் மிகப்பெரிய அளவில் உள்ளது. ஓப்பனிங்கும் பெரியளவில் இருக்கும். எனவே படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.

SS Rajamouli and Mahesh Babu to team up for mega project

பன்னாட்டு கப்பல்கள் நம் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி? – கமல்

பன்னாட்டு கப்பல்கள் நம் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி? – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan question about Fishing ant its ban period கொரோனா ஊரடங்கு உத்தரவு சரியாக திட்டமிடப்படவில்லை என மோடியை கண்டித்து அடிக்கடி கருத்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

மேலும் பால்கனி அரசு அடித்தட்டு மக்கள் நலனை கண்டுக் கொள்ளவில்லை எனவும் சாடி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் என்று இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதித்துவிட்டு இந்திய கடல் எல்லையில் பன்னாட்டு நிறுவனங்கள் மீன் பிடிக்க அனுமதித்தது ஏன் என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பதிவில்…

“ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடிப்பது எவ்வகை நீதி?” என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்.

Kamalhassan question about Fishing ant its ban period

More Articles
Follows