எலெக்சனுக்கு ஸ்பெஷல் பஸ்..: ஓட்டு போட விரும்பாத மக்கள்.. ரிசர்வேஷன் மோசம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் 100% மக்கள் வாக்களிக்க வேண்டும் என அரசும் தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துக்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

நாளை (ஏப்ரல் 1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த அறிவிப்பு வந்தும் முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.

அதாவது இதுவரை 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

www.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Special buses arranged on election day in TN

தேர்தல் பிரச்சார கடைசி் நாளில் பிரச்சாரம் 2 மணி நேரம் நீட்டிப்புக்கு அனுமதி.; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதற்கு முன்பு ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை கணக்கில் கொண்டு தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என தமிழக தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மேலும் திண்டுக்கல் லியோனியின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கூறினார்.

இத்துடன் திமுக எம்.பி.தயாநிதி மாறனின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளதாகவும் தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Election commission extends timing for campaign on last day

மிகப்பெரிய படத்தில் இருப்பது பாக்கியம்..; விஜய் படத்தில் இணைந்த மற்றொரு ஹீரோயின் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். ஆனால் நாயகி பூஜா ஹெக்டே வரவில்லை.

இந்நிலையில், மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தளபதி 65 படத்தில் நடிப்பதை உறுதி செய்து பதிவிட்டுள்ளார்.

‘தளபதி 65’ எனும் மிகப்பெரிய படத்தில் ஒரு அங்கமாக இருப்பது என் பாக்கியம்” என தனது சமூக வலைதள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மலையாளத்தில் மனோகர், எஞ்சன் பிரகாஷன் ஆகிய படங்களில் நடித்துள்ள அபர்ணா தாஸ்.

தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

Manoharam fame Malayalam Actress Aparna Das joins Thalapathy 65 team

கொரோனா 2வது அலை : தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2020 மார்ச் முதல் ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

முதலில் கடுமையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பின்னர் படிப்படியாக ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் அமலில் உள்ளது.

தற்போது பொதுத்தேர்தல் காரணமாக அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடந்த 2 வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகளவில் பரவி வருகிறது.

எனவே தேர்தலுக்கு பிறகு எந்த சமயத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் தலைமை செயலாளர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நேற்று சுகாதாரத்துறை அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதன்படி தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான தமிழக அரசு, அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மருத்துவ நிபுணர்கள், டாக்டர்கள் ஆலோசனையின் அடிப்படையில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீடிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளி மற்றும் உள்ள விதிகள்படி செயல்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வெளியில் நடமாட கூடாது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TN extends lock down till April 30

விஜய்யின் ‘தளபதி 65’ படப்பூஜையில் கலந்து கொள்ளாத ஹீரோயின் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் தற்போது விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க உள்ளார்.

மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறவுள்ள நிலையில் இன்று இந்த படப்பூஜை சென்னையில் நடைபெற்றறது.

இதில் விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

ஆனால் பட ஹீரோயின் பூஜா ஹெக்டே கலந்துக் கொள்ளவில்லை.

இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில்…

‘தளபதி 65’ பட பூஜையில் இன்று கலந்து கொள்ள முடியவில்லை. நான் வேறொரு படப்பிடிப்பில் இருந்தேன்.

இந்த பட பூஜையில் கலந்து கொள்ள முடியாததற்கு வருந்துகிறேன். இருப்பினும் படக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Reason behind Thalapathy 65 heroine not attend the movie pooja

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் ‘கபாலி’ விஸ்வந்த்தின் பர்த் டே பார்ட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கிறார் ‘கபாலி’ விஸ்வாந்த், தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடியிருப்பது வைரலாகி வருகிறது.

‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த விஸ்வந்த், ’அட்ட கத்தி’ படம் மூலம் கவனிக்க வைத்ததோடு, ‘கபாலி’ படத்தில் தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டப்பட்டவர்.

தற்போது பல
படங்களில் கதையின் நாயகனாகவும், வில்லன் உள்ளிட்ட பலதரப்பட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வரும் விஸ்வாந்த், பிறந்தநாளை
‘அண்ணாத்த’ படக்குழு படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை
விஸ்வாந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், நடிகர்களை வைத்து வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி வரும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் என்.ஜே.சத்யா, நடிகர் விஸ்வாந்தை வைத்தும் வித்தியாசமான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களை சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான உடையில், வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விஸ்வாந்த் இருக்கும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் போட்டு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் விஸ்வாந்த், சசிகுமார் நடிக்கும் படம் ஒன்றில் முக்கிய
கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்.

‘8 தோட்டாக்கள்’ வெற்றி நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பவர், ‘அங்காடி தெரு’ மகேஷ் நடிக்கும் படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், வில்லன், குணச்சித்திரம் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கும் விஸ்வாந்த், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களையும், திரையுலக பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.

மேலும், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருப்பவர், இயக்குநர் சிவா உள்ளிட்ட அண்ணாத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்திருப்பதோடு, ரஜினி சார், நயன்தாரா மேடம், பிரகாஷ்ராஜ் சார், சூரி சார், வேல ராமமூர்த்தி சார், ஆகியோருடன் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.

இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு காரணமாக இருந்த இயக்குநர் சிவா சார் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Kabali fame Viswanth celebrated his birthday at Annaatthe shoot

More Articles
Follows