சௌந்தர்யா ரஜினியின் அடுத்த படம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் முதல் மோசன் கேப்சரிங் படமாக கோச்சடையான் உருவாகியது. 2014ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், நாகேஷ் நடித்த இப்படத்தை ரஜினி மகள் சௌந்தர்யா இயக்கியிருந்தார்.

தற்போது தனது அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டராம்.

இப்படம் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் ஸ்கிரிப்ட் பணிகள் முடிவடைந்து விட்டதால், விரைவில் படத்தில் பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.

‘லிங்கா’ வலையில் மாட்டிக் கொண்ட ‘முடிஞ்சா இவன புடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார்.

ராக்லைன் வெங்கடேஷின் நண்பரான சூரப்பா பாபு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் லிங்கா தொடர்பான பிரச்சினையில் இப்படம் சிக்கிக் கொண்டுள்ளது.

லிங்காவின் நஷ்ட தொகையை மதனுக்கும் சிங்காரவேலனுக்கும் தரவேண்டிய பணத்தை என்னிடம் தாருங்கள்.

இல்லாவிட்டால் படத்தை வெளியிடவிடமாட்டோம், என்று பிலிம்சேம்பர் செயலாளர்களில் ஒருவரான அருள்பதி மிரட்டுவதாக தயாரிப்பாளர் சூரப்ப பாபு நேற்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் ‘எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்க அருள்பதி யார்?’ என்று சென்னை விருகம்பாகம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் இது தொடர்பாக அருள்பதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் சிங்காரவேலன்.

காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள அம்மனுவின் புகைப்படம் இதோ….

மணிரத்னம் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸாக கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோரா இவ்வருட தீபாவளி விருந்தாக வெளி வருகிறது.

இதனையடுத்து தற்போது மணிரத்னம் இயக்கும் காற்று வெளியிடை படத்தில் பைலட்டாக நடித்து வருகிறார் கார்த்தி.

இவற்றை தொடர்ந்து தன் அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டாராம்.

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சிறுத்தை படத்திற்கு பிறகு மீண்டும் இதில் போலீஸ் ஆக நடிக்கிறாராம்.

காஷ்மோரா படத்தை தொடர்ந்து, டீரிம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை எஸ்ஆர் பிரகாஷ், பிரபு இருவரும் தயாரிக்கின்றனர்.

தனுஷ் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடி ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது.

இதனை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ்.

தற்போது முதல் பாகம் உருவாகி வருகிறது. இதில் தனுஷ் உடன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய்சேதுபதியின் மனைவியாக நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.

மேலும் தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மேலும் நட்சத்திர பட்டாளங்கள் இதில் இணையும் என எதிர்பார்க்கலாம்.

சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ, வருகிற அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் விநியோகம் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன் விவரம்…

  • கோவை ஏரியாவின் விநியோக உரிமை – திருப்பூர் சுப்பிரமணியம்
  • திருச்சி மற்றும் தஞ்சாவூர் – பிரான்சிஸ் அடைக்கலராஜ்
  • வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு – ஜி.ஸ்ரீனிவாசன்
  • மதுரை மற்றும் ராமநாடு – ஜி.என்.அழகர் சாமி
  • திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி – பிரதாப் ராஜா

ஆகியோர் பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இந்த விநியோகஸ்தர்கள் அனைவரும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் படத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களாகவே டாப் ஹீரோக்களின் படங்கள் என்றாலும் கூட மினிமம் கியாரண்டிக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தயங்குகிறார்கள்.

படத்தை விநியோகம் செய்து கமிஷனை மட்டுமே வாங்கிக் கொள்கிறார்களாம்.

ஆனால் ரெமோவுக்கு விநியோகஸ்தர்களே மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்கியிருப்பது திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தி உள்ளதாம்.

பின் குறிப்பு: மினிமம் கியாரண்டி பற்றிய ஒரு பார்வை…

ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் விநியோக உரிமை ரூ. 1 கோடிக்கு பெறப்படுகிறது என்றால் அந்த ஏரியாவில் உள்ள திரையரங்குகளுக்கு படம் பிரித்து கொடுக்கப்படும்.

படத்தின் வசூல் ரூ. 1 கோடியை நெருங்கும் வரை அனைத்துமே அதை வாங்கிய விநியோகஸ்தருக்கே சொந்தம்.

அதன் பிறகு வரும் லாபத்தை தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் சதவீத அடிப்படையில் பகிர்ந்து கொள்வார்கள்.

மேலும் நாட்கள் செல்ல செல்ல லாபத்தின் பங்கு மாறிக் கொண்டே வரும்.

விக்ரமின் ‘சாமி-2’… கதையை மாற்றிய ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹரி-விக்ரம் கூட்டணியில் உருவான சாமி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரஜினி தலைமையில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.

இப்படத்தின் க்ளைமாக்ஸில் வேட்டை தொடரும் என திரையிட்டனர்.

ஆனால் தற்போது உருவாகவுள்ள சாமி 2, அக்கதையின் தொடர்ச்சியாக உருவாகவில்லையாம்.

அதாவது சீக்வல் இல்லாமல், ப்ரீகுவல் எனப்படும் முன்கதையாக உருவாக்கப்பட உள்ளதாம்.

அஜித் நடித்த பில்லா வெற்றி பெற்றதால், பில்லா 2 இப்படித்தான் உருவானது.

சாமி 2 படத்தில் திருநெல்வேலிக்கு விக்ரம் வருவதற்கு முன் ரவுடிகளை கொட்டத்தை அடக்க ஆறுச்சாமி என்ன செய்தார்? என்பதை காட்டப் போகிறார்களாம்.

More Articles
Follows