தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ் சினிமாவில் முத்த நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில், இன்று (மே 10) ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் உள்ள போயஸ் கார்டன் வீட்டில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு காரில் சென்றேன்.
அப்போது எனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்று கொண்டிருந்தபோது காரின் மற்றொரு சாவி பவுச்சுடன் காணாமல் போனதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் புகார் அளித்துள்ளார்.
கூடுதல் தகவல்.. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். போலீஸ் விசாரணையில் ஈஸ்வரி & வெங்கடேசன் இருவரும் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடியது தெரிய வந்தது.
soundarya rajinikanth missed her range rover car key
