JUST IN முதல்வர் ஸ்டாலினிடம் 1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய செளந்தர்யா ரஜினி

JUST IN முதல்வர் ஸ்டாலினிடம் 1 கோடி கொரோனா நிவாரண நிதி வழங்கிய செளந்தர்யா ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soundarya rajinikanth (2)கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கொரோனா ்நிவாரணத்திற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகளும் இயக்குனருமான செளந்தர்யா மற்றும் அவரது கணவரும் நடிகருமான விசாகன் & இவரது தந்தை வணங்காமுடி ஆகியோர் தங்களது ’அபெக்ஸ் லெபரட்ரீஸ்’ சார்பில் ஒரு கோடி ரூபாயை இன்று தமிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளனர்.

Rajinikanth’s younger daughter Soundarya and her husband Vishagan Vanangamudi met Tamilnadu CM Stalin in person and handed over a cheque of Rs. 1 crore to the Covid relief fund.

The amount was donated on behalf of their company Apex Laboratories (Makers of ZinCovit)

Soundarya Rajinikanth donates 1 crore to Corona relief fund

JUST IN தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு அஜித் 25 லட்சம் நிதியுதவி

JUST IN தமிழக முதல்வரின் கொரோனா நிவாரணத்திற்கு அஜித் 25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithகொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் என அனைத்து தரப்பினரும் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் 25 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இந்த நிதியை அவர் நேரில் சென்று கொடுக்காமல் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளித்தார்.

Actor Ajithkumar has donated Rs 25 Lakhs to Tamilnadu CM Disaster Relief Fund for Covid Relief

அதிகாரம் பணம் பற்றிப் பேசும் த்ரில்லர் படம் ‘பவர் ப்ளே’

அதிகாரம் பணம் பற்றிப் பேசும் த்ரில்லர் படம் ‘பவர் ப்ளே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

power playஇந்த உலகை ஆட்டி வைக்கும் ஒரு மாபெரும் சக்தி பணம்தான்.
பணத்தை வைட்டமின் என்றும் பவர் என்றும் எனர்ஜி என்றும் கூறுவதுண்டு.

அதேபோல் அதிகாரத்தையும் பவர் என்று கூறுவார்கள். பணம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையில் அதிகாரம் எப்படி விளையாடுகிறது என்பதைக் கூறுகிற கதை இது.

அதிகாரமும் பணமும் விளையாடினால் அந்தப் பகடையாட்டம் எப்படி இருக்கும்? அது தான் இந்த ‘பவர் ப்ளே’ படத்தின் கதை.

நாயகன் ஒருநாள் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்கிறான்.

வெளிவந்த ரூபாய் நோட்டுகளைப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.அவனிடம் வந்தவை போலியான ரூபாய் நோட்டுகளாக இருந்தன .

இதன் பின்னே ஏதோ சதி இருப்பதாக உணர்கிறான். இதற்குக் காரணமாக யாரோ அதிகாரம் படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரிகிறது. ஆனால் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.

ஏடிஎம் மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காகப் பல ஏஜென்சிகள் உள்ளன. அவர்கள் செய்த சதியால் தான் இவ்வாறு போலி ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டது என்று தெரிகிறது .

அதிலிருந்து அவன் எப்படி தப்பிக்கப் போராடுகிறான் என்பதும் தான் ‘பவர் ப்ளே’ .
மீள்வதற்கான அவனது போராட்டங்களைப் பரபரப்பான காட்சிகளோடு படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை விஜயகுமார் கொண்டா இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே தெலுங்கில் சில படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

வனமாலி கிரியேஷன்ஸ் பி.லிட் சார்பில் மகேந்தர், தேவேஷ் தயாரித்துள்ளனர்.

இதில் கதாநாயகனாக ராஜ் தருண் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.

தமிழ் தெலுங்கு மலையாள மொழிகளில் பரிச்சயமான பூர்ணா முக்கியமான வில்லி பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

பூர்ணாவுக்கு நடிப்பில் இன்னொரு முகத்தைக் காட்டும் வாய்ப்பு.கோட்டா சீனிவாச ராவ் வில்லத்தனத்தில் பூர்ணாவுடன் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

மற்றும் ஹேமா லிங்கலே, பிரின்ஸ் ,அஜய், சத்யம் ராஜேஷ், பூஜா ராமச்சந்திரன், ராஜா ரவீந்திரா, கேதார் சங்கர், ரவிவர்மா, தன்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஒளிப்பதிவு ஆண்ட்ரூ, இசை சுரேஷ் பொப்பிலி,எடிட்டிங் பிரவின் புடி, சண்டை இயக்கம் ரியல் சதீஷ் எனத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்துள்ளனர்.

‘பவர் ப்ளே’ இந்த தலைப்பு ஏன் என்றால் எவ்வளவு பவர் வாய்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தங்கள் பவரை வைத்து எப்படியான செயல்களையெல்லாம் செய்கின்றனர் என்பதைக் காட்டுவதால்தான் இந்த தலைப்பு என்கின்றனர் படக்குழுவினர்.

அமேசானில் தெலுங்கிலும் இந்தியிலும் வெளிவந்த இப்படம் இப்போது தமிழில் உருவாகி உள்ளது.

தற்போது அமேசானில் வெளியாகியுள்ளது

Poorna’s next film is titled Power Play

கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற லோகேஷ்

கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director lokeshலோகேஷின் அடுத்த பட N4 டிரைலர், N4 படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருது, மகிழ்ச்சியில் N4 படக்குழுவினர், N4 திரைப்படம் 11 வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருது

“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார்.

முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்தது.

சமீபத்தில் இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ எனும் திரைப்பட விழாவில் பங்கேற்றது. போட்டியின் நடுவர்கள் “N4” பட இயக்குனர் லோகேஷ் குமாருக்கு சிறந்த இயக்குனர் விருதை அளித்துள்ளனர்.

இதனால் இப்படத்தின் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.

இதன் முன்னர் “N4” திரைப்படம் 11 வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பாளர்கள் – நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார்
தயாரிப்பு நிறுவனம் – தரம்ராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ்
எக்ஸிகியூடிவ் புரொடுயுசர் – ரபேல் ராஜசேகர்
ஒளிப்பதிவு – திவ்யன்க் S
படத்தொகுப்பு – டேனி சார்லஸ்
இசை – பாலசுப்ரமணியன் G
சண்டைப்பயிற்சி – V.கோட்டி
உடைகள் – நந்தா அம்ரிதா, லோகேஷ்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Trailer – https://youtu.be/hC1N8AFvFus

N4 film director Lokesh wins best director award at Kolkata film festival

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் வீட்டில் இழப்பு..; முதல்வர் ஸ்டாலின்-டிடிவி-கமல் இரங்கல்

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் வீட்டில் இழப்பு..; முதல்வர் ஸ்டாலின்-டிடிவி-கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman fatherநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் செந்தமிழன் காலமானார்.

அவரது மறைவுக்கு சீமானின் நண்பர்கள் நாதக தொண்டர்கள் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

சீமானின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த செந்தமிழனின் மறைவால் வாடும் சீமானுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

அவரது ட்விட்டரில்…

நண்பர் @SeemanOfficial இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

My deepest condolences for the loss of your father, dear @Seemanofficial.

NTK leader Seeman father Senthamizhan passed away

#BREAKING கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

#BREAKING கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinகொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதாவது சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம்.

கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, பருப்பு, மஞ்சள் தூள் அடங்கிய பாக்கெட், கடுகு, சீரகம், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன

ஜூன் 3ந் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

TN govt provides 13 grocery items to people in ration shop

More Articles
Follows