மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

மீண்டும் ‘அண்ணாத்த’..: ரஜினி மகள் கனவை நிறைவேற்றுவாரா சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இப்படத்தை தனது பேரன்களுடன் சமீபத்தில் பார்த்தார் ரஜினிகாந்த். பேரனின் மகிழ்ச்சி குறித்தும் ரஜினி தன் குரலில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் ரஜினி மகள் சௌந்தர்யாவும் அண்ணாத்த குறித்து பேசியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “சிவா சார்.. ‘அண்ணாத்த” படத்துல நீங்க என்ன பண்ணியிருக்கீங்கன்னு மக்கள் இன்னும் பார்க்கலை.. ஆனா, நான் பார்த்துட்டேன்.

படம் பார்த்துட்டு நான் வெளிய வந்து, உங்க கைய பிடிச்சிக்கிட்டு கண்ணுல ஆனந்த கண்ணீரோடு நின்னேன். நீங்க பண்ணது மேஜிக் இல்லை, அதுக்கு மேல என்ன சொல்லணும்னே தெரியலை. வார்த்தை இல்லை.

தலைவரோட வெறித்தனமான ஒரு ரசிகையாவும், அப்பாவோட மகளாவும் நீங்க அப்பாவை பார்த்துக்கிட்ட முறைய வச்சி, கண்ணடிப்பா, நீங்க, அப்பா, உங்க மொத்த குழு ‘அண்ணாத்த’ படத்துக்கப்புறம் திரும்பவும் வேலை பார்க்கணும் சார்,” என
சௌந்தர்யா அதில் தெரிவித்துள்ளார்.

ரஜினி மகளின் ஆசையை சிவா நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Soundarya Rajini Praising Annaatthe movie and Director Siva On Hoote App

ராஜமௌலி பட ரிலீசுக்காக தங்கள் நிறுவன பெயரையே மாற்றிய PVR

ராஜமௌலி பட ரிலீசுக்காக தங்கள் நிறுவன பெயரையே மாற்றிய PVR

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படங்களின் மெகா வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்..

பிரம்மாண்ட சரித்திரப் படமாக உருவாகி வரும் இந்த படமானது அடுத்தாண்டு 2022 ஜனவரி 7ம் தேதி வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிவிஆர் நிறுவனம் இந்த படத்துடன் இணைந்துள்ளது.

அதன்படி இந்தியாவில் இந்த நிறுவனத்திற்கு உள்ள 800 மேற்ப்பட்ட தியேட்டர்களை தற்போது தற்காலிகமாக சில மாதங்களுக்கு மட்டும் ‘பிவிஆர்ஆர்ஆர்’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

அதாவது பிபிஆர் என்ற பெயருடன் ‘ஆர்ஆர்ஆர்’ படப் பெயருடன் சேர்த்து மாற்றப்படுகின்றன.

இந்திய வரலாற்றிலேயே ஏன்.. உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்காக ஒரு தியேட்டர் நிறுவனம் தனது பெயரை மாற்றுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த இணைப்புக்கான லோகேலா அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது.
அந்த விழாவில் ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமௌலி மற்றும் பிவிஆர் அதிகாரிகள் கலந்து கொண்டு லோகோவை அறிமுகம் செய்தனர்.

Multiplex Brand PVR’s Name Changed to PVRRR for Few Months

சிம்புவின் ‘பத்து தல’ படப்பிடிப்பு.. பரவசத்தில் பிரியா பவானி சங்கர்…

சிம்புவின் ‘பத்து தல’ படப்பிடிப்பு.. பரவசத்தில் பிரியா பவானி சங்கர்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘பத்து தல’.

இதில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. கவுதம் கார்த்திக் ஜோடியாக பிரியா நடித்து வருகிறார்.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் படப்பிடிப்பு குறித்து பிரியா பவானி சங்கர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாவது…

“கன்னியாகுமரியில் ஒரு வாரமாக ‘பத்து தல’ படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். இங்கு படப்பிடிப்பு நடப்பதில் மகிழ்ச்சி. மிக அற்புதமான ஒரு நகரத்தில் இருக்கிறேன். மக்கள், வானிலை, உணவு, ஊரின் அமைதி எப்போதும் என இதயத்தில் நிறைந்திருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.

Priya Bhavani Sankar at Kanyakumari for Pathu Thala shooting

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

ஆர்யா நல்லா நடிக்கிறான்.. ரொம்ப அடிக்கிறான்.. வலி தாங்கல – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛எனிமி’.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ல் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஷால் பேசியதாவது :

என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

எனிமி தீபாவளிக்கு வருகிறது. எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் வினோத்குமார் கிடைத்துள்ளார்.

அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஒரு பெரிய விலைக்கு ஓடிடிக்கு விற்றிருக்கலாம்.
ஆனால் ரசிகர்களுக்காக இந்த படத்தை தியேட்டருக்கு கொண்டு வருகிறார்.

மக்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும்.

அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

டைரக்டர் ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஜாமி (ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அவரிடம் சொன்னேன்.

ஆர்யா கேரக்டரை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என சொன்னேன். பின்னர் அதற்கான அற்புதமான திரைக்கதையுடன் வந்தார்.
ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார்.

இப்போது திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். ரொம்பல நல்லா நடிக்கிறான்.

இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சார்பட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். என்னால அடி தாங்க முடியல.

மிருணாளினி என்னுடன் நடிப்பது தயக்கமாக இருந்ததாக சொன்னார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம்.

கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம்.

600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகவுள்ளது.

நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்.”

என விஷால் பேசினார்.

Vishal speech abour Arya in Enemy Press Meet

எல்லா தருணத்திலும் தன்னுடன் நிற்கும் ரசிகர்களுக்கு கைமாறு செய்யும் சூர்யா

எல்லா தருணத்திலும் தன்னுடன் நிற்கும் ரசிகர்களுக்கு கைமாறு செய்யும் சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.

சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார்.

20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ பதிலளிக்கத் தயாராக உள்ளார்.

ஜெய் பீம்’ திரைப்படம் பற்றி சூர்யா பேசும்போது,…

“24 ஆண்டுகள் ஆகிவிட்டன நான் திரைத்துறைக்கு வந்து. இந்தப் பயணத்தில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்தித்துவிட்டேன்.

ஆனால் எனது ரசிகர்கள் எல்லா தருணத்திலும் என்னுடன் நின்றுள்ளனர். அவர்களுக்கு என் மீது அதீத நம்பிக்கையுண்டு. இந்த நம்பிக்கை எனக்கும் எனது ரசிகர்களுக்கும் இடையே அழகான உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அவர்கள் செலுத்தும் அன்புக்கு நான் கைமாறு செய்ய வேண்டும். அதைத்தான் நல்ல படங்களில் நடித்து செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் தனது அனுபவம் பற்றி சூர்யா கூறுகையில், …

“இந்தத் திரைப்படம் மற்ற படங்களைப்போல், எனக்கு சவுகரியமானதாக இல்லை. நான் இதுபோன்ற படங்களில் இதற்கு முன் நடித்ததே இல்லை.

இது எனக்கு சவாலான திரைப்படம். இந்தப் படத்தின் கதை சொல்லப்பட்ட விதம், நடிகர்கள், படத்தின் உணர்வு என எல்லாமே சற்றே கனமானதாக, அழுத்தமானதாக இருக்கும். இது வெறும் பொழுதுபோக்குக்கான படம் அல்ல. இது நிச்சயம் உங்களின் மனசாட்சியை அசைக்கும். உங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அப்படியே கடந்து சென்றுவிட முடியாது. நிச்சயமாக இந்தத் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்தில் நடித்துள்ளதே ஒரு பொறுப்பான செயல் தான்.

இனிவரும் காலங்களிலும் நான் எனது ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பான படங்களைக் கொடுக்க விடும்புகிறேன்” என்றார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் சிந்தனையைத் தூண்டும் கதைக்களம் கொண்டது. கதைக்களம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலானது.

தமிழகத்தில் 1990களில் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.

படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகிறது.

I want to reciprocate the love I’ve received from fans and audiences by doing good films: Suriya

பவர் ஸ்டார் அப்பு என்ற புனீத் ராஜ்குமார் காலமானார்.; மாரடைப்பு முதல் மரணம் வரை திக் திக் நிமிடங்களுடன் வாழ்க்கை வரலாறு..

பவர் ஸ்டார் அப்பு என்ற புனீத் ராஜ்குமார் காலமானார்.; மாரடைப்பு முதல் மரணம் வரை திக் திக் நிமிடங்களுடன் வாழ்க்கை வரலாறு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரைப்பட முன்னணி நடிகரும் கன்னட சூப்பர் ஸ்டாருமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.

கன்னட திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் ராஜ்குமார். சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில் பணைய கைதியாக வைக்கப்பட்டிருந்தார் ராஜ்குமார் என்பது வரலாறு தெரிந்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

ராஜ்குமாருக்கு 3 மகன்கள். மூவரும் நடிகர்கள் தான்.

2வது மகன் சிவராஜ்குமார் மற்றும் 3வது மகன் புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எனலாம்.

சென்னையில் பிறந்தவர் புனீத். தற்போது அவருக்கு வயது 46.

வழக்கம்போல இன்று காலை ஜிம்முக்கு (உடற்பயிற்சி கூடத்துக்கு) சென்று பயிற்சி செய்தததில் புனித் ராஜ்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

முதலில் லேசான வலி வந்தபோது அவர் சீரியசாக எடுக்கவில்லையாம். அதன்பின்னர் வலி அதிகரித்த நிலையில் தான் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும்போதே மிகவும் ஆபத்தான நிலையில் தான் இருந்தாராம்.

உடனே ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை அளித்ததாக விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் தெரிவித்தார்.

அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த தகவலறிந்ததும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனால் கர்நாடகமே பதட்டமானது.. பெங்களூர் மங்களூர் மைசூரு உள்ளிட்ட நகரங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.

இன்று மதியம் 2.00 மணியளவில் தான், புனித் ராஜ்குமார் மரணமடைந்த செய்தி அறிவிக்கப்பட்டது.

புனித்தின் மறைவு செய்தி அறிந்து கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு, தியேட்டர்களை மூட உத்தரவு.

அவரின் வாழ்க்கை ஒரு பார்வை..

பவர் ஸ்டார் என்ற அப்பு:

ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சிறுவயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். 30ம் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

1985ம் ஆண்டு பெட்டடா ஹூவு என்ற படத்திற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை வென்றார்.

இவையில்லாமல் சலிசுவா மொதகழு, எர்ரட நக்ஷத்ரகழு போன்ற படங்களுக்காக கர்நாடக மாநிலத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் வென்றிருக்கிறார்.

கடந்த 2002ம் ஆண்டில் தான் அப்பு என்ற படத்தில் முதன் முறையாக ஹீரோவாக அறிமுகமானார்.

ரசிகர்கள் அவரை அப்பு என செல்லமாக அழைக்க தொடங்கினர்.

அபி, வீர கன்னடிகா, அஜய், அரசு, ராம், ஹுதுகரு, அஞ்சனி புத்ரா போன்ற படங்கள் இவரது பெயர் சொல்லும்.

இவரின் நடிப்பில் உருவான யுவரத்னா சில மாதங்களுக்கு முன் ரீலிசானது.

1999ம் ஆண்டு அஷ்வினி ரேவந்த் என்பவரை திருமணம் செய்தார்.

சிவ ராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் என அவரின் இரண்டு சகோதரர்களும் நடிகர்கள்தான்.

இவரின் சகோதரரின் இரு மகன்களான வினய் மற்றும் யுவா ஆகியோரும் நடிகர்கள் தான்.

இவர்கள் குடும்பத்தில் புனித் ராஜ்குமாருடன் சேர்த்து 12 பேர் திரைத்துறை பிரபலங்களாக உள்ளனர்.

Kannada Superstar Puneeth Rajkumar passes away at 46 due to cardiac arrest..

Karnataka Government has ordered to immediately close the Theatres and has announced high alert..

புனீத் ராஜ்குமார் நடித்த திரைப்படங்கள்
********************************************

1. Premada 1976

2. Sanaadi 1977

3. Thayige Thakka Maga 1978

4. Vasantha Geetha 1980

5. Boomige Banda Bhagavantha 1981

6. Bhagyavantha 1981

7. Hosa Belaku 1982

8. Chalisuva Modagalu 1982

9. Bhakta Prahlada 1983

10. Eradu Nakshatragalu 1983

11. Yarivanu 1984

12. Bettada Hoovu 1985

13. Shiva Mecchida Kannappa 1988

14. Parashuram 1989

15. Appu 2002

16. Abhi 2003

16. Veera Kannadiga 2004

17. Maurya 2004

18. Aakash 2005

19. Namma Basava 2005

20. Ajay 2006

21. Arasu 2007

22. Milana 2007

23. Bindaas 2008

24. Vamshi 2008

25. Raaj – The Showman 2009

26. Raam 2009

27. Prithvi 2010

28. Jackie 2010

29. Hudugaru 2011

30. Paramathma 2011

31. Anna Bond 2012

32. Yaare Koogadali 2012

33. Ninnindale 2014

34. Power 2014

35. Mythri 2015

36. Rana Vikrama 2015

37. Chakravyuha 2016

38. Doddmane Hudga 2016

39. Raajakumara 2017

40. Anjani Putra 2017

41. Humble Politician Nograj 2018

42. Natasaarvabhowma

2019

43. Padde Huli 2019

44. Mayabazar 2016

2020

45. Yuvarathnaa 2021

46. James 2021

47. Dvitva 2022

#PuneethRajkumar @PuneethRajkumar

Power Star Puneeth Rajkumar passed away

More Articles
Follows