தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.
அதில் முக்கியமான படங்களில் ஒன்று சுந்தரகாண்டம்.
அதில் ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர் நந்தகோபால்.
இவர் தற்போது சினிமா வாய்ப்பு இன்றி வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையறிந்த நடிகர் சௌந்தரராஜா அவருக்கு பண உதவி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது…
‘நிறைய நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவிகள் செய்ய இயலாது.
எனவே சில மருத்துவ உதவிகளை செய்து ஆதரவை கொடுப்போம்.
பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் நிலை உதவினேன். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என கூறினார்.
Soundararaja help to old actor Sundara Kandam fame Nandagopal