விஷ்ணு விஷாலின் தந்தை ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை அவருக்கு சாதகமாகும்.; – சிபிஐ என்கொயரி வேண்டும் என சூரி வேண்டுகோள்

sooriநடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஓய்வு பெற்ற டிஜிபி ஆவார்.

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் இணைந்து, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாக நடிகர் சூரி புகார் அளித்தார்.

அதாவது நிலத்திற்கான உரிய ஆவ‌ணங்கள் இல்லாததால் தமது பணத்தை திரும்ப கேட்டபோது, அ‌வர்கள் தராமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ரமேஷ் குடவாலா உள்ளிட்ட இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ‌வழக்குப்பதிவு செய்தனர்.

தரவேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவும், அன்புவேல் ராஜனும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சூரி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ரவீந்திரன், நடிகர் சூரியின் புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சூரி மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், ரமேஷ் குடவாலா டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் காவல்துறை விசாரணை அவருக்கு சாதகமாக அமையலாம் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Soori requests CBI enquiry against of Vishnu Vishal father

Overall Rating : Not available

Latest Post