சூரியிடம் பண மோசடி செய்த விஷ்ணு விஷாலின் தந்தை; அதிர்ச்சியான தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெண்ணிலா கபடி குழு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார் சூரி.

இதனால் விஷ்ணு விஷாலின் தந்தையும் ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபியுமான ரமேஷ் குடவாலா, சூரிக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதனையடுத்து கடந்த 2015ம் ஆண்டு சினிமா தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் தயாரிப்பில் “வீர தீர சூரன்” என்கிற திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் சூரி முக்கிய கேரக்டரிலும் நடிக்க ஒப்பந்தமாகி படப்பிடிப்புகள் நடந்தன.

அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

எனினும் பேசப்பட்ட அடிப்படையில் சம்பளம் தராததால் அது குறித்து சூரி கேட்டபோது சம்பள பணத்திற்கு பதிலாக மேலும் சில கோடிகளை கொடுத்தால் நிலம் ஒன்று விலைக்கு வருகிறது அதை வாங்கித் தருவதாக படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலாவும் கூறியதாக தெரிகிறது.

அதன்படி சென்னையை அடுத்த சிறுசேரியில் 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் ஒன்று உள்ளதாக தெரிவித்து, ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் நடிகர் சூரியிடம் பல்வேறு தவணைகளாக ₹3.10 கோடி பெற்று விற்பனை செய்தனர்.

இதன்பின்னர் நிலம் வாங்கிய பிறகு பல பிரச்சினைகள் இருப்பது சூரிக்கு தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.

அந்த சம்பந்தபட்ட இடத்திற்கு செல்ல பாதையும் இல்லை, அரசு அங்கீகாரமற்ற மனை என்பது தெரிய வந்ததும் சூரி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த நடிகர் சூரி ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரமேஷ் குட்வாலாவிடம் இது பற்றி கேட்டுள்ளார்.

நிலத்தை திருப்பி வாங்கி கொள்வதாகவும் பணத்தை திருப்பி தருதாகவும் ஒப்பந்தம் ஒன்றை சூரியிடம் அவர் பதிவு செய்ததாக தெரிகிறது.

ஆனால் சூரியிடம் வாங்கிய பணத்தில் 40 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். ரூ. 2.70 கோடி தரவில்லை.

மீதி பணத்தை தருவதாக கூறி பல மாதங்களாக ரமேஷ் குட்வாலா, அன்புவேல் ராஜன் ஏமாற்றி வந்ததால் நடிகர் சூரி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்டுகிறது.

இதனிடையே ரமேஷ் குடவாலா 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். தொடர்ந்து சூரிக்கு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ரமேஷ் குடவாலா காவல் அதிகாரியாக இருந்த போது நிலப்பிரச்சனை என்று புகார் வந்த நபரிடம் 2.50 கோடிக்கு நிலத்தை வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் அதை மறைத்து 5.25 கோடிக்கு வாங்கியதாக ஆவணங்கள் ஏற்பாடு செய்து அதற்கு ஏற்றவாறு ஊர் தலைவரிடம் போலி சான்றிதழ் உருவாக்கி நடிகர் சூரியை ஏமாற்றி இருப்பதாக தெரிகிறது.

சூரி பணத்தை திருப்பி கேட்கும் போது 40 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு 2018ம் ஆண்டு ஜூன் மாதம் மீதி தொகையான 2.70 கோடி தருவதாக கூறி ஒப்பந்தம் போட்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தராததால் 2018-ம் ஆண்டு அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் சூரி புகாரின் பேரில் எந்த வழக்கும்பதிவு செய்யப்படவில்லை.

ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபியாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் முன்னாள் டிஜிபியாக இருந்த ரமேஷ் குட்வாலா ஏமாற்றியதும், நடிகர் விஷ்ணு வங்கி கணக்கில் இருந்து பணம் நடிகர் சூரிக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் வைத்து வாதங்களை நடிகர் சூரி தரப்பில் முன்வைத்தனர்.

இதனை ஏற்று கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யுமாறு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சூரி கடந்த 1-ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக அடையாறு போலீசார் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, திரைபட தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீதும் 406-நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 465- பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 468- ஏமாற்றுவதற்காக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், 471- பொய்யானதை உண்ணமை என நம்ப வைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன் பின் 50 லட்ச ரூபாய்க்கு மேல் மோசடி இருப்பதால் வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு முதற்கட்ட விசாரணையை நடிகர் சூரியிடம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறை உயர் அதிகாரி என்பதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தயங்குவதாக நடிகர் சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில மோசடி விவகாரத்தில் போலியாக ஆவணம் உருவாக்கி கோடிக்கணக்கில் முன்னாள் டிஜிபியே ஈடுபட்டது காவல்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பொய்யான குற்றச்சாட்டை படித்ததும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், சட்ட ரீதியாக சந்திக்க இருப்பதாகவும் விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.

Soori files an FIR against Vishnu Vishals father

முத்தையா இயக்கத்தில் மீண்டும் ‘கும்கி’ ஜோடி.; சன் டிவி-யில் படம் ரிலீஸ்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் விக்ரம் பிரபு.

இதில் நாயகியாக நடித்திருத்நார் லட்சுமி மேனன்.

தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தை ‘தேவராட்டம்’ படத்தை தொடர்ந்து இயக்கி வருகிறார் முத்தையா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை குறுகிய கால படமாக எடுத்து தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக சன் டிவியில் ரிலீஸ் செய்கின்றனர். அதாவது சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளனர். மேலும் சன் நெக்ஸ்டிலும் வெளியிடுகின்றனர்.

2021 பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாகவுள்ளதாம்.

இப்படத்திற்கு ‘பேச்சி’ என்று பெயரிடப்பட உள்ளதாகவம் இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் முத்தையா எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Vikram Prabhu and Lakshmi Menon joins for a new film

பிரபாஸ்-தீபிகா படுகோனே படத்தில் இணைந்தார் அமிதாப்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராதா கிருஷ்ணா இயக்கும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.

இதனையடுத்து இப்படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை ‘மகாநடி’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார்.

இப்படத்தை தெலுங்குத் திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.

இந்தாண்டு வைஜெயந்தி நிறுவனத்தின் 50வது ஆண்டு என்பதால் இந்த படத்தை பொருட்செலவில் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் நாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது முடிவாகவில்லை.

விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

நாக் அஸ்வின் படத்தை முடித்துவிட்டு, ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

Amitabh Bachhan joins Prabhas – Deepikas new film

பிட்டு படம் பார்த்து ஆண்கள் வீட்டுல சொல்லி கொடுப்பார்களா..? இரண்டாம் குத்து-க்கு ஆதரவாக சாம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“இரண்டாம் குத்து” படத்திற்கு “கலாச்சாரம் கெட்டு விட்டது” “கண் கூசுகிறது” என்று பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து அந்த படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சாம்ஸ் தன் சில சந்தேகங்கள்… குழப்பங்கள்…

தியேட்டர்

——————

பிட்டுப்பட தியேட்டர்கள் நம் ஊரில் எதற்காக இருக்கிறது ? கலையை கலாச்சாரத்தை வளர்க்கவா அல்லது செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்கவா ?

எனக்கு தெரிந்து அங்கே ஆண்கள் மட்டும்தான் படம் பார்க்க வருகிறார்கள்… அதை ஆண்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொண்டால் போதுமா ? வீட்ல போய் சொல்லி கொடுப்பார்களோ ?

அந்த மாதிரி படங்களை பார்த்து மனம் சபலப்பட்டு தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று நினைத்தால் அதை எல்லாம் ஏன் இத்தனை நாட்கள் விட்டு வச்சிருக்கோம் ?

நம் கலாச்சாரத்தை கெடுத்து இருக்கும் ஏரியாவிற்கு கலங்கத்தை ஏற்படுத்தி பெண்கள் அந்தப்பக்கம் செல்வதற்கே தயங்கும் அந்தத் தியேட்டர்களை எதிர்த்து ஏன் யாருமே போராடவில்லை ?

இளமைக்காலத்தில் அதையெல்லாம் பார்த்து ரசித்தவர்கள் ( நான் உட்பட ) இன்று குரல் கொடுத்தால்… ஒரு வேளை வருந்தி திருந்தி விட்டோமோ ?

தொலைக்காட்சி

——————————-

பெரியோர் முதல் சிறியோர் வரை இருக்கும் வீட்டுக் கூடத்திற்குள் இருக்கும் டிவி பெட்டிக்குள் சென்சார் இல்லாமல் கண்ட கருமமும் வருகிறதே. புலம்புகிறார்களே தவிர அதை தடுக்கவோ தட்டிக் கேட்கவோ இதுவரை யாருமே வரவில்லை ? ஓ.. அதெல்லாம் பெரிய இடம்

முடியாது என்று விட்டு விட்டார்களோ ?

இணையதளம்

—————————-

டிவியை விட பல மடங்கு நெட் மூலமாக கம்ப்யூட்டரிலும் செல்லிலும் அநியாயத்திற்கு நம்மை கேட்காமலேயே சென்சார் செய்யப் படாஒமல் படு பயங்கரமாக வருகிறதே அது தவறாக தெரியவில்லையா ? அதற்காக யாரேனும் பொங்கி இருக்கிறார்களா ? அது இன்னும் மிகப்பெரிய இடம் என்று கண்ணை மூடிக்கொண்டு போகிறார்களோ ?

சினிமா

—————

பாகவதர் காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை படங்களில் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டிய விஷயங்களில் அளவு (புடவை to ஸ்விம் சூட்) மாறுபட்டுக் கொண்டே வருகிறதே

இதில் எது சரியான அளவு ?

குடிப்பதை போல காட்சியை படத்தில் வைத்து “குடி குடியை கெடுக்கும்” என சப்-டைட்டில் போடுவது போல ஆபாச காட்சியை வைத்து விட்டு “மன நலத்தை கெடுக்கும்” என்று சப்டைட்டில் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ?

‘யு’ சர்டிபிகேட் வாங்கிய படத்தில் சில சமயம் ‘ஏ’ சர்டிபிகேட் அளவிற்கு சில காட்சிகள் வந்து நெளிய வைக்கிறதே அது எப்படி ?

A சர்டிபிகேட் படங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் யாரையாவது பாதிக்கிறது என்பதால் பேசாமல் இனிமேல் U சர்டிபிகேட் படங்கள் மட்டுமே தயாரித்தால் என்ன ? அந்த U விற்கு அளவு என்ன ?

பொதுவான சில சந்தேகங்கள்

—————————————————–

ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களில் வருகின்ற ஆபாச காட்சிகளை பார்க்கவும் ரசிக்கவும் செய்யும்போது கெடாத கலாச்சாரம் பாதிக்காத நம் மனம் நம்மூர் காரன் செய்தால் கெட்டுவிடுமா ?

நம்ம ஊர் கலாச்சாரத்தை காப்பாற்றும் பல உத்தமர்கள் தாய்லாந்து சென்று வந்ததை குறிப்பாக பட்டாயா சென்று அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு வந்ததை ரகசியமாக பெருமை பேசிக் கொள்வார்கள் தானே ?

ஒருவர் தயாரிக்கிறார் பலர் நடிக்கிறார்கள் அரசாங்கம் நியமித்திருக்கிற சென்சார் போர்டு அதிகாரிகள் முறையான சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள் பல தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். பலர் பார்க்க தயாராக இருக்கிறார்கள். எல்லோரையும் விட்டுவிட்டு இயக்குனரை மட்டும் காய்ச்சுவது ஏனோ ?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றால் … யார் செய்தாலும் குற்றம் தானே ?

யானை அளவு விஷயம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எலி அளவை பிடித்து தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

அதுதான் புரியவில்லை ?

நிறுத்தினால் எல்லாவற்றையும் நிறுத்துவோம்…

தெளிய காத்திருக்கும்…

சாம்ஸ்

Actor Chaams supports Santhosh Jeyakumars Irandam Kuthu

திருப்பதி-மதுரை கோயில்களில் சிம்பு தரிசனம்..; முகத்தை மூடியபடி பறந்தார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

இந்த படத்திற்கு முன்பே சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதையில் நடிக்க சம்மதித்துள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. பாரதிராஜா நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறாரம் சிம்பு.

இந்த படத்தில் நடிப்பதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடல்எடையை 20 கிலோ குறைத்திருந்தார்.

இந்த படங்கள் வெளியாகாத நிலையில் அந்த படத்தை வெளியிட ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு.

செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் சிம்புவை படம்பிடிக்க முயன்றதால் முகத்தை முழுவதுமாக மூடியபடி வேகமாக காரில் ஏறி பயணித்தார் சிம்பு.

திருப்பதி வந்த நடிகர் சிம்பு ரூ.300 டிக்கெட் வாங்கி ஏழுமலையானை தரிசனம் செய்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Simbu seeks blessings at Madurai and Tirupati temples

மீண்டும் விஜய்யுடன் மோத ரெடியாகும் கார்த்தி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படத்தின் வெளியீட்டு தள்ளிப்போனது.

கொரோனா பிரச்சினைகள் தீர்ந்த பிறகு 2021 பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என கார்த்தி அறிவித்தார்.

இந்த படத்தை ஒரு பண்டிகை நாளில் வெளியிட காத்திருப்பதாகவும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருந்தார்.

இதன்படி பார்த்தால் 2021ல் பொங்கலுக்கு ‘சுல்தான்’ படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

எனவே மாஸ்டர் திரைப்படமும் சுல்தானும் ஒரே நாளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

கடந்த 2019-ம் ஆண்டு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்து மோதியதும் வசூல் வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது.

Vijay and Karthi movies to clash on Pongal

More Articles
Follows