சூர்யா படம் உலகளவில் 3வது இடம்..; முதல் 2 படங்களை பிடித்த படங்கள் எவை..?

சூர்யா படம் உலகளவில் 3வது இடம்..; முதல் 2 படங்களை பிடித்த படங்கள் எவை..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பரவலால் கடந்தாண்டு 2020 சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

இதனால் 2020 தீபாவளி சமயத்தில் ஓடிடி-யில் வெளியானது சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ‘சூரரைப் போற்று’.

சுதா கொங்கரா இயக்கிய இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருந்தனர்.

இந்த நிலையில் பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான ஐ.எம்.டி.பி-யின் டாப் ரேட்டிங் திரைப்படங்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது சூரரைப் போற்று.

உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலில் இந்த திரைப்படம் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது.

‘ஷஷாங் ரிடம்ப்ஷன்’ திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ‘காட்பாதார்’ திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Soorarai Pottru Is The Most Voted And Highest Rated Kollywood Movie On IMDb

BREAKING கொரோனா சிகிச்சைக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்

BREAKING கொரோனா சிகிச்சைக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalin (2)கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் முதல் பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இதுவரை நேற்று (17-5-2021) வரை இணையவழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என, மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதிலிருந்து ரூ 69 கோடியில் கொரோனா சிகிச்சைக்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் ரெம்டெசிவிர், உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை ரயிலில் கொண்டுவரும் கண்டெய்னர்களை வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

TN government has alloted Rs 50 crore for corona treatment

‘சவுண்ட் பார்ட்டி’ ‘மனுநீதி’ படங்களின் தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மரணம்

‘சவுண்ட் பார்ட்டி’ ‘மனுநீதி’ படங்களின் தயாரிப்பாளர் ஆர்.பி. பூரணி மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RP Pooraniசவுண்ட் பார்ட்டி, மனுநீதி, காசு இருக்கணும், எங்க ராசி நல்ல ராசி, காதலி காணவில்லை… போன்ற படங்களை தயாரித்த ஜி.ஆர் கோல்டு ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் தயாரிப்பாளர் ஜி. ராமச்சந்திரன் (எ) ஜி.ஆரின் மனைவியுமான ஆர்.பி. பூரணி வயது 62 அவர்கள் இன்று காலை 7 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அவரது இறுதி ஊர்வலம் no.145, பூந்தமல்லி ஹை ரோடு, வேலப்பன் சாவடி, சென்னை – 77 அண்ணையாரின் உடல் மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு மாங்கட்டில் உள்ள பண்ணை இடத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட உள்ளது.

Sound Party film producer RP Poorani passed away

கரிசல் இலக்கிய தந்தை கீரா மரணம்.; ஞானதந்தையை இழந்துவிட்டேன் என சிவகுமார் உருக்கம்

கரிசல் இலக்கிய தந்தை கீரா மரணம்.; ஞானதந்தையை இழந்துவிட்டேன் என சிவகுமார் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakumarதமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச் செவல் என்ற கிராமத்தில் பிறந்தவர் கி.ரா என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன்.

இவர் தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, வட்டார சொல்லகராதியை உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் இவர்.

சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்களையும் புதினங்களையும் படைத்திருக்கிறார்.

இவர் எழுதிய கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்

1958இல் எழுத்துப் பணியைத் தொடங்கினார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர், கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்பட்டவர் .

கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்த
கி. ராஜநாராயணன்.

தன்னுடைய தள்ளாத வயதிலும் பல புத்தகங்களை எழுதிக் கொண்டே இருந்தார்.

இந்த நிலையில் கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக 17-05-2021 நள்ளிரவில் காலமானார். அவருக்கு வயது 99.

ஞானதந்தையை இழந்து விட்டேன் என இலக்கிய ஆளுமை கீரா அவர்களுக்கு நடிகர் சிவக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கீரா அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவக்குமார் கூறியதாவது..

நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்து
விட்டேன்.

தற்போது 80 வயதில் எனது ஞானதந்தை 99 வயது வாழ்ந்த கீரா அவர்களை இழந்து விட்டேன்.

கீரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு.

அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.

அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார வழக்கு சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாயததற்கு மனமார வருந்துகிறேன்.

மீண்டும் அவரது சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

பிராத்திக்கும்,
சிவக்குமார்.

Actor Sivakumar condolence message to Keera

முதல்வர் கொரோனா நிவாரணத்திற்கு நடிகர்கள் விக்ரம் & விஜய் வசந்த் MP நிதியுதவி

முதல்வர் கொரோனா நிவாரணத்திற்கு நடிகர்கள் விக்ரம் & விஜய் வசந்த் MP நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Vijay Vasanthகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி, ரஜினிகாந்த் 50 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அஜித், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கினர்.

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் ஆன்லைன் வரியாக 30 லட்சம் வழங்கி உள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் வசந்த் எம்.பி., ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

Vikram & Vijay Vasanth donated Corona relief fund

நீங்க நடிகருன்னு நெனச்சேன்.. மேஜிக் மேனுன்னு சொல்லவே இல்ல..; தனுஷுக்கு பாலிவுட் டைரக்டர் பாராட்டு

நீங்க நடிகருன்னு நெனச்சேன்.. மேஜிக் மேனுன்னு சொல்லவே இல்ல..; தனுஷுக்கு பாலிவுட் டைரக்டர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

anand l rai dhanushதனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ல் மாதம் தியேட்டர்களில் வெளியானது.

தியேட்டர்களில் வசூல் வேட்டையாடிய இந்த ‘கர்ணன்’ கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தை பார்த்த ஆனந்த் எல் ராய் அவரது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

“அற்புதம், புத்திசாலித்தனம்….கர்ணன் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள்.

தனுஷ், நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன். நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” எனக் பதிவிட்டுள்ளார்.

‘ராஞ்சனா’ பட மூலம் தனுஷை ஹிந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல் ராய்.

தற்போதும் தனுஷ், ஹிந்தியில் நடித்து வரும் ‘அத்ரன்கி ரே’ படத்தை இவரே இயக்கி வருகிறார்.

OUTSTANDING & BRILLIANT…This is how you can describe this experience called #Karnan @mari_selvaraj What a storyteller The way you painted ur thoughts on the celluloid. Take a bow!! @dhanushkraja You are a magician mere bhai ..u should have told me.I thought u r an actor. https://t.co/f1sfRkfNbZ

Bollywood director praises actor Dhanush

More Articles
Follows