படங்களை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பிருத்விராஜ் ஒப்பந்தம்

படங்களை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பிருத்விராஜ் ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sony Pictures International Productions in India ties up with Prithvirajமலையாளத்தில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தமிழிலும் நடிக்க ஆர்வம் கொண்டவர் பிருத்விராஜ்.

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்தநிலையில் தன் மனைவியுடன் சேர்ந்து ‘பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

தற்போது படங்களை தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பிருத்விராஜ்.

சமீபத்தில் மும்பை சென்று சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரான விவேக் கிருஷ்ணானியை சந்தித்து இதுகுறித்து ஒப்பந்தம் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் இந்த மொழி நாயகன்.

Sony Pictures International Productions in India ties up with Prithviraj

ரஜினி-விஜய் செய்திகளுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கும் சன் டிவி

ரஜினி-விஜய் செய்திகளுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கும் சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun TV given some special attention for Rajini and Vijay newsஇந்திய சினிமாவில் ரஜினி படங்களுக்கு உள்ள மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

தமிழகத்தை தாண்டியும் இவரது புகழ் கொடி கட்டி பறந்து வருகிறது.

அதுபோல் தமிழக அளவில் விஜய்க்கும் நல்ல மார்கெட் உள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களில் நடிக்கின்றனர்.

விஜய் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ரஜினி படத்தை கார்த்திக் சுப்பராஜ் விரைவில் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் சன் டிவி அலுவலகத்தில் உள்ள எடிட்டர் ரூமில் இவர்கள் குறித்த எந்த ஒரு செய்தி வந்தாலும் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை எப்படியோ வெளியாகி தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Sun TV given some special attention for Rajini and Vijay news

இந்தாண்டில் மட்டும் தனுஷ் கொடுக்கும் நான்கு ட்ரீட்கள்

இந்தாண்டில் மட்டும் தனுஷ் கொடுக்கும் நான்கு ட்ரீட்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In 2018 Dhanush fans will have four movies from their starநடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை படைத்தவர் நடிகர் தனுஷ்.

இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக்கால் இந்த தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவரின் தயாரிப்பு இல்லாமல் இவர் நடித்துள்ள 4 படங்கள் இந்த 2018ல் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழச்சியில் உள்ளனர்.

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆஃப் பகீர் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி2 ஆகிய படங்களும் திரைக்கு வரவுள்ளது.

In 2018 Dhanush fans will have four movies from their star

ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்தார் ஸ்ரேயா

ரஷ்ய நாட்டு டென்னிஸ் வீரரை ரகசிய திருமணம் செய்தார் ஸ்ரேயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shreya saran boy friend‘எனக்கு 20 உனக்கு 18’ எனற் தமிழ் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் ஸ்ரேயா.

அதன்பின்னர் சில படங்களில் நடித்த இவர், ரஜினியுடன் சிவாஜி படத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

இதனையடுத்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, உத்தமபுத்திரன், சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரஷியாவைச் சேர்ந்த டென்னீஸ் விளையாட்டு வீரரான ஆன்டிரே கோச்சேவ் என்ற இளைஞரை காதலித்து வந்தாராம்.

உதய்ப்பூரில் இருவரும் சந்தித்துக் கொண்ட போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தங்களின் திருமணம் மார்ச் மாதம் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.

தற்போது இவர்களின் திருமணம் மும்பையில் ரகசியமாக நடந்துள்ளது.

திருமணத்துக்கு முதல் நாள் அது தொடர்பான கொண்டாட்டங்கள் நடந்தன. மறுநாள் காலை இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்தார்.

இந்த திருமணத்தில் டென்னிஸ் வீரர் மனோஜ் பாஜ்பாய், நடிகை சபனா ஆஸ்மி மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளனர்.

Shriya Saran Secretly Gets Married To Russian Andrei Koscheev

எரும சாணி புகழ் ஹரிஜாவும் சினிமாவுக்கு வருகிறார்

எரும சாணி புகழ் ஹரிஜாவும் சினிமாவுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eruma Saani fame Harija entering into Cinemaசினிமாவுக்கு நிகராக டிவி சேனல்கள் உருவெடுத்து வருகின்றன.

அதே வேளையில் டிவிக்கு நிகராக யூட்யுப் சேனல்களும் வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் எரும சாணி என்ற யூ-ட்யூப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா.

இவர், ஏற்கெனவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருபவர்.

தற்போது, ‘டார்லிங்’ பட புகழ் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ள்ர்.

இதில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ஆனால் ஹரிஜாவுக்கு எந்த கேரக்டர் என்பது தெரியவில்லை.

Eruma Saani fame Harija entering into Cinema

விஷால் கோரிக்கையால் தாய்லாந்து சூட்டிங்கை அவசரமாக முடிக்கும் சந்திரமௌலி

விஷால் கோரிக்கையால் தாய்லாந்து சூட்டிங்கை அவசரமாக முடிக்கும் சந்திரமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mr Chandramouli shooting at Thailand news updatesநவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் முதன் முறையாக இணைந்து நடித்து வரும் படம் Mr. சந்திரமௌலி

டைரக்டர் திரு இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், ‘மைம்’ கோபி, விஜி சந்திரசேகர் இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

தனஞ்செயனின் ‘பாஃப்டா’ நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

தற்போது இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ள கிராபி தீவுக்கு பயணமாகியுள்ளனர்.

அங்கு வருகிற 22-ஆம் தேதிக்குள் சூட்டிங்கை அவசரமாக நடத்தி முடிக்கவிருக்கிறார்களாம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உத்தரவின்படி மார்ச் 23-ஆம் தேதிக்குள் சூட்டிங்கை முடிக்கத்தான் இந்த அவசர ஏற்பாடாம்.

Mr Chandramouli shooting at Thailand news updates

More Articles
Follows