தன் தந்தை ‘விஜய்’ தொழிலதிபராகிய வாழ்க்கையை படமாக்கிய மகன் ‘ஆனந்த்’

தன் தந்தை ‘விஜய்’ தொழிலதிபராகிய வாழ்க்கையை படமாக்கிய மகன் ‘ஆனந்த்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீஸரை படக்குழுவினர் இன்று {ஆகஸ்ட் 2} காலை 10.05க்கு வெளியிட்டனர்.

டாக்டர்.ஆனந்த் சங்கேஷ்வர், புகழ்பெற்ற VRL குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் விளம்பரதாரர் லாஜிஸ்டிக்ஸ், மீடியா மற்றும் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர், இப்போது “விஆர்எல் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ்”. என்கிற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்புதான் ‘விஜயானந்த்’.

இது குறித்துப் பேசிய அவர்….

“எங்கள் தயாரிப்பு நிறுவனம் ’விஜயானந்த்’ என்ற முதல் திரைப்பட முயற்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது – இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படம் ஆகும்.

என் தந்தையும் மரியாதைக்குரிய பிரபல தொழில் அதிபருமான விஜய் சங்கேஷ்வர். 1976 இல் ஒரு சிங்கிள் டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியவர்.

இன்று தேசம் முழுக்க அறியப்பட்ட பிரபல தொழிலதிபர். சிறிய அளவில் தொடங்கி வளர்ந்த அவரது கதையில், அவரது வளர்ச்சிப் பாதையில் ஒரு வாரிசாக ஆனந்த் சங்கேஷ்வராகிய நானும் இடம் பெறுகிறேன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் இப்படத்தை தமிழிலும் வெளியிடுவது உள்ளபடியே பெருமிதமாக உணர்கிறேன். ஒரு தன் வரலாற்றுப்படம் மற்ற மொழிகளில் டப் ஆகி வெளிவருவது என்பது இதுவே முதல்முறை ஆகும். அந்தப் பெருமையை எங்கள் விஜயானந்த்’ தட்டிச்செல்வதில் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி”என்கிறார்.

இதற்கு முன் ’டிரங்க்’ என்ற ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய ரிஷிகா சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.

“ட்ரங்க்” படத்தின் நாயகன் நிஹால், விஜய் சங்கரேஷ்வராக நடிக்கிறார். மற்றும் அனந்த் நாக், வினயா பிரசாத், வி ரவிச்சந்திரன், பிரகாஷ் பெலவாடி, அனிஷ் குருவில்லா,சிரி பிரஹலாத் மற்றும் பரத் போபண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் (பெங்களூர் டேஸ், உஸ்தாத் ஹோட்டல், கீதா கோவிந்தம், மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்) இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
வசனம் ரகு நிடுவள்ளி .
ஸ்டண்ட் -ரவிவர்மா.
ஒளிப்பதிவு- கீர்தன் பூஜாரி,
நடனம் -இம்ரான் சர்தாரியா
எடிட்டிங்- ஹேமந்த்.
ஒப்பனை-பிரகேஷ் கோகக்
மக்கள் தொடர்பு-யுவராஜ்.


ஆனந்த்

Son ‘Anand’ filmed the life of his father ‘Vijay’ as a businessman

JUST IN தாணு அன்புச்செழியன் ஞானவேல்ராஜா பிரபு உள்ளிட்ட சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் ஐடி ரெய்டு

JUST IN தாணு அன்புச்செழியன் ஞானவேல்ராஜா பிரபு உள்ளிட்ட சினிமா தயாரிப்பாளர்கள் அலுவலங்களில் ஐடி ரெய்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஆகஸ்ட் 2.. அதிகாலை முதலே கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பாளரும் பிரபல சினிமா பைனான்சியருமான அன்புச் செழியனுக்கு சொந்தமான வீடு & அலுவலங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் ஐ.டி.ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பிரபல சினிமா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள கலைப்புலி தாணு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்துடன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆர்.பிரபு , சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்னும் சில தயாரிப்பாளர்கள் பெயர்களும் வருமான வரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

IT raids at properties related to Kollywood producers

SRPrabhu | #GnanavelRaja | #ITRaid |

மக்கள் முன்னிலையில் நடைபெறும் ‘விருமன்’ இசை விழாவில் அமீர் – பாவ்னி நடனம்

மக்கள் முன்னிலையில் நடைபெறும் ‘விருமன்’ இசை விழாவில் அமீர் – பாவ்னி நடனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க முத்தையா இயக்கத்தில்,
கார்த்தி நடித்துள்ள படம் ’விருமன்’.

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ’கஞ்சா பூவு கண்ணால….’ பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மற்றப் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் வரும் 3ம் தேதி நடக்கிறது. மதுரை, ராஜா முத்தையா அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்த விழாவில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சூரி, நடிகை அதிதி ஷங்கர், இயக்குநர் முத்தையா,
இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

இந்த விழாவில், இரண்டு பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார்கள். ஒரு பாடலுக்கு நடன இயக்குநர் சாண்டி குழுவினரும் மற்றொரு பாடலுக்கு விஜய் டிவி அமீர் – பாவனியும் நடனமாடுகின்றனர்.

ARTIST LIST::

கார்த்தி
அதிதி சங்கர்
ராஜ்கிரண்
பிரகாஷ்ராஜ்
கருணாஸ்
சூரி
வடிவுக்கரசி
சிங்கம்புலி
மனோஜ் பாரதிராஜா
ராஜ்குமார்
இந்துமதி
வசுமித்ரா
நந்தினி
ஹலோ கந்தசாமி
வேல் முருகன்
TSR
ஓ.ஏ.கே.சுந்தர்
ரிஷி

TEACHNICIAN LIST::

தயாரிப்பாளர் – சூர்யா
இணை தயாரிப்பு – ராஜகேசர் கற்பூர சுந்தரபாண்டியன்
தயாரிப்பு நிறுவனம் – 2D Entertainment
இயக்குனர் – முத்தையா
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு – S.K. செல்வகுமார்
எடிட்டிங் – வெங்கட்ராஜ்
நடனம் – ஷோபி, பாபா பாஸ்கர், சாண்டி, ஜானி
சண்டை – அனல் அரசு
கலை – ஜாக்கி
மக்கள் தொடர்பு – ஜான்சன்

Viruman audio launch will be held at Madurai

‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

‘ஜிகர்தண்டா 2’ அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.; ஹீரோ இவரா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ‘ஜிகர்தண்டா’.

கார்த்தி சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.

இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தில் அசால்ட் சேதுவாக நடிகர் பாபி சிம்ஹா கேங்ஸ்டராக மிரட்டி இருந்தார்.

பாபி சிம்ஹாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் இப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷனுக்கு மற்றொரு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி ஜிகர்தண்டா வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

அந்த வீடியோவில்… முதல் பாகத்தின் தொடர்ச்சியாக ஜிகர்தண்டா இரண்டு கிளாஸ்கள் இருக்குமாறு பதிவிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்….

ஜிகர்தண்டா படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க பச்சன் பாண்டே என்ற பெயரில் அண்மையில் ரிலீசானது.

Karthik Subbarajs Jigarthanda 2 update is here

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

பண மோசடி.; விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆபிஸை ஜப்தி செய்ய கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் புரட்சி இயக்குனர் என்று சொன்னால் அது எஸ் ஏ சி தான்.

ரஜினிகாந்த் விஜயகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களை இவர் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தையான இவர் தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

‘டிராஃபிக் ராமசாமி’ உள்ளிட்ட ஓரிரு படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

இவர் கடந்த 2011ம் ஆண்டு வெளியான ’சட்டப்படி குற்றம்’ படத்தின் விளம்பர செலவு 76 ஆயிரத்து 122 ரூபாயை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன், சென்னை அல்லிகுளம் 25-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

எனவே இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய எழும்பூர் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்திரசேகருக்கு அலுவலகத்தில் உள்ள ஏசி, டேபிள், பேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

ஜப்தி செய்ய சென்றபோது ஊழியர்கள் அனுமதிக்காததால் காவல்துறை உதவி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

sa chandrasekhar office confiscation will be done soon

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

சிம்புவே வெளியிட்ட ‘பத்து தல’ சூட்டிங் அப்டேட்.; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பத்து தல’.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இது கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

இதில் சிம்பு உடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மலையாள நடிகை அனு சித்ரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

கடந்த மே ஜூன் மாதமே இதன் இறுதிக்கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருந்த நிலையில் தன் தந்தை டி ராஜேந்தர் உடல்நல குறைவு காரணமாக சிம்பு இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில்…

‘ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்..பத்து தல’ என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் ‘பத்து தல’ படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை உறுதி செய்துள்ளார்.

கடந்த ஜூன் 30-ம் தேதி ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில், படம் டிசம்பர் 14-ம் தேதி ‘பத்து தல’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Pathu Thala shooting update

More Articles
Follows