தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
யதார்த்தமான கதைகளத்தில் சொல்ல வரும் கருத்தை மிக ஆழமாக பார்வையாளர்களிடம் பதிவு செய்யும் திறமை பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன்.
இவர் இயக்கிய படங்கள், தயாரித்த படங்கள் என பல தேசிய விருதுகளை அள்ளியுள்ளது.
இவ்வாறு கதை மற்றும் கருத்தினை கொண்ட கதைகளில் கவனம் செலுத்தும் இவர், தற்போது இணையதள குற்றங்களை பின்புலமாக கொண்ட சமூக ஊடகங்களால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கும் படமான ‘லென்ஸ்’ படத்தை தமிழில் வெளியிடுகிறார்.
படத்தின் போஸ்டர் லுக் முன்னரே வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், நேற்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.
திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவன்களுக்கு மட்டுமே சாத்தியமான இச்சாதனை, இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
சமூக ஊடகங்களின் வாயிலாக நடைபெறும் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கடின உழைப்பில் உருவானது.
உருமி, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இப்படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக களமிறங்குகிறார்.
எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வெளியாகும் முன்பே நான்கு விருதுகளை பெற்றது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை வெளியிட இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது.