பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

இவர்கள் தற்போது சென்னையில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 25 லட்சத்தை முதலீடு செய்து தொழில் செய்து வருகின்றனர்.

சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகிய இருவரும் இந்த தொகையை பெற்றுக் கொண்டு மாதந்தோறும் 1,80,000 ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 6-7 மாதங்களாக மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

சினேகா பிரசன்னா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டல் விடுத்து வருகிறார்ளாம்.

எனவே கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா பிரசன்னா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நட்சத்திர ஜோடி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை.

Sneha and Prasanna file police complaint against two businessmen

ஹிந்தி நடிகருடன் நயன்தாராவை ‘கனெக்ட்’ செய்த விக்னேஷ் சிவன்

ஹிந்தி நடிகருடன் நயன்தாராவை ‘கனெக்ட்’ செய்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து அண்மைக்காலமாக படத்தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ படம் இவர்களின் படைப்பு தான்.

அதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமைகளயும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களின் ரௌடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கவுள்ள புதிய பட அறிவிப்பினை நேற்று நவம்பர் 18 நயன்தாரா பிறந்தநாளில் அறிவித்துள்ளனர்.

இவர்களின் புதிய படத்திற்கு கனெக்ட் என டைட்டில் வைத்து இரு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கெனவே நயன்தாரா நடித்த திகில் படமான ‘மாயா’ (2015) படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன் தான் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ராஜா ராணி படத்தில் இணைந்து நடித்த சத்யராஜ் இதிலும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். அவரின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முக்கிய வேடத்தில் பிரபல சீனியர் ஹிந்தி நடிகர் அனுபம் கெர் நடிக்கவுள்ளார்.

நேற்று விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை சமந்தாவுடன் தன் பிறந்தநாளை கொண்டாடினார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.

Famous bollywood actor joins Nayanthara’s connect

சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

சிவகார்த்திகேயனுக்கு ஓகே சொல்வாரா ஆந்திரா ஹாட் அழகி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்து ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்களில் ரிலீசான ‘டாக்டர்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து அட்லியின் உதவி இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார் எஸ்கே.

இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, முனீஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், புகழ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

டான் படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகியது.

இந்த படத்தை முடித்துவிட்டு ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன் என்பதை பார்த்தோம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தற்போது நாயகி வேட்டை நடந்து வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

குறுகிய காலத்திலேயே தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா ஓகே சொல்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Telugu top heroine joins Sivakarthikeyan’s next ?

கமலை மிரட்டும் நட்சத்திரங்கள்.; ‘விக்ரம்’ வில்லன்களை எண்ண கைவிரல்கள் பத்தலையே

கமலை மிரட்டும் நட்சத்திரங்கள்.; ‘விக்ரம்’ வில்லன்களை எண்ண கைவிரல்கள் பத்தலையே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் படம் ‘விக்ரம்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், செம்பான் வினோத் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் குணச்சித்திர நடிகர் சம்பத் ராம், டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் கணேஷ் மற்றும் மைமிங் கோகுல்நாத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் விக்ரம் வேதா புகழ் வில்லன் நடிகரான ஹரீஷ் பெராடி என்பவரும் இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறாராம்.

இவர்கள் அனைவரும் கமல்ஹாசனை மிரட்டும் வில்லன் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய்சேதுபதியின் உறவினர்களாக நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Vikram Vedha actor joins Kamal’s Vikram shoot

‘தொரட்டி’ இயக்குநருடன் இணையும் சசிகுமார் & சாம் சிஎஸ்

‘தொரட்டி’ இயக்குநருடன் இணையும் சசிகுமார் & சாம் சிஎஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019 ஆகஸ்ட் மாதம் வெளியான படம் தொரட்டி. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட இந்த படத்தை மாரிமுத்து இயக்க ஷமன் மித்ரு நாயகனாக நடித்திருந்தார்.

இப்பட நாயகன் தன் அடுத்த படத்திற்கு தயாரான நிலையில் இந்தாண்டு 2021 ஜீன் மாதம் கொரோனா தொற்றால் காலமானார்.

இந்த நிலையில் தற்போது ‘தொரட்டி’ பட இயக்குனர் மாரிமுத்து தன் அடுத்த படத்தை தொடங்கியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார்.

Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தேனி, தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் G.M.டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார்.

Thoratti director joins with Sasi Kumar

பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

பொங்கல் ரேஸில் சூர்யா விலகல் : ‘வலிமை’க்கு வழிவிட்டாரா ‘எதற்கும் துணிந்தவன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இமான் இசையைமத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட புகழ் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை 2022 பொங்கல் தினத்தில் தியேட்டர்களில் வெளியிட எண்ணியிருந்தனர்.

ஆனால் ஏற்கெனவே பொங்கல் சமயத்தில் சில படங்களின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அஜித் நடித்துள்ள வலிமை, (ஜனவரி 14 ரிலீஸ்) ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் (ஜனவரி 7 ரிலீஸ்), பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் போன்ற படங்கள் ரெடியாகிவிட்டது.

இந்த நிலையில் 2022 பிப்ரவரி 4ல் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

Etharkkum Thunindhavan locks release date in February

More Articles
Follows