தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ரெமோ படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜீவா நடித்துள்ள கவலை வேண்டாம் படமும் அதே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வந்தன.
இரண்டு படங்கள் என்றால் ஓரளவு கணிசமான தியேட்டர்கள் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் இருந்த ரெமோ குழுவினருக்கு தற்போது பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
இதே நாளில் விஷால் நடித்துவரும் கத்தி சண்டை மற்றும் ஜெயம் ரவி நடித்துள்ள போகன் படமும் ரிலீஸ் ஆகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் வேறு படங்கள் களத்தில் குதித்தால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் வசூலும் குறைய வாய்ப்புள்ளது.