விஜய்-அஜித் படத்தயாரிப்பாளரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் தற்போது நயன்தாரா, ஸ்நேகாவுடன் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனையடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தா உடன் ஜோடியாக நடிக்கிறார் சிவா.

இதன்பின்னர் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இந்த படங்களை முடித்துவிட்டு இறுதிச்சுற்று சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை விஜய் நடித்த கில்லி, சிவகாசி மற்றும் அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களை தயாரித்த ஏ.எம். ரத்னம் தயாரிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தகவல்கள் பரவியுள்ளன.

Sivakarthikeyan’s next with Producer AM Rathnam

கபாலி முதல் பாட்ஷா வரை ரஜினியுடன் பயணிக்கும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள படம் முப்பரிமாணம்.

இப்படத்தின் டீசரை ரஜினியின் கபாலி படம் வெளியான போது, அத்துடன் இணைத்து வெளியிட்டனர்.

கபாலி படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் இப்படத்தின் டீசர் திரையிடப்பட்டது.

இதனையடுத்து காதலர் தினத்தில் முப்பரிமாணம் படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிட்டார்.

இந்நிலையில் முப்பரிமாணம் படம் வருகிற மார்ச் மாதம் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் டிஜிட்டல் பதிப்பு வெளியாகவுள்ளது.

இது தற்செயலாக நடந்தாலும், ரஜினியுடன் தொடர்ந்து சாந்தனு பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Mupparimanam release along with Baasha digital version

அஜித்தை குறி வைக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு வேலைக்காரன் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இந்த தலைப்பு பற்றிய அறிவிப்பை சற்றுமுன் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று வெளியிட்டனர்.

இந்நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை மே 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் அஜித் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா இணையும் படத்தலைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதற்கு ரசிகர்கள் முதல் திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் நயன்தாரா, ஸ்நேகா, பஹத்பாசில், பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு வேலைக்காரன் என்று பெயரிட்டுள்ளனர்.

‘விஜய்-அஜித் கொடுக்காததை சைவம் படம் கொடுத்தது’ – ஏஎல்.அழகப்பன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயக்கொடி பிக்சர்ஸ் தயாரிப்பில், பிஆர். ரவி இயக்கியுள்ள படம் உயிர்க்கொடி.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஏ.எல். அழகப்பன், தேனப்பன், விஜயமுரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் பேசும்போது…

இன்றைய திரையுலகை சின்ன பட்ஜெட் படங்களே காப்பாற்றி வருகிறது. இதை சின்ன படங்கள் என்று நாம் அறிமுகப்படுத்த கூடாது.

ஏனென்றால் இதுபோன்ற படங்களே நமக்கு பெருமை சேர்க்கிறது.

காக்கா முட்டை, சைவம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதை பெற்று தந்தன.

விஜய், அஜித் படங்கள் கொடுக்காத பெருமையை சைவம் படம் பெற்றுத் தந்தது” என்றார்.

இவரின் மகன் இயக்குனர் விஜய் அவர்கள் அஜித்தின் கிரீடம் மற்றும் விஜய்யின் தலைவா படங்களை இயக்கியிருந்தார்.

ஆனால் அவர் இயக்கிய சைவம் படம் தேசிய விருதை பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Producer AL Alagappan speech about Ajith and Vijay

தனுஷ் பாட்டு பாடிய ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் கதை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் அவர்கள் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் வசந்த் என்பவர் நாயகனாக நடிக்க, காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.

அச்சு ராஜமணி இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இப்படத்தின் கதைக்களம் ஆனது பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்கள்தானாம்.

கவர்ச்சிகரமான சினிமா உலகில் யாருக்கும் தெரியாது மறைந்திருக்கும்,உலகம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை. இதன் அழுகுரல் உலகத்தால் கட்டாயம் கேட்கப்பட வேண்டும்.

ஒரு பெண் தன் அன்றாட வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களை மையகதையாக கொண்ட படம் தான் யாதுமாகி நின்றாள். பின்னனி நடனம் ஆடும் பெண்களின் தினசரி வாழ்வில் நடக்கும் உண்மை கதைகளை அடிப்படையாக கொண்ட இப்படத்தை காயத்ரி ரகுராம் இயக்குகிறார்.

இந்த படம் சாதரண பின்னனி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள்.

ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.

தாமரை போன்ற நடனப்பெண் இருபதாண்டு காலமாக அவள் வாழ்நாளில் சந்தித்த மற்றும் பயணித்த பல்வேறு நபர்களின் கதையை சொல்கிறது யாதுமாகி நின்றாள்.

Yaadhumaagi Nindrai movie story updates

More Articles
Follows