சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டிசம்பரில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என வலம் வரும் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கனா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

எஸ்கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இவர் தயாரித்துள்ள இந்த படத்தை பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

இவர் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடிக்க, அவரது அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார்.

இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

முக்கிய கேரக்டர் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இவரது மகள் ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடியுள்ளார்.

திபு நிணன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இப்படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தேதியை மட்டும் பின்னர் அறிவிக்கவுள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyans next movie Kanaa release date updates

கொல்லத்தில் உச்சத்தில் நிற்கும் 175 அடி உயர விஜய்; அச்சத்தில் நடிகர்கள்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக விஜய் ரசிகர்கள் பாவம் என்றே சொல்லலாம். அவர்களை ஓவர் டேக் செய்யும் வகையில் கேரளா விஜய் ரசிகர்கள் அசத்தி வருகிறார்கள்.

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் கேரளாவில் மட்டும் 300க்கும் அதிகமாக தியேட்டர்களில் வெளியாகிறது.

210 தியேட்டர்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது.

இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு பொது இடத்தில் விஜய்யின் 175 அடி உயர ஒரு கட் அவுட் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர்.

இன்று மாலை அதன் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

விஜய்யின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் இப்படி புதுமையாக எதையாவது செய்து வருவதால் மலையாள நடிகர்களே அச்சத்தில் இருக்கிறார்களாம்.

Vijay fans Sarkar Celebrations at Kollam Kerala

மித்ரன் இயக்கத்தில் இணையும் சிவகார்த்திகேயன்-அர்ஜூன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதனை முடித்து விட்டு ரவிக்குமார் இயக்கவுள்ள சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார்

இதன் பின்னர் இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

இதில் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்திற்கு எடிட்டராக ரூபன், ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்ற உள்ளனர்.

24 AM Studios தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

BREAKING : சர்கார் சர்ச்சை; எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முருகதாஸ் இயக்கிய சர்கார் பட கதை திருட்டு விவகாரம் நாம் அறிந்த ஒன்றுதான்.

அந்த கதை வருண் என்பவருக்கு சொந்தமானது என எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் உறுதியளிக்க இது சர்ச்சையானது.

எனவே விஜய் ரசிகர்கள் பாக்யராஜை விமர்ச்சிக்க தொடங்கினர்.

இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது.

இறுதியாக வருண் உடன் முருகதாஸ் சமரசம் செய்துக் கொண்டார்.

சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிறகு இன்று தன் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார்.

சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும் இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை.

இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான் நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன்.

எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட விரும்பவில்லை.” இவ்வாறு இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கை தெரிவித்து ராஜினாமா செய்துள்ளார்.

சூட்டிங் இல்லேன்னாலும் பகத் பாசிலுக்காக ஸ்பாட்டுக்கு செல்லும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியவர் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் தற்போது தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்து வருகிறார்.

இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் பஹத் பாசில் கேரக்டர் குறித்த தகவல் இதுவரை வெளியாகவே இல்லை.

தற்போது பஹத் பாசில் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார் விஜய்சேதுபதி.

சூப்பர் டீலக்ஸ் பட சூட்டிங் சமயத்தில் தனக்கான காட்சிகள் இல்லை என்றாலும் பஹத் பாசிலின் நடிப்பை பார்ப்பதற்காகவே ஸ்பாட்டுக்கு செல்கிறாராம் இந்த மக்கள் செல்வன்.

அடுத்த பட வில்லன் யார்..? சஸ்பென்ஸ் வைக்கும் ராஜமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாகுபலி படத்தின் 2 பாகங்களை முடித்து விட்டு ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமௌலி.

பாகுபலி ஏற்படுத்திய எதிர்பார்ப்பினால் இவரது அடுத்த படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இவருடைய அடுத்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடிக்கின்றனர்.

பொதுவாக ராஜமௌலி படங்களில் ஹீரோவுக்கு இணையாக வில்லனும் பேசப்படுவார்.

ஆனால் புதிய படத்தின் வில்லன் யார்? என்பதை ராஜமௌலி இன்னும் அறிவிக்கவில்லை.

நவம்பர் 3வது வாரத்தில் சூட்டிங்கை தொடங்கவுள்ளதாகவும் அப்போது வில்லனை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

More Articles
Follows