என்னை யாருமே பாராட்டல; இனி அதுதான் தொடரும்..; சிவகார்த்திகேயன் உறுதி

Sivakarthikeyans new condition to his movie directorsபெரும்பாலான ஹீரோக்கள் இளைஞராக சினிமாவில் அறிமுகம் ஆகும்போது பெண்களை கிண்டல் செய்வதும், தண்ணி அடிப்பதும் உள்ளிட்ட காட்சிகளில் அதிகம் நடித்திருப்பார்கள்.

பின்னர் அவர்களுக்கான ரசிகர்கள் வட்டம் உருவாகும்போது, பன்ச் டயலாக் பேசி, கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

இதே பாணியை தான் சிவகார்த்திகேயன் தன் படங்களில் செய்து வந்தார்.

ரெமோ படத்தில் வேறொருவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட நாயகி கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்க சொல்ல டார்ச்சர் கொடுப்பார்.

சிறுவர் சிறுமிகளை அதிகம் கவர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் இப்படி செய்யலாமா? என கடுமையாக விமர்சித்தனர்.

அதன்பின்னர் வெளியான வேலைக்காரன் படத்தில் குழந்தைகளை கவரும் விதத்தில் நம்முடைய உணவே விஷமாகிவிட்டது என எச்சரிக்கை செய்யும் வகையில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ஒரு முடிவெடுத்திருக்கிறாராம்.

நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நான் சாதாரண சின்ன நடிகன்தான்.

அந்த காட்சியில் நடிக்க நடிக்க மாட்டேன், இப்படி அப்படி நடிக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியாது.

இயக்குனர்கள் சொன்னதை செய்தேன்.

வேலைக்காரன் படத்திற்கு பின் எனக்கு சமூக பொறுப்பு கூடியிருப்பதாக நம்புகிறேன்.

வேலைக்காரன் படத்தில் மது குடிக்கும் காட்சியோ, பெண்களை கிண்டல் செய்யும் காட்சியோ இடம் பெறவில்லை.

அதுபோன்ற பாடலும் இல்லை. ஆனால் அதை யாருமே பாராட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை.

இனி வரும் எனது படங்களில் அப்படியான காட்சிகள் இருக்காது.

என்னை இயக்கும் டைரக்டர்களும் பொறுப்பை உணர்ந்து அதுமாதிரி காட்சிகளை வைக்க மாட்டார்கள் என நம்புகிறேன்” என்றார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyans new condition to his movie directors

Overall Rating : Not available

Latest Post