தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘மாவீரன்’.
இதில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடித்து வருகிறார்.
இவர்களுடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு ஆகியோரும் நடிக்க பரத் சங்கர் என்பவர். இசையமைத்துள்ளார்.
இசை வெளியீட்டு உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக மோகோபாட் எனும் நவீன காஸ்ட்லி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதற்குமுன் கமல்ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களில் மோகோபாட் கேமரா பயன்படுத்தப்பட்டது.
இந்த மோகோபாட் கேமரா சண்டைக் காட்சிகளை பிரத்யேகமாக படம்பிடிக்க உருவாக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்.
Sivakarthikeyan’s Maaveeran follows Vikram, Thunivu, Beast formulae
