எமனே தவறு செய்தாலும் எதிர்ப்பேன்.; ‘மாவீரன்’ ட்ரைலரில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள படம் ‘மாவீரன்’.

‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த பட ட்ரெய்லர் விழா தற்போது சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, மாரி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிலையில் ‘மாவீரன்’ பட டிரைலர் இன்று இரவு வெளியானது.

இந்த ட்ரெய்லர் கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ளது. ஆக்ஷன் காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இது உள்ளது.

அரசியல்வாதியாக நடித்துள்ள மிஷ்கின் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் சாமானியனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

எமனே தவறு செய்தாலும் எதிர்த்து நிற்பேன் என மாஸ் டயலாக் பேசியுள்ளார்.

நானாக எதுவும் செய்யவில்லை. அதுவாக நடக்கிறது என்கிறார் சிவகார்த்திகேயன்.

என்னை என்ன முட்டாள் நெனச்சியா? என்ன மிஷ்கின் கேள்வி கேட்பதுடன் டிரைலர் முடிகிறது.

https://t.co/aQ1ccuSHaG

Sivakarthikeyan punch dialogue in Maaveeran Trailer

ஜாதி மதம் பேசும் படம்.. ஆனா யாரையும் தாழ்த்தி பேசாது – ஆனந்த்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.

இப்படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…

மறைந்த நடிகர் மனோவிற்கு முதலில் என் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப்படம் சிறிய படம் இல்லை, ஒரு நல்ல பெரிய படம் , தயாரிப்பாளர் படத்திற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.

இந்தப் படம் ஜாதி மதம் பேசுகிற ஒரு ஜாலியான படம், யாரையும் தாழ்த்தி பேசாத ஒரு நல்ல படம், படத்தில் பல காமெடி கட்சிகளை எடுத்து வைத்துள்ளார் இயக்குநர், படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் மக்களிடம் கொண்டு போய் இதை நீங்கள் தான் சேர்க்க வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் சின்னசாமி பேசியதாவது…

நான் நடிக்க ஆசைப்பட்டு வந்தேன், ஆனால் என்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால் 10 வருடம் கஷ்டப்பட்டு உழைத்து இந்தப் படத்தைத் தயாரித்து அதில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

நான் யாருக்கும் சமரசம் செய்யாமல் இந்த படத்திற்கு தேவையானதைச் செய்துள்ளேன், படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். எங்களைப் போன்ற புது குழுவிற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் நன்றி.

Anandraj speech about Rayar Parambarai movie

எல்லா ஜவுளிக்கடையிலும் எங்கள் நாயகி இருப்பார்.. – கிருஷ்ணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.

இப்படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் நடிகர் கிருஷ்ணா பேசியதாவது…

கொரோனா முடிந்தவுடனே நான் ஒப்பந்தமான படம் இது தான். ஃபுல் ஹீயூமர் படம், நான் முன்பு இந்த மாதிரி பண்ணியதில்லை.

இயக்குநரை நம்பி தான் களம் இறங்கினேன். இயக்குநர் கேப்டன் என்றாலும் கப்பல் சின்ன சாமி சார் தான் அவருக்கு நன்றி. எல்லா படத்திற்கும் உங்கள் ஆதரவு இருந்துள்ளது.

அதே போல் இந்தப் படத்திற்கு ஆதரவு தாருங்கள். நாயகி எல்லா ஜவுளிக்கடை போட்டோவிலும் இவர் படம் தான் இருக்கும், நல்ல மாடல் நன்றாக நடித்துள்ளார். படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி.

In max garments you can see our heroine says Krishna

உடல் மீது அக்கறை கொள்ளுங்க.. ஆரோக்கியமா இருங்க.. – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ள படம் ‘ராயர் பரம்பரை’.

இப்படம் ஜூலை 7 தேதி வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் லொள்ளு சபா புகழ் நடிகர் ஜீவா பேசியதாவது…

இந்தப் படத்தின் கதாநாயகன் கிருஷ்ணா எனக்கு நீண்ட நாள் நண்பன், அவரது முதல் படத்தில் அவருடன் நான் இணைந்து நடித்தேன், அப்போதே நல்ல பழக்கம். இடையில் அவரைப் பார்க்கவில்லை நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று இங்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

படம் நன்றாக வந்துள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது, படம் சுந்தர் சி சாரின் காமெடி படம் போல இருக்கிறது, கண்டிப்பாக வெற்றி பெறும். மனோ பாலா சார் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நீங்கள் அனைவரும் உடலின் மீது அக்கறை கொண்டு நல்ல உணவை உட்கொண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் நன்றி, படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

கதாநாயகி கிருத்திகா பேசியதாவது…

இது எனக்கு முதல் படம் , படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும், நன்றி .

இயக்குநர் ராம்நாத் T பேசியதாவது…

நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது.

கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர் அவரது கண்ணில் ஒரு உயிர் உள்ளது, இந்தப் படத்தை நான் உருவாக்க காரணம், நான் கண்ட ஒரு உண்மை சம்பவம். ஒரு சமுதாயக் கோபம் எனக்கு உள்ளது அது தான் இந்தப் படம் உருவாக காரணம்.

கதாநாயகன் எனக்கு மிகவும் நெருக்கமாகி விட்டார் , இசையமைப்பாளருக்கு மீண்டும் இந்தப் படம் ஒரு அடையாளத்தை அளிக்கும், படம் நன்றாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படம் பார்த்து விட்டு ஆதரவு தர வேண்டும் நன்றி.

Health is wealth take care of that says Jeeva

ஜாதி வெறியைத் தூண்டும் புதிய படங்கள்..; ‘ராயர் பரம்பரை’ பட சந்திப்பில் கே. ராஜன் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராயர் பரம்பரை’.

மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…

ஒரு நல்ல படம் என்பது டிரெய்லரிலேயே தெரிகிறது. பாட்டு, ஃபைட், காமெடி என எல்லாமே நன்றாக இருக்கிறது. கிருஷ்ணா அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

இது சின்ன படம் இல்லை நிறையச் செலவு செய்திருக்கிறார்கள், இது பெரிய படம். இப்போது நிறைய படங்கள் ஜாதி வெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. அந்த சமூகத்திற்குப் பாதிப்பு என ஜாதி வெறியைத் தூண்டுகிறார்கள்.

ஆனால் இந்த படத்தில் மதம் பற்றி நல்ல விசயத்தைக் காட்டுகிறார்கள். முஸ்லீம் பெண்ணை காப்பாற்ற இந்து கடவுளின் வேலை தூக்கி வருகிறான் நாயகன். இப்படி நல்ல விஷயங்களை காட்டுங்கள், யாரும் மத வெறியைத் தூண்டாதீர்கள். ஒரு படம் வெற்றி பெறத் தயாரிப்பாளர் தான் காரணம் இயக்குநர் கலைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற அனைத்து தகுதியும் இப்படத்திற்கு உள்ளது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

New movie story lines with caste says K Rajan

லாஜிக் இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கனும்.. – மனோஜ் தாமோதரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பார்ட்னர்’.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இயக்குநர் மனோஜ் தாமோதரன் பேசுகையில்…

” இப்படத்திற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் மூலமாக ராயல் ஃபார்ச்சூனா நிறுவனத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்தேன். அவர்கள் கதையை கேட்டு படத்தை இயக்கும் வாய்ப்பளித்தனர். எனக்கு தொழிலை கற்றுக் கொடுத்த குருக்களான இயக்குநர்கள் தங்கம் சரவணன், சற்குணம், தாஸ் ராமசாமி ஆகியோர்களுக்கு நன்றி.

முதலில் ஹைதராபாத்திற்கு சென்று ஆதியிடமும், பிறகு மும்பைக்குச் சென்று ஹன்சிகாவிடமும் கதையை சொல்லி சம்மதம் வாங்கினேன். அதன் பிறகு யோகி பாபுவிடமும் சொன்னேன்.

அதன் பிறகு பாண்டியராஜன், முனீஸ்காந்த், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், பாலக் லால்வானி என அனைவரிடமும் சொன்னேன். இது ஒரு காமெடி படம். லாஜிக் இல்லாமல் சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், படத்தொகுப்பாளர்.. என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

எனது இயக்கத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் இது. அனைவரும் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். ” என்றார்.

இதனிடையே ஆதி நடிப்பில் வெளியான ‘பாட்னர்’ படத்தின் முன்னோட்டத்திற்கு பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comedy movies should not have logic says Manoj

More Articles
Follows