அழகிய ஓவியத்தால் சிவகார்த்திகேயனை அழவைத்த ரசிகர்

Sivakarthikeyan fan presented emotional art to his actorசின்னத்திரையில் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது பெரும்பாலான மேடைகளில் தன் தந்தையை பற்றி சொல்வார்.

“நான் சம்பாதித்து என் தந்தைக்கு எதுவுமே வாங்கிக் கொடுத்ததில்லை. குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் கூட அவருடன் நான் சரியாக எடுத்ததில்லை.

இன்று அவர் உயிருடன் இல்லை” என்று விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் கண்ணீருடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இவரின் ரசிகர் ஒருவர் சிவகார்த்திகேயன் மைக்கில் பேசிய புகைப்படத்தை எடுத்து சிவகார்த்திகேயனின் தோளில் அவரது தந்தை கை போட்டபடி நிற்பது போல் ஓவியமாக வரைந்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இதனை ரீட்வீட் செய்து ட்விட்டரில் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளதாவது…

“எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் அப்பாவோடு ஒரு நல்ல புகைப்படம்கூட எடுக்கவில்லை. இந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே…” என அந்த ரசிகருக்கு உருக்கமாக நன்றியை தெரிவித்திருக்கிறார்.

2014 – Best entertainer award. The day u cried for this moment. couldn’t made this true on that day. But Tried to make ur tears into smile and Ur dream come true by this artwith lots of love for @Siva_Kartikeyan

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Sivakarthikeyan Retweeted Kirukals kiki
I don know how to thank u feeling very happy and emotional.. its been sad for me that i missed to take a good pic with appa..this one wil be very spl.. thanks again ma தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தை அன்பின் முன்னே…

Sivakarthikeyan fan presented emotional art to his actor

Overall Rating : Not available

Latest Post