முதல்வர் கொரோனா நிவாரண நிதி; முதல் ஆளாக சிவகார்த்திகேயன் கொடுத்த தொகை

Sivakarthikeyan donated 25 Lakhs for TN CM relief fundஉலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் தருமாறு பொதுமக்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டு எனவும் அவரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ரூ- 25 லட்சம் நிவாரண நதி கொடுத்துள்ளார்.

இவர் ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவால் சூட்டிங்கை இழந்து தவிக்கும் பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு முன் திரையுலகில் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் ரூ. 2 லட்சம் நிதி கொடுத்திருந்தார். நடிகர்களில் சிவகார்த்திகேயன் தான் முதல் நபர்.

Sivakarthikeyan donated 25 Lakhs for TN CM relief fund

Overall Rating : Not available

Latest Post