ஆர்.டி.ராஜா பட நிறுவனத்தை காப்பியடிக்கும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan decided to give farewell to his Kanaa teamதான் தயாரிக்கும் படத்தின் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும் அதை மிக மிகப் பிரம்மாண்டமாக செய்பவர் 24ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவன அதிபர் ஆர்.டி. ராஜா.

தங்கள் பட சூட்டிங் நிறைவடையும் போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி சொல்வதையே ஒரு விழாவாக எடுப்பார்.

வேலைக்காரன், சீமராஜா படங்களுக்கும் இதை செய்தார்.

தற்போது இதே வரிசையில் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார்.

இவர் முதன்முறையாக தயாரித்துள்ள கனா படத்தின் சூட்டிங் இன்றோடு எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (17-7-18) மாலை சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படதை அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

’மரகதநாணயம்’ படத்திற்கு இசை அமைத்த திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

Sivakarthikeyan decided to give farewell to his Kanaa team

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த கனா படத்தின்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த கனா படத்தின்…
...Read More
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்…
...Read More

Latest Post