ரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது முடிவு

ரசிகர்களுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த புது முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan decided to give 2 movies per yearசினிமாவில் அறிமுகமாகும் ஹீரோக்கள் வாய்ப்பு கிடைப்பதே அரிது.

அதிலும் கிடைத்துவிட்டால் வருடத்திற்கு 4-5 படங்களையாவது கொடுக்க நினைக்கின்றனர்.

ஆனால் பட வாய்ப்புகள் வாசலில் காத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் வருடத்திற்கு ஒரு படமே கொடுத்து வருகிறார்.

இது அவரது ரசிகர்களை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.

எனவே அடுத்த 2018ஆம் வருடத்திலிருந்து ஆண்டுக்கு 2 படஙகளை கொடுப்பேன் என தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan decided to give 2 movies per year

தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்தநாள் ஸ்பெஷல்

தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush STARS birthday wish‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி இன்றும் அதே துள்ளும் இளமையோடு இளவட்டங்களின் நாயகனாக வலம் வருபவர் தனுஷ்.

‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ஆகிய இவரது ஆரம்ப கால படங்களில் இவரது அண்ணன் செல்வராகவன் மூலமாக வெற்றிக்கொடியை நாட்டினார்.

பின்னர் பல்வேறு இயக்குனர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தார்.

தமிழ் திரையுலகில் மட்டுமே தெரிந்த இவர், ‘ஆடுகளம்’ படத்தில் நடித்தற்காக தேசிய விருதை வென்று இந்தியா முழுவதும் பிரபலமானார்.

எனவே இவரின் மீது பாசமழை பொழிந்தது பாலிவுட். தற்போது தமிழ் திரையுலகம் தாண்டி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இனி வருடத்திற்கு ஒரு இந்தி படத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நடிகராக தன் திரைப்பயணத்தை தோன்றிய இவர் இன்று பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

தன் தந்தைக்கு வாழ்வளித்த ராஜ்கிரணை நாயகனாக நடிக்க வைத்து அவருக்கு நன்றிக் கடன் என தெரிவித்து, அனைவரையும் நெகிழ வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார்.

மேலும் இவர் கதை, திரைக்கதை எழுதியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இவரது மனைவி ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார்.

இப்படம் இன்று தனுஷ் பிறந்தநாளில் ரிலீஸ் ஆகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவர் தயாரிப்பில் வந்த படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்றுள்ளது. இவரது தயாரிப்பான ‘காக்கா முட்டை’ மற்றும் விசாரணை ஆகிய படங்கள் தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளது.

இன்று தேசிய விருது நாயகன் தனுஷின் 33வது பிறந்த நாள். அவரை ப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துகிறோம்.

dhanush bday design

அவரை பற்றி உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்..

 • பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்து இளம் வயதில் திரையுலகில் நுழைந்தார்.
 • இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன், இயக்குனர் செல்வாராகவனின் தம்பி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி இளம்வயதிலேயே தனக்கான அடையாளத்தை வைத்திருப்பவர்.
 • செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தில் ‘பிறைத் தேடும் இரவிலே’, ‘ஓட ஓட’ மற்றும் ‘காதல் என் காதல்’ போன்ற பாடல்களை எழுதியுள்ளார்.
  பூமி என்னை சுத்துதே’ என்ற பாடலை ‘எதிர்நீச்சல்’ படத்திற்காகவும் ‘கடல் ராசா நான்’ என்ற பாடலை ‘மரியான்’ படத்திற்காகவும் எழுதியுள்ளார்.
 • தற்போது தமன் இசையில் தெலுங்கில் திக்கா என்ற படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
 • செல்வராகவன் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஆசதான்…’ பாடலை பாடியிருக்கிறார். இப்பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
 • இவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய ‘3’ படத்தில் தனுஷ் எழுதி பாடிய ‘ஒய் திஸ் கொலவெறி…’ பாடல், யுட்யூப்பில் வெளியாக ஓரிரு நாட்களிலேயே உலகளவில் புகழ்பெற்றார்.
 • இந்தப் பாடல் ‘சி.என்.என்-2011ன் டாப் பாடலாகத்’ தேர்வு செய்யப்பட்டது.
 • துருக்கி நாட்டில் இந்த ‘கொலவெறி’ பாடலின் டியூனை ‘கோகோ கோலா’ விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
 • ஆனந்த் எல். ராய் இயக்கிய ‘ரஞ்சனா’ என்ற இந்திப்படத்தில் நடித்தார். இப்படம் வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூலித்தது.
 • ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும் உயர்ந்தார்.
  ‘3’, ‘எதிர் நீச்சல்’, காக்கி சட்டை, வேலையில்லா பட்டதாரி, காக்கா முட்டை, விசாரணை, அம்மா கணக்கு உள்ளிட்ட வெற்றிப்படங்களை தன் சொந்த பேனரில் தயாரித்தார்.
 • 2011 ஆம் ஆண்டில் ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ ஆகியவற்றை வென்றார்.
 • ‘யாரடி நீ மோகினி’ படத்திற்காக ‘சிறந்த கேளிக்கையாளருக்கான விஜய் விருது’ வழங்கப்பட்டது.
 • சிறந்த நடிகருக்கான விருது மட்டுமல்லாமல் பாடகருக்கான விருதையும் பெற்றுள்ளார். ‘மயக்கம் என்ன’ படத்தில் சிறந்த பாடகருக்கான ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது மற்றும் ‘ஓட ஓட ஓட ஒன்னும் புரியல’ என்ற பாடலுக்காகவும் பெற்றார்.
 • சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி திருமணம் செய்துக் கொண்டார்.
 • இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் உள்ளனர்.
 • கடந்த 2016ஆம் ஆண்டில் காளீஸ்வரி என்ற ரத்த புற்றுநோய்யால் பாதிக்கப்பட்ட 12வயது சிறுமியின் கடைசி ஆசையை நிறைவேற்றினார்.
 • தனுஷை சந்திப்பதே அவரது கடைசி ஆசை என அந்த சிறுமி கூறி நெகிழ வைத்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.
 • வருடத்திற்கு குறைந்தபட்சம் 3 படங்களையாவது ஒப்புக் கொள்கிறார்.
 • இதில் The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படம் இவரது நடிப்பில் உருவாகியுள்ளது.
 • வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை, கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.
 • மேலும் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி2 படத்திலும் நடிக்கவிருக்கிறார்.
 • இவை தவிர எவரும் எதிர்பாராத வகையில் இவரது மாமனாரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தை ரூ 160 கோடியில் தயாரித்து வருகிறார்.
Exclusive: மக்களுக்கு என்ன செய்யலாம்..? சமுத்திரக்கனியுடன் ரஜினி ஆலோசனை

Exclusive: மக்களுக்கு என்ன செய்யலாம்..? சமுத்திரக்கனியுடன் ரஜினி ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini samuthirakani kaalaரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, நானா படேகர், ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ், அஞ்சலி பாட்டீல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தனுஷ் இப்படத்தை ரூ. 160 கோடியில் தயாரித்து வருகிறார். இசை சந்தோஷ் நாராயணன்.

இதன் சூட்டிங் தற்போது சென்னை, பூந்தமல்லி பகுதியில் நடைபெற்று வருகிறது.

சலவைத் தொழிலாளர்கள் ஒரு பகுதியில் வசித்து துணிகளை துவைத்து வருகின்றனர். ஆனால் அங்கே வரும் வில்லன் கும்பல் அந்த இடத்தை காலி செய்ய சொல்லி அவர்களை மிரட்டுகின்றனர்.

ஆனால் அங்குள்ள மக்கள் மறுக்கவே, நடுஇரவில் அந்த பகுதிகளை அழிக்கின்றனர்.

இது முழுக்க முழுக்க செட் போடப்பட்டுள்ளதாம். இதற்காக பல லட்சம் செலவழிக்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட காலா வருகிறாராம்.

இக்காட்சியில் ரஜினி, (அவருடன் ஒரு நாய்) சமுத்திரக்கனி மற்றும் அருள்தாஸ் மற்றும் பல துணை நடிகர்கள் பங்கு பெற்று நடித்துள்ளனர்.

இதனையடுத்து, இவர்களுக்கு என்ன உதவி செய்யலாம்? என சமுத்திரக்கனியுடன் ஆலோசனை செய்வதாக காட்சிகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Rajini consult with Samuthirakani for welfare of the people

விக்ரம் வேதா படம் பார்த்த சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்.?

விக்ரம் வேதா படம் பார்த்த சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Vedha mass film made with so much class says Rajinikanthகடந்த வாரம் ஜீலை 21ஆம் தேதி வெளியான படம் விக்ரம் வேதா.

புஷ்கர், காயத்ரி இருவரும் இணைந்து இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பாராட்டு மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனையறிந்த ரஜினிகாந்த், தானும் படத்தை பார்க்க விரும்பி, பார்த்துள்ளார்.

படம் செம மாஸ். மாஸ் மட்டுமல்ல படம் கிளாஸ் ஆகவுள்ளது என படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஸ்டாரின் பாராட்டு தங்களுக்கு மிகவும் உற்சாகமளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vikram Vedha mass film made with so much class says Rajinikanth

 

மெர்சலை தொடர்ந்து வேலைக்காரனை வாங்கிய நிறுவனம்

மெர்சலை தொடர்ந்து வேலைக்காரனை வாங்கிய நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran movie stillsவிஜய்-ஏஆர்ரஹ்மான்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் மெர்சல் படத்தின் ஆடியோ அடுத்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் ரூ- 3.5 கோடிக்கு வாங்கியுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது.

மோகன்ராஜா இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இது தொடர்பாக சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிவகார்த்திகேயனின் ரெமோ படத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்காரன் படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளது.

Sony Music bagged audio rights of Velaikkaran movie

sivakarthikeyan robo sankar vijay vasanth velaikaran

 

தன் காதலனை கமலிடம் அறிமுகம் செய்துவைத்த ஸ்ருதி.?

தன் காதலனை கமலிடம் அறிமுகம் செய்துவைத்த ஸ்ருதி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shrutihaasan fall in love with London-based actor named Michael Corsaleநடிகர் கமல்ஹாசன் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசனும் காதலில் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் பிரிட்டீஸ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலித்து வருகிறாராம்.

அவரை விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதால், தன் தந்தை கமல்ஹாசனிடம் அறிமுகம் செய்துவைக்க இந்தியா வரவழைத்துள்ளாராம்.

லண்டனிலிருந்து மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதி வரவேற்று காரில் அழைத்துச் சென்றதாகவும், இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சிகளையும் மும்பையைச் சேர்ந்த மீடியாக்கள் படம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கமல் இவர்களை சந்தித்து பேசிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

’மைக்கேல் இந்தியா வந்துள்ளது உண்மைதான். ஆனால், திருமண தகவல் உண்மையில்லை’ என தெரிவித்தனர்.

Shrutihaasan fall in love with London-based actor named Michael Corsale

shruthihassan boy friend

More Articles
Follows