சதீஷ் மச்சான் சச்சி திருமண நிகழ்வில் சிவகார்த்திகேயன் வெண்பா பங்கேற்பு

சதீஷ் மச்சான் சச்சி திருமண நிகழ்வில் சிவகார்த்திகேயன் வெண்பா பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019ல் வைபவ் & சதீஷ் நடித்த படம் ‘சிக்ஸர்’.

இப்படத்தை இயக்கியவர் சச்சி. (இவரின் தங்கையை தான் நடிகர் சதீஷ் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

மாலை கண் நோயாளியாக வைபவ் நடித்திருந்தார். இந்த ‘சிக்ஸர்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இயக்குநர் சச்சிக்கும், டாக்டர் சரண்யா என்பவருக்கும் (புதன்கிழமை) திருமணம் நடைபெற்றது.

நிகழ்வில் திரைப்பட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த திருமண நிகழ்வில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதிஷ், மிர்ச்சி சிவா, இளம் நடிகை வெண்பா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ரித்விகா, கேபிஒய் தீனா, குக் வித் கோமாளி பாலா, டைகர் தங்கதுரை என பலரும் கலந்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan and Venba attends Sixer film director Sachi wedding

பிடித்தவர்களுடன் அன்பை பரிமாறுங்கள்..; ‘லாபம்’ பிரஸ்மீட்டில் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

பிடித்தவர்களுடன் அன்பை பரிமாறுங்கள்..; ‘லாபம்’ பிரஸ்மீட்டில் விஜய்சேதுபதி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த இயக்குநர் ஜனநாதன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ‘லாபம்’.

நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், சாய் தன்சிகா, ஜெகபதி பாபு, கலையரசன், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் 7சி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இமான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ராம்ஜி இந்த படத்தின் கேமிராமேனாக பணியாற்றியுள்ளார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது கண் கலங்கியபடி உருக்கமாக பேசினார் விஜய்சேதுபதி.

நான் துணை நடிகராக சினிமா வாய்ப்பு தேடிய நாட்களிலிருந்து ஜனநாதனை தெரியும்.

அவருடன் நல்ல புரிதல் இருந்தது. ஆனால் அவருடன் நேரம் செலவிட முடியவில்லை.

நமக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிடித்தவர்களுடன் பேசுங்கள். அன்பை பரிமாறுங்கள்.

என் அப்பன் பாட்டன் செய்த புண்ணியமோ தெரியல இந்த படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பெற்றேன்..”

இவ்வாறு விஜய்சேதுபதி பேசினார்.

Vijay Sethupathi speech at Laabam press meet

விஜய் படத்திலிருந்து விலகி அஜித் படத்தில் நடிக்க சல்மான்கான் ஆர்வம்

விஜய் படத்திலிருந்து விலகி அஜித் படத்தில் நடிக்க சல்மான்கான் ஆர்வம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & விஜய்சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டது்

இதற்காக இந்திக்கு ஏற்றாற்போல் இந்த கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாம்.

ஆனால் என்ன நடந்தததோ.. அதன்பின்னர் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் சல்மான்கான் நடிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் அஜித் நடித்த ‘வீரம்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த விநாயக் கதாபாத்திரத்தில் நடிக்க, சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். 5 அண்ணன் தம்பிகளின் பாசம், அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள், சந்தானத்தின் காமெடி என படம் பட்டைய கிளப்பியது.

கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Salman Khan to act in Ajith film remake

பிச்சைக்காரனை வாழ்த்த ஒன்று கூடிய 17 இயக்குனர்கள்

பிச்சைக்காரனை வாழ்த்த ஒன்று கூடிய 17 இயக்குனர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி, தற்போதைய தமிழ் திரைத்துறையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் கலைஞன்.

இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர்.

ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும் பெரும் வெற்றியை பெற்று, முன்னணி நடசத்திரமாக வலம் வருகிறார்.

தற்போது பிச்சைக்காரன் 2 மூலம் இயக்குநராக தனது அடுத்த பயணத்தை துவங்கியுள்ளார்

சென்னையில், படக்குழுவினர் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள மிக எளியமையான பூஜையுடன் “பிச்சைக்காரன் 2” படப்பிடிப்பு துவங்கியது.

பூஜையில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களும் உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் S.A. சந்திரசேகர் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு வாழ்த்த, விஜய் ஆண்டனி மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்.

மேலும் இந்த சிறப்பு தருணத்தில் தமிழ் திரையை சேர்ந்த 17 இயக்குனர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர், ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குநர்கள் சசி (பிச்சைக்காரன்), பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்), G.சீனிவாசன் (அண்ணாதுரை), கணேசா (திமிருபிடிச்சவன்), நவீன் (அக்னி சிறகுகள்), ஆனந்த கிருஷ்ணன் (கோடியில் ஒருவன்), பாலாஜி K குமார், தனஞ்செயன், ஃபெப்சி சிவா, கமல் போஹ்ரா, சித்தார்த், B பிரதீப் மற்றும் இன்னும் பல முக்கிய பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் S.A. சந்திரசேகர் குத்துவிளக்கை ஏற்றி துவக்கி வைக்க, இயக்குனர் சசி கேமராவை ஆன் செய்தார், இயக்குனர் விஜய் மில்டன் முதல் ஷாட்டிற்கு கிளாப்போர்டைத் தட்டினார்.

பிச்சைக்காரன் 2 படத்தை Vijay Antony Film Corporation சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார்.

Vijay Antonys Pichaikkaran 2 movie launched

கமல்ஹாசன் படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 பொண்டாட்டிஸ்

கமல்ஹாசன் படத்தில் விஜய்சேதுபதிக்கு 3 பொண்டாட்டிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமலஹாசனின் 232வது படமான ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

இந்த படத்தில் பகத் பாசில், காளிதாஸ் மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதை நம் தளத்தில் ஏற்கெனவே பார்த்தோம்.

தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேலும் இரண்டு டிவி நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் கதைப்படி அவருக்கு 3 மனைவிகள் உள்ளனராம்.

எனவே ஷிவானியுடன் மைனா நந்தினியும் மற்றும் விஜே மகேஸ்வரியும் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதை மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராமில் இயக்குனர் லோகேஷுடன் எடுத்த புகைப்படம் மூலமாக தெரிவித்துள்ளார்.

3 wives for Vijay Sethupathi in Vikram film

RC15 UPDATE கதை திருடியதாக ஷங்கர் – கார்த்திக் சுப்புராஜுக்கு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ்

RC15 UPDATE கதை திருடியதாக ஷங்கர் – கார்த்திக் சுப்புராஜுக்கு எழுத்தாளர் சங்கம் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் ராம்சரணின் 15வது படத்தை ஷங்கர் இயக்க தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இவர்களுடன் ஜெயராம், பகத் பாசில் என பலர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் திரில்லர் கதையாக இப்படம் உருவாகிறதாம்.

அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபரில் படத்தை முடித்து 2023ஆம் ஆண்டு சங்கராந்திக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார்.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த செல்லமுத்து எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்… “ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் கதை தன்னுடையது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இயக்குநர் ஷங்கர் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எழுத்தாளர் சங்கம்.

Shankar and Karthik Subbaraj face allegations of story theft over RC 15

More Articles
Follows