ஹாட்ரிக் அடிக்க இணையும் சிவகார்த்திகேயன்-பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய இருபடங்களை பொன்ராம் இயக்க, சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.

மேலும் இக்கூட்டணியில் சூரி மற்றும் இமான் இணைந்திருந்தனர்.

இந்த இரு படங்களும் இவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது.

இந்நிலையில் மீண்டும் பொன்ராம் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா, தன் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார்.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை சற்றுமுன் ட்விட்டரில்  உறுதி செய்தார் இயக்குனர்.

மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.

‘நம்பியார் படத்திற்கு U/A சர்ட்டிபிகேட் ஏன்..?’ குழப்பத்தில் ஸ்ரீகாந்த்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகராக வலம் வந்த ஸ்ரீகாந்த், தற்போது தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

 அவரின் முதல் படமாக வருகிறது நம்பியார்.

அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கியுள்ள இப்படத்தில்
ஸ்ரீகாந்த்துடன் சந்தானம், சுனைனா நடித்துள்ளனர்.

இப்படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸ் ஆகவுள்ளது.

 ஸ்ரீகாந்தின் சொந்த நிறுவனமான கோல்டன் ஃப்ரைடே
ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படம் பற்றி  ஸ்ரீகாந்திடமே பேசுவோம்…

நம்பியார் என்ன சொல்றார்?

சினிமாக்களில் நல்லது செய்பவர் எம்ஜிஆர். கெட்டது செய்பவர் நம்பியார்.
இது எல்லா சினிமா ரசிகர்களுக்கும் தெரியும்.

எம்ஜிஆருக்கு வில்லங்கம்
செய்பவர் நம்பியார். அதுபோலவே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் நல்லதும்
இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது.

இரண்டும் கலந்த கூட்டணி தான் மனிதனின்
மனது. ஒரு பக்கம் நல்ல சிந்தனைகள் மேலோங்கும்போது  கெட்ட சிந்தனைகள்
அதனைக் கெடுக்க முயற்சிக்கும்.

ஸோ நமக்குள்ளேயே எம்ஜிஆரும் இருக்கிறார். நம்பியாரும் இருக்கிறார் என்பதைத் தான் சொல்கிறோம்.

நம்பியார் – எம்ஜிஆர் கான்செப்ட் எப்படி பிடிச்சீங்க?

அந்தப் பெருமை இயக்குனர் கணேஷாவையே சேரும். எல்லோருடைய வாழ்க்கையிலுமே
போராட்டம் இருக்கிறது.

ஒரு கேரக்டரின் குணங்களை அவற்றின் பெயர்களிலேயே
புரிய வைத்தால் ஆடியன்ஸ் எளிதாக படத்துடன் கனெக்ட் ஆகிவிடுவார்கள்
அல்லவா?அதனால், ஹீரோவின் பெயர் ராமச்சந்திரன். அவனுக்கு நிறைய
போராட்டங்கள்.

அவரைக் குழப்பிவிடுவது கூடவே இருக்கும் நம்பியாரான சந்தானம். இங்கே
நம்பியார் என்பது கற்பனை பாத்திரம் தான். அது எப்படி என்ற சஸ்பென்ஸை
திரையில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

சந்தானம் கூட நடிச்சதுல ஏதாவது இண்ட்ரெஸ்டிங் அனுபவம்?

இந்த காம்பினேஷனிலேயே நிறைய சுவராஸ்யங்கள் இருக்கின்றன. படம் முழுக்க
சந்தானம் இருப்பார். படத்தின் ஒரு முக்கிய பகுதியில் திரையில் நான்
பேசுவேன்.

ஆனால் சந்தானத்தின் குரலில். அதாவது எனக்குள்ளிருக்கும்
நம்பியார் எம்ஜிஆரை டாமினேட் செய்யும் இடம் அது. அந்த கான்செப்டே
சந்தானத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரையே ஒரு பாடலையும் பாட
வைத்தோம்.

சாதாரண மனிதன் பாடுவதற்கும் குடிபோதையில் பாடுவதற்கும் ஒரு வித்தியாசம்
இருக்குமே அதனை அச்சு அசலாக அப்படியே கொண்டு வந்தார் சந்தானம். சவாலான
அந்த பாடலை ஒரு மணி நேரத்தில் பாடி முடித்தார்.

அவருடைய டயலாக்
டெலிவரிக்கு நான் நடித்ததும் வித்தியாசமாக இருந்தது. சந்தானத்தை கூர்ந்து
கவனித்து அவரது மாடுலேஷன், டயலாக் டெலிவரியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
சந்தானம் போலவே தேவதர்ஷினியும் கலக்கியிருக்கிறார்.

படத்தோட காஸ்டிங்ல காமெடியன்கள் அதிகமா இருக்காங்க?

ஜான் விஜய், பஞ்சு சுப்பு, ஆதவன், அர்ஜுன், டெல்லி கணேஷ் என உங்களை
எண்டெர்டெயின் பண்ண நிறைய பேர் இருக்கிறார்கள்.

முக்கியமாக, பார்த்திபன். அவர் தான் படத்தை வாய்ஸ் ஓவரில் தொடங்கி வைப்பார். எம்ஜிஆர் வரலாறை எல்லோரும் ரசிக்கும் வகையில் ப்ரெசெண்ட் செய்திருக்கிறார்.

படத்துல ஆர்யாவும் விஜய் ஆண்டனியும் இருக்கார் போல?

படத்தில் ஆற அமர என்ற ஒரு முக்கிய பாடலின் செட் பற்றி தெரிந்துகொண்ட
விஜய் ஆண்டனி அந்த பாடலைப் பார்க்க ஆசைப்பட்டு செட்டுக்கு வந்தார்.

அவரையும் சின்ன மூவ்மெண்ட் போடவைத்து உள்ளே இழுத்தோம். கதையில் ஒரு
நண்பர் வந்து உதவுவார். அதற்கு உண்மையாகவே என்னுடைய நண்பர் ஆர்யாவையே
கூட்டிவந்தோம்.

ஆர்யா என் பள்ளி நண்பன். ஆர்யா பற்றி ஒரு விஷயம் சொல்லியே
ஆகவேண்டும். இந்த படத்தில் நடித்துமுடித்தபின், நான் மிகவும்
தயங்கியபடியே மச்சி… ரொம்ப தேங்க்ஸ்… பேமெண்ட் எவ்வளவு… என்று கேட்டேன்.

பதிலுக்கு ஆர்யா எனக்கு விட்ட டோஸை ஓப்பனாக சொல்ல முடியாது. இதுபோன்ற
நண்பர்களைத் தான் நான் சம்பாதித்த பெரிய சொத்தாகக் கருதுகிறேன்.
ஆர்யாவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் வருகிறார்.

ஒரு தயாரிப்பாளரா படத் துவக்கம் முதல் இன்று வரையிலான உங்கள் மனநிலை?

இது ஒரு ஆபத்தான ரோலர்கோஸ்டர் பயணம் என்றே சொல்வேன். ஏற்ற இறக்கம்,
த்ரில், பயம் எல்லாமே அடங்கியிருக்கிறது. இன்று படம் தயாரிப்பது எளிது.

ஆனால் அதனை வெளியிட பெரிய போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. பல விஷயங்கள்
இருக்கிறது. இந்த படத்துக்கு யு/ஏ கொடுத்திருக்கிறார்கள்.

நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். சென்சார் எந்த அடிப்படையில்
பண்ணப்படுகிறது? என்னவிதமான ஏற்றதாழ்வுகள் அங்கே பார்க்கப்படுகின்றன?

ஆபாசம் இல்லை, வன்முறை இல்லை, முத்தக் காட்சி கூட இல்லை. தவறான வசனங்களும்
இல்லை. பெண்களைத் தவறாகக் காட்டவில்லை. ஆனால் என் படத்துக்கு யு/ஏ
கொடுக்கிறார்கள்.

அப்போது இதெல்லாம் இருந்தால் தான் யு சர்டிஃபிகேட் கொடுப்பார்களோ?

என் படத்திற்கு யு/ஏ கொடுத்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை.
வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் வரும்.

அவற்றை சமாளித்து ஜெயிப்பது நம்
கையில் தான் இருக்கிறது என்ற நல்ல கருத்தைத் தான் சொல்கிறது என் படம்.
நமக்குள்ளேயே தான் நல்ல எண்ணங்களும் கெட்ட எண்ணங்களும் இருக்கிறது.

இந்த விஷயத்தை சொல்கிறோம். இதை சொல்வதற்கு யு/ஏ கொடுத்தால் படம்
எடுப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறது சென்சார் போர்டு?

அஜித், விஜய், சூர்யா என அனைத்து பெரிய ஹீரோக்களுமே இரண்டு படங்களுக்கு
ஒரு லோக்கல் படம் பண்ணுகிறார்கள். நீங்கள் இன்னமும் ’ஏ’ செண்டர் ஆடியன்சை
மட்டுமே குறிவைப்பதுபோல் தெரிகிறதே?

படத்தின் வெற்றி, தோல்வி தான் படம் எந்த ஆடியன்ஸை சேர்ந்தது என்பதைத்
தீர்மானிக்கிறது.

படம் பண்ணும்போது எல்லா ரசிகர்களுக்குமாகத் தான்
பண்ணுகிறோம். நம்பியார் என்ற டைட்டிலே எல்லா ரசிகர்களுக்குமானது. இது
நிச்சயம் எல்லா தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும்.

தொடர்ந்து தயாரிப்பீர்களா?

நிச்சயமாக… புதியவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம்.
எங்களுக்கு பணம் முக்கியமில்லை.

முதலீடு வந்தால் கூட போதும். ரசிகர்களுக்கு நல்ல படங்களைக் கொடுக்க ஆசைப்படுகிறோம். அதனை
தீர்மானிக்கப்போவது ரசிகர்கள் தான். அவர்கள் நம்பியாருக்கு தரவிருக்கும்
ஆதரவுதான் எங்கள் பலம்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

நியு புரொடியூசர் ஸ்ரீகாந்த்தை வாழ்த்துகிறோம்.

‘குழந்தைகளுக்காக போராடும் லதா…’ ரஜினிகாந்த் வருவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, ஆஸ்ரம் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மேலும் பல சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சில மாதங்களாக லதா மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் திருடப்படும் குழந்தைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற ஆதரவற்ற நிலையில் உள்ள தெருவோர குழுந்தைகளுக்காக சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற அமைப்பை தொடங்க உள்ளார் லதா.

இதில் அபயம் கேர் பார்சில்ட்ரன் (Abhayam Care for Children) என்ற திட்டத்தின் மூலம் இதுவரை காணாமல் போன குழந்தைகளை தேடும்பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.

இதற்கான சிறப்பு நிகழ்ச்சி நாளை காலை 10.00 மணியளவில் சென்னை காமராஜ் அரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியை சந்தித்த லைகா சுபாஸ்கரன்; 2.0 சூட்டிங் எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தை தொடர்ந்து, ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இவருடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ரூ. 300 கோடி செலவில் லைக்கா இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதனிடையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற ரஜினி, அண்மையில் சென்னை திரும்பினார்.

தற்போது தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார் ரஜினி.

அவரை லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த சுபாஸ்கரன், ராஜூ மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

எனவே, இதன்படி அடுத்த வாரம் தொடங்கவிருக்கும் ‘2.0’ படப்பிடிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதுவரை இவர்கள் சம்பந்தப்படாத காட்சிகளை படமாக்கி கொண்டிருக்கிறார் ஷங்கர்.

சினிமாவில் ஆறு மரணம்; அதிர்ச்சி மாதமாகிய ஆகஸ்ட்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வுலகில் பிறக்கும் எந்தவொரு உயிரினத்திற்கும் இறப்பு நிச்சயம்தான்.

ஆனால் அவை இயற்கை மரணம் என்றால் அதில் வியப்பேதும் இல்லை.

சாதித்துக் கொண்டிருப்பவர்கள் குறைந்த வயதில் மரணம் எய்தால், நாம் ஆண்டவனை என்ன சொல்வது..?

இந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு 2 வாரங்களை கடந்துள்ளது.

இதில் கடந்த 10 நாட்களில் மட்டும் நம் தமிழ் திரையுலகை சார்ந்த் ஆறு பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.

அவர்களை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு இதோ…

ஆகஸ்ட் 4, 2016

தமிழில் ”தேவி தரிசனம், தேவி திருவிளையாடல், யாமிருக்க பயமேன், அந்த சில நாட்கள், சூப்பர் குடும்பம்” உள்ளிட்ட சுமார் 27 படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் டிஎஸ்.சேதுராமன்(83). இவருக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட காலமானார்.


ஆகஸ்ட் 6, 2016

பழம்பெரும் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும், நடிகருமான வியட்நாம்வீடு சுந்தரம்(வயது 72) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஆகஸ்ட் 6-ம் தேதி காலமானார்.

ஆகஸ்ட் 8, 2016

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி (வயது 68) காலமானார்.

ஆகஸ்ட் 9, 2016

தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர்… என பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலம் (வயது 75) காலமானார்.

ஆகஸ்ட் 10, 2016

தமிழில் ‛பேரழகன்’ மற்றும் ‘பகடை பகடை’ படத்தை இயக்கிய கேரளாவை சேர்ந்த இயக்குநர் சசி சங்கர் (வயது 58), ஆகஸ்ட் 10-ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

ஆகஸ்ட் 14, 2016

இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். ஆனால் பாடல் ஆசிரியர் நா முத்துக்குமார் தனது 41 வயதிலேயே நேற்று மரணமடைந்துள்ளார்.

மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், அந்த நோயின் தாக்கம் தீவிரமானதால் நேற்று(ஆகஸ்ட் 14ம் தேதி) மரணம் அடைந்தார்.

10 நாட்களில் ஆறு திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்…

இத்தொடர் மரணம் திரையுலகினர் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

‘தமிழ்நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள் விஷால்’ – சுரேஷ் காமாட்சி விளாசல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் செயல்பாடுகளை கண்டித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது….

“நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே…

சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, பொது வெளியிலும் சரி – மிகுந்த சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது. சந்தேகங்கள் மட்டுமல்ல, ஆபத்தானவையாகவும் கூட உள்ளன.

நடிகர் சங்கத்தைப் பிடித்தாயிற்று. அடுத்தது தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுவேன் என்று சமீபத்தில் நீங்கள் பேட்டி அளித்துள்ளீர்கள்.

மேலும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் பற்றியும் அவதூறாகப் பேசியுள்ளீர்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் பிரதிநிதி என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள்…

நீங்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல… நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர். என்னென்னவோ வாக்குறுதிகளை அள்ளி வீசி, தினமும் மீடியாவின் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு, கடைசி நேர வாக்குப்பதிவின் போது நடக்காத ஒரு அடிதடியை நடந்ததாக சீன் கிரியேட் செய்து, ஓட்டுக்களைப் பெற்று ஜெயித்தவர்.

ஒரு அமைப்பின் வலிமையான பொறுப்பில் உள்ள நீங்கள், சினிமாவுக்கு அடிப்படையாக விளங்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி, அவர்களுக்கான சங்கத்தைப் பற்றி அவதூறாகப் பேசலாமா?

அந்த அதிகாரத்தை உங்களுக்குத் தந்தது யார்? தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகவே இருந்தாலும், இப்படிப் பேசுவது சரிதானா?

நடிகர் சங்க நிர்வாகம் சரியில்லை என்று பிரச்சாரம் செய்து, அந்த சங்கத்தில் போய் உட்கார்ந்து விட்டீர்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் சரியில்லை… அதனால் அதையும் கைப்பற்றுவேன் என்கிறீர்கள்.

அடுத்து? தமிழ்நாட்டு நிர்வாகம் சரியில்லை. எனவே அந்த அதிகாரத்தையும் கைப்பற்றுவேன் என்று கூறுவீர்களோ?

யார் கண்டது… உங்கள் நோக்கம் அதுவாகவும் கூட இருக்கலாம்.

அதற்காகத்தானே தேவி அறக்கட்டளை மூலம் கல்வி உதவிகள், நலிந்தவர்களுக்கான உதவிகள், ரசிகர் மன்றங்களை உசுப்பேற்றுதல் போன்றவை நடக்கிறதோ என்ற ஆழமான சந்தேகத்தைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் நடிகர் சங்கத்தை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை, ஏன் தமிழ் நாட்டையே ஆளும் ஆசை உங்களுக்கு இருக்கலாம். தப்பில்லை. ஆனால் இம்மியளவுக்காக தமிழ் உணர்வு இருக்கிறதா உங்களுக்கு?

தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருந்ததை இப்போது ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்று மாற்றியிருக்கிறீர்கள். அட, அந்த சீல் கூட ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்றே இப்போது மாற்றப்பட்டிருக்கிறது.

நீங்கள் பதவிக்கு வரும்போது என்ன கூறி வந்தீர்கள்? பல கோடி பேர் மதிக்கும், போற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன கூறினார் உங்களிடம்?

12 கோடி மக்களின் ஏகப் பிரதிநிதி தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா என்ன விரும்பினார்?

நடிகர் சங்கத்தில் யார் பதவிக்கு வந்தாலும் முதல்வேலையாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை ‘தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்’ என்று மாற்ற வேண்டும் என்றுதானே கூறினார்கள்.

நீங்கள் செய்திருப்பதென்ன? ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்ற தமிழ்ப் பெயர் கூட இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு தீர்மானித்து அதை ‘சௌத் இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்’ என்று மாற்றியிருக்கிறீர்களே… இது எத்தனை பெரிய தமிழர் விரோதப் போக்கு… அயோக்கியத்தனம்!

திருட்டு வீடியோவை நீங்களே ஒழித்துவிடுவேன் என்று முழங்கி களமிறங்கினீர்களே… அது ஒவ்வொரு முறையும் உங்கள் படங்கள் ரிலீசாகும் முன்பு, பின்பு மட்டும்தானா? மற்றவர்களின் படங்களின் திருட்டு வீடியோ எங்கு ஓடினாலும் கவலையில்லையா?

சரி, நீங்க திருட்டு வீடியோவைத் தடுக்க வேணாம்… அதை தயாரிப்பாளர் சங்கம் பார்த்துக் கொள்ளும்.

ஆனால் அப்படி தயாரிப்பாளர் சங்கம் உருப்படியாக மேற்கொண்ட திருட்டு வீடியோ ஒழிப்புக்கு உங்கள் பங்களிப்பு என்ன?

பல லட்சம் செலவழித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு எஸ் தாணு திருட்டு வீடியோவை ஒழிக்க உயர்நீதிமன்ற ஆணைப் பெற்று, டெல்லி வரை போனார்.

அவர் தனியாகத்தான் போராட வேண்டியிருந்தது. கேட்டால் அது அவர் படம் என்று ஒதுங்கினீர்கள்.

அவரோடு கைகோர்த்து அத்தனைப் பேரும் களமிறங்கியிருந்தால் இன்று திருட்டு வீடியோ திருடர்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடியிருப்பார்கள். ஆனால் உங்கள் குறி, தயாரிப்பாளர் சங்கப் பதவிதானே!

எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது விஷால். மீடியா வெளிச்சம் நடிகர்கள் கண்களை மறைத்ததால் நீங்கள் நடிகர் சங்கத்தைப் பிடித்திருக்கலாம். ஆனால் தயாரிப்பாளர் சங்கம்… உங்கள் கபடத்தை வேரறுத்துவிடும். எச்சரிக்கிறேன்.

தயாரிப்பாளர் சங்கத்தை குறை சொல்ற நீங்க தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையில் பயனுள்ளவராய் இருந்திருக்கிறீர்கள்?

சாடிலைட் ரைட்ஸ் ரூ 10 கோடி போன காலகட்டத்தில் நீங்கள் 7 கோடி சம்பளம் கேட்டீர்கள். ஆனால் இப்போது… எந்தப் படத்துக்கு சாட்டிலைட் பிஸினஸ் ஆகிறது? 2 கோடி, 3 கோடி என்கிறார்கள். ஆனால் நீங்களோ இன்னும் அதே 7 கோடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

பாலிவுட்டில் இப்போது ஹீரோக்கள் பர்சன்டேஜ் அடிப்படையில் படம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது தயாரிப்பாளரின் லாப நஷ்டத்தில் பங்கேற்க வந்துவிட்டார்கள். நீங்களும் இதற்குத் தயாரா?

படம் ஹிட்டடித்தாலும் ப்ளாப் ஆனாலும் உங்களுக்குப் படம் கிடைத்துவிடுகிறது. ஆனால் தயாரிப்பாளர் நிலை, அதோ கதிதானே.

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள். இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள் தமிழ் ரசிகர்களும், தமிழக மக்களும். தமிழக அரசு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் உள்ளது.”

 

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

More Articles
Follows