தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா’.
நடிகர், பாடகர் அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார்.
இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது.
திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இதன் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.