விருது வென்ற சிவகார்த்திகேயன்-அனிருத்தை கலாய்த்த சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் Pride Of TamilNadu என்ற விருதை அண்மையில் பெற்றனர்.

இது குறித்து இவர்களின் நண்பரும் நடிகருமான சதீஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

வாழ்த்துக்கள் நண்பர்கள்.

விருது விழா கல்யாண மண்டபத்தில் நடந்ததோ ?? என கலாய்த்துள்ளார்.

இருவரும் விருது விழாவில் வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தால் பவர்ஸ்டாருக்கு அடித்த அதிர்ஷ்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து சூப்பர் ஹிட்டான வீரம் படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஸ்ருதி நடித்துள்ள இப்படம் கட்டமராயுடு என்ற பெயரில் உருவாகியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 24ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இது அஜித்தின் ரீமேக் படம் என்பதால் தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

எனவே 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் இங்கு வெளியாகவுள்ளதாம்.

மேலும் சென்னை மாயாஜால் திரையரங்கில் இப்படத்துக்கு 45 காட்சிகளை ஒதுக்கியிருக்கிறார்களாம்.

தனுஷ் தயாரிக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கவுள்ள படத்தை தனுஷ் தயாரிக்கவிருக்கிறார்.

இப்பட அறிவிப்பு வெளியானது முதலே இப்படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் குஷ்பூ நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் குஷ்பு நடிப்பது இது 6வது முறையாகும்.

இதற்கு முன்பு, தர்மத்தின் தலைவன் (1988), நாட்டுக்கொரு நல்லவன் (1991), பாண்டியன் (1992), மன்னன் (1992), அண்ணாமலை (1992), குசேலன் (2008) ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Khusboo teams up with Rajini for 7th time in Dhanush project

‘அகங்காரம் கொண்ட இளையராஜா திருந்த மாட்டார்…’ கங்கை அமரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தான் இசையமைத்த பாடல்களை இனி தன் அனுமதியின்றி எவரும் பாடக்கூடாது என இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒரு தனியார் டிவிக்கு இளையராஜாவின் சகோதரரும், பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்…

இளையராஜாவுக்கு அகங்காரம் உள்ளது. தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்பது முட்டாள்தனமானது.

ராயல்டி கேட்டுதான் பாடல்கள் கேட்க வேண்டும் என மக்களை கட்டாயப்படுத்த முடியுமா?

இசையை தெய்வீகமாக நேசிப்பவர்களிடம் இப்படி சொல்லலாமா?

ராயல்டி பெற்றுதான் வாழவேண்டும் என்ற நிலைமையில் இருக்கிறாரா? இளையராஜா எப்போதுதான் திருந்துவார்..? என கங்கை அமரன் சாரமாரி கேள்விகளை கேட்டுள்ளார்.

Gangai amaran reaction to Ilayaraja legal notice to SPB

‘இளையராஜா பாடலை இனி பாட மாட்டேன்..’ எஸ்.பி.பி. முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தான் இசையமைத்த பாடல்களை இனி ராயல்டி இல்லாமல் எவரும் பாடக்கூடாது என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக இசை நிகழ்ச்சிகள் நடத்திவரும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறியுள்ளதாவது…

இது தொடர்பாக யாரும் விவாதிக்க வேண்டாம்.

இனிமேல் நான் இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Hereafter I wont sing Ilayaraja songs says SP Balasubramaniam

எஸ்பிபி.க்கு நோட்டீஸ் ஏன்.? இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையுலகில் தன் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடித்தி வருகிறார் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

தற்போது அமெரிக்காவில் உள்ள இவருக்கு இளையராஜா தரப்பில் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் தெரிவித்துள்ளதாவது…

கடந்த இரண்டு மூன்று வருடங்களாக, இளையராஜாவின் காப்புரிமை பணியை தொடர்கிறோம்.

இது எஸ்.பி.பி-க்காக மட்டும் அனுப்பிய நோட்டீஸ் அல்ல. உரிய அனுமதியை பெற்று பாடுங்கள் என்றுதான் தெரிவித்துள்ளோம்.

மேலும் அன்றாட வாழ்வுக்காக கிராமங்களில் கச்சேரி நடத்துபவர்களுக்கு இந்த ராயல்டி பொருந்தாது.
அவர்கள் பிழைப்புக்காக பாடுகின்றனர்.

ஆனால் சிலர் லட்சணக்கனக்கான கோடிக்கணக்கான வருமான நோக்கோத்தோடு நிகழ்ச்சி செய்கின்றனர்.

அவர்களிடம்தான் உரிமையை கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Ilayarajas Royality notice to Play back Singer SPB issue

More Articles
Follows