மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..: சிவசங்கர் பாபாவை கைது செய்தது  சி.பி.சி.ஐ.டி.

Siva Shankar Babaகடவுள் இருக்கிறாரா? இல்லையா? என பல விவாதங்கள் ஆங்காங்கே நடைப்பெற்று வந்தாலும் இந்த உலகத்தில் தன்னையே கடவுளாக அறிவித்துக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

அப்படி தன்னை அறிவித்துக் கொண்டவர் தான் பிரபல சாமியார் சிவசங்கர் பாபா.

இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரமாக காட்டிக் கொள்வார். மேலும் தனது பக்தர்களிடையே ஆனந்த நடனம் ஆடுவார்.

மற்ற சாமியார்கள் எல்லாம் துறவிகள் போல தன்னை காட்டிக் கொண்டாலும் இவர் கூலிங் கிளாஸ், பேன்ட் சர்ட், சொகுசு கார், கண்ணாடி மாளிகை வீடு என பந்தாவாக வலம் வருபவர் இவர்.

செங்கல்பட்டு அருகே கேளம்பாக்கம் பகுதியில் 18 ஆண்டுகளாக சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் நிறுவனர் தான் இந்த சிவசங்கர் பாபா.

இவரின் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கூறிய புகார்கள் சமூகவலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது.

எனவே சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை நடத்தினார்.

மேலும் குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தியது.

இதற்கு பள்ளி நிர்வாகம் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஒரு மருத்துவமனையில் நெஞ்சுவலியின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பில் கூறப்பட்டது.

சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையில் வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா? என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர்.

எனவே இன்று இரவு அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகின்றன.

Siva Sankar baba arrested for sexual abuse case

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *