தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் 12வது தயாரிப்பான படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்குகிறார்.
இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சற்றுமுன் நடைபெற்றது.
இதில் நடிகர் அல்லு அர்ஜுன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் லிங்குசாமி, நடிகர் சிவகுமார், அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ், எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது சிவக்குமார் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கார்த்தியுடன் படித்தவர். சூர்யா , கார்த்தி ஆகியோரை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது அல்லு அர்ஜுனை வைத்து தமிழ் தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் பல வருடங்களாக நல்ல தொடர்பு இருந்து வருகிறது.
அல்லு அர்ஜுன் மிகவும் அழகாக உள்ளார். நல்ல வேளை அவர் 1960ல் நடிக்க வரவில்லை அப்படி வந்திருந்தால் எனக்கு போட்டியாக வந்திருப்பார்.
கடவுள் முருகர் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று அக்காலத்தில் என்னை தேர்வு செய்தனர்.
இவர் அக்காலத்தில் இருந்திருந்தால் இவரை தான் தேர்ந்தெடுத்து இருப்பார்கள்” என்றார் சிவகுமார்.
