விஜய்-சிவகார்த்திகேயனை தவிர்த்தாரா அஜித் பட இயக்குனர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுத்தை என்ற படத்தை இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என தமிழக ரசிகர்களால் அறியப்பட்டார்.

ஆனால் அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து இயக்கி வருகிறார்.

இதில் விவேகம் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை முடித்து விட்டு, விஜய் அல்லது சிவகார்த்திகேயன் படங்களை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அஜித் படத்தையே சிவா இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Siva going to join with Ajith after Vivegam

ஜிஎஸ்டியால் ‘இவன் தந்திரன்’ இயக்குனர் கண்ணீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர். கண்ணன் தயாரித்து இயக்கிய இவன் தந்திரன் படம் நேற்று வெளியானது.

கவுதம் கார்த்திக், ஷ்ரத்தா, ஆர்.ஜே. பாலாஜி நடித்த இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்துள்ளது.

இந்த வரியுடன் தமிழக அரசின் நகராட்சி வரியான 30% கேளிக்கை வரியையும் இணைந்துள்ளதால் தமிழக சினிமா தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜீலை 3ஆம் தேதி முதல் முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.

இதனால் ‘இவன் தந்திரன்’ படத்தின் வசூல் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார் ஆர். கண்ணன். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வணக்கம். நான் டைரக்டர் ஆர்.கண்ணன் பேசுறேன். ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர். இப்ப படம் ரிலீஸ் ஆகி, சக்சஸ் புல்லா போயிட்டிருக்கு.

அதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு இயக்குனரா என் சகோதரர் பிரின்ஸ் உட்பட பலருக்கும் நன்றி. சில விஷயங்களை ஷேர் பண்ணலாம்னு ஆசைப்படறேன்.

வரும் திங்கட்கிழமை முதல் திடீர்னு ஸ்டிரைக்குன்னு சொல்றாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாம இப்படி திடீர்னு ஸ்டிரைக் அறிவிச்சா, எப்படி? இந்தப் படத்துக்காக வாங்குன கடனை எப்படி அடைக்கிறது?

எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. விக்ரமன் சார், செல்வமணி சார், சேரன் சார், சமுத்திரக்கனி ஏதாவது பண்ணுங்க. யாருகிட்ட போய் பேசறதுன்னு தெரியல. படம் நல்லாயிருக்குன்னு கொண்டாடுறாங்க.

நல்ல விமர்சனங்கள் வருது. இந்த நேரத்துல இப்ப திடீர்னு ஸ்டிரைக் வந்தா என்ன பண்றதுன்னு புரியல.

இவ்வாறு அழுதபடியே கண்ணீருடன் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Ivan Thanthiran director feel sad because of Theater Strike due to GST issue

ஜீலை 7ஆம் தேதி வருகிறார் ஏஜெண்ட் பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு நடித்த பைரவா படம் கடந்த 2017 பொங்கல் அன்று வெளியானது.

இப்படம் தமிழகம் மற்றும் கேரளாவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் தற்போது தயாராகிவிட்டதாம்.

எனவே இதனை வருகிற ஜீலை 7ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையிட உள்ளனர்.

இப்படத்திற்கு தெலுங்கில் ஏஜெண்ட் பைரவா எனப் பெயரிட்டுள்ளனர்.

Vijay Keerthy Suresh starring Agent Bairavaa release on 7th July 2017

மீண்டும் பிரபாஸை இயக்கும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே படத்தின் மூலம் ஒரு நடிகரால் இந்தியளவில் பிரபலமாக முடியுமா? என்று கேட்டால், அது எப்படி? முடியும் என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

ஆனால் அதை சாதித்து காட்டியவர் பாகுபலி நாயகன் பிரபாஸ்.

அப்படம் இந்திய சினிமா வசூலில் ரூ. 1800 கோடியை நெருங்கியதால் பிரபாஸை இயக்க பலரும் காத்திருக்கின்றனர்.

இதனையடுத்து, சுஜீத் இயக்கத்தில் “சாஹே” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கமோஷி என்ற படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபுதேவா இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாராம் பிரபாஸ்.

இதற்குமுன்பே பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் என்கிற ஹிந்தி படத்தில் பிரபாஸ் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Once again Prabhu Deva going to Direct Prabhas

பலபேருடன் தொடர்புபடுத்தி அசிங்கமாக பேசுகிறார்… நித்யா பாலாஜி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் பல படங்களில் நடித்து வந்த பாலாஜி, தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவரின் மனைவி நித்யா இவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

“அப்போது குடித்து விட்டு அடிக்கிறார். சாதி பெயரை சொல்லி திட்டுகிறார்”. என்றார்

எனவே சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தனது கணவர் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து கணவன், மனைவி இருவரிடையே போலீசார் சமாதான முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் இன்று கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா தனது கணவர் பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்…

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது பலபேருடன் தொடர்புபடுத்திப் பேசி என்னை சித்ரவதை செய்து அடிக்கிறார்.

முன்பே புகார் அளித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவேதான் இன்று கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தேன்.” என்று தெரிவித்தார்.

Actor Thadi Balaji Wife Nithya Filed Complaint Against her husband

நாகேஷ் திரையரங்கம் படத்தை திரையிட நஷ்டஈடு வேண்டும்; ஆனந்த்பாபு வழக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிடத் தடைகேட்டு, மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார்.

சமீபத்தில் நாகேஷ் திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார்.

மேலும் ஆனந்த்பாபு இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது.

ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Actor Anand Babu filed a case against Nagesh Thiraiyarangam release

More Articles
Follows