JUST IN நடிகர் இசையமைப்பாளர் பாடகர் எந்த ஜிவி பிரகாஷ் பிடிக்கும்?; சைந்தவி சூப்பர் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.

இந்த படத்தில் பாரதிராஜா அதிதி பாலன் கௌதம் வாசுதேவன் மேனன் யோகி பாபு மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழா மேடையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற இதுபோல உறவு உலகத்தில் இல்லை என்ற பாடலை பாடகி சைந்தவி பாடினார்.

அதன் பின்னர் தொகுப்பாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

பாடகர் நடிகர் இசை அமைப்பாளர் இவர்களில் ஜிவி பிரகாஷ் உங்களுக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டனர்.

ஜி வி பிரகாஷ் என்னுடைய நண்பர் என்று பதில் அளித்தார்.

அதன் பின்னர் இந்த மூன்றில் யாருக்கு எத்தனை மார்க் போடுவீர்கள்? என்று கேட்டனர்.. எல்லாவற்றிற்கும் முழு மதிப்பெண் கொடுப்பேன் 100 என்றார்.

கணவராக ஜிவி பிரகாஷ் பிரகாசுக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள்.. அதற்கும் முழு மதிப்பெண் கொடுப்பேன் அவரைப் போன்ற கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என சைந்தவி பேசினார்.

https://www.youtube.com/shorts/wfj60owtDRE

Singer Saindhavi about GV Prakash at Karumegangal Kalaigindrana event

விபத்தில் சிக்கிய PS & VTK பாடகி ரக்‌ஷிதா உருக்கமான பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதோடு சொல்’ பாடல் பாடியவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

இவர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடலையும் பாடியுள்ளார்.

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் சிறு வயது முதலே பாடத் தொடங்கி புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் பாடகி ரக்ஷிதா சுரேஷ்.

தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.

இந்த நிலையில், பாடகி ரக்ஷிதா மலேசியாவில் தான் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். மலேசியாவில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நான் இருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி கடும் சேதமடைந்தது. அந்த 10 நொடிகளில் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. ஏர்பேகுகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. நல்லவேளையாக நான், ஓட்டுநர் மற்றும் முன்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி ஆகிய மூவரும் சிறிய உள்காயங்கள் மற்றும் வெளிக்காயங்களுடன் தப்பித்தோம். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருக்கிறேன்.” என கூறியுள்ளார்.

ponniyin selvanbsinger Rakshita Suresh met accident

தங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரிட்ட ப்ரியா – அட்லி தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ’தெறி’, ’மெர்சல்’, ’பிகில்’ ஆகிய மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அட்லி.

அட்லி தற்போது ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்து வரும் ’ஜவான்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த நடிகை பிரியா என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அட்லி – பிரியா தம்பதி ஆண் குழந்தைக்கு பெற்றோர் ஆகிறார்கள்.

இந்த நிலையில், அட்லி – பிரியா தம்பதி தனது ஆண் குழந்தைக்கு ’மீர்’ என்ற பெயர் வைத்துள்ளார்கள்.

தனது குழந்தைக்கு ’மீர்’ என்ற பெயர் வைத்துள்ளதாக அட்லி தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலர் அட்லி – பிரியா தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

atlee and priya couple baby name revealed meer

‘பார்க்கிங்’ படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்த ‘பிகில்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

தற்போது இவரது கைவசம் ‘டீசல்’ மற்றும் ‘எல் ஜி எம்’ ஆகிய படங்கள் உள்ளன. இதில் எல்ஜிஎம் படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தன் முதல் படைப்பாக தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஒரு புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் ஹரிஸ் கல்யாண்.

இந்த படத்திற்கு ‘பார்க்கிங்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார்.

இவர் மேயாத மான், நானே வருவேன், மற்றும் பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் இந்துஜா.

இந்த படத்தை ‘பலூன்’ பட இயக்குனர் சினிஸ் ஸ்ரீ தரன் தயாரித்துள்ளார்.

Harish Kalyans new movie titled Parking

சட்டை கிழிஞ்சாலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷால்.; இதான் காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நகரத்தில் ஒரு கிராமம் என்ற நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் விஷால்.

அவருக்கு மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆகியவை மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின்னர் மாட்டு வண்டியில் பயணம் செய்தார் நடிகர் விஷால்.

மேலும் சில பெண்களுடன் இணைந்து நாத்து நடவும் செய்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விஷாலின் சட்டை கிழிந்தது. எனவே அவருக்கு உடனடியாக மாற்று உடை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனாலும் சட்டையை மாற்ற மறுத்துவிட்டார் விஷால்.

விவசாயத்தால் கிழிந்த ஆடை. அப்படியே இருக்கட்டும் என்று கூறி, கிழிந்த சட்டையுடனே அந்த நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறார் விஷால்.

Actor Vishal participated in event with teared shirt

‘கங்குவா’ குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘கங்குவா’.

இப்படத்தில் திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி நடிக்கிறார்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொடைக்கானலில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் கொடைக்கானல் ஷூட்டிங் நிறைவடைந்ததாகவும், சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்காக பிரமாண்டமான செட் அமைக்க பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் ‘கங்குவா’ படத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya treats the crew of ‘kanguva’ with biryani

More Articles
Follows