மஹதி – ராஜேஷ் வைத்யா பங்கேற்கும் ECR-யில் சங்கீத உற்சவம்

மஹதி – ராஜேஷ் வைத்யா பங்கேற்கும் ECR-யில் சங்கீத உற்சவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் திருவிழா நிகழ்ச்சி-சீசன் 2, பொதுவாகச் சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது.

பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.

இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

பாடகி மஹதி பேசியதாவது…
பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும், மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.

இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது. நான் 31 ஆம் தேதி இசை நிகழ்வில் கலந்துகொள்கிறேன். இவ்விழா பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது…

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது.

2வது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை பகுதியில் நடந்தாலும், இந்நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நானும் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் இணைந்து 29 ஆம் தேதி நிகழ்ச்சி செய்யவுள்ளோம். உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் R.K Convention Centre உட்புற அரங்கில் , 2000 ஆம் பேர் வரை அமர்ந்து ரசிக்கும் வகையில் /800 கார் பார்க்கிங் உள்ள பிரம்மாண்டமான நடைபெறவுள்ளது.

ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் மாபெரும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சி

ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

டிசம்பர் 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு கேரளா ஷரத் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 28 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு திரு . திரிச்சூர் சகோதரர்கள் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 29 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ராஜேஷ் வைத்யா அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 30 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு . விக்னேஷ் ஈஸ்வர் .திருவாரூர் பக்தவச்சலம் அவர்களின் நிகழ்ச்சி
டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாடகி மஹதி அவர்களின் நிகழ்ச்சி
ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ராகுல் தேஷ் பாண்டே மற்றும் சந்தீப் நாராயணன் அவர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேலதிக விவரங்களுக்குத்
திரு மோகன்
9444086136

மஹதி

Singer Mahathi participating in Chennai ECR Music festival

ஹங்கேரியில் உருவாகும் ‘கள்வன்’ இசை.; ஷங்கர் – ஜிவி பிரகாஷ் கூட்டணி

ஹங்கேரியில் உருவாகும் ‘கள்வன்’ இசை.; ஷங்கர் – ஜிவி பிரகாஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, நம்பிக்கைக்குரிய பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா மற்றும் பாரதிராஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கள்வன்’ திரைப்படம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வருகிறது.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் ரேவா ஹங்கேரியில் நம்பிக்கைக்குரிய இசைக்கலைஞர்கள் குழுவுடன் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து இசையமைப்பாளர் ரேவா கூறும்போது…

“அற்புதமான பல திறமைசாலிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் டில்லி பாபு சார், பிவி ஷங்கர் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் ஆகியோருக்கு நன்றி. ஜி.வி.பிரகாஷ் குமார், பாரதிராஜா சார், இவானா மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் பின்னணி இசையமைப்பது மிகவும் சவாலானது.

இந்தப் படத்தின் கதை மூலம் இசையில் பல ஆக்கப்பூர்வமான விஷயங்களைக் கற்றுக் கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது. உணர்வுகள் இந்தப் படத்தின் மையமாக இருப்பதால், அதற்கான இசையைக் கொடுத்துள்ளோம். எனது பின்னணி இசைக்கு ரசிகர்கள் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ‘கள்வன்’ படத்தின் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை முன்னணி ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கியுள்ளார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி டில்லி பாபு தயாரித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. வர இருக்கும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே, இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இருவரும் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் இன்னும் சில நடிகர்கள் நட்சத்திரக் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர்.

*தொழில்நுட்ப குழு*:

தயாரிப்பாளர் – ஜி.டில்லி பாபு
தயாரிப்பு இல்லம் – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி
ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் – பிவி ஷங்கர்
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – என்.கே. ராகுல்
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்
கதை – ரமேஷ் ஐயப்பன் | பிவி சங்கர்
திரைக்கதை – பிவி ஷங்கர் | ரமேஷ் ஐயப்பன்
வசனங்கள் – ரமேஷ் ஐயப்பன் | ராஜேஷ் கண்ணா | பிவி சங்கர்
கூடுதல் திரைக்கதை – SJ அர்ஜுன் | சிவகுமார் முருகேசன்
நிர்வாக தயாரிப்பாளர் – பூரணேஷ்
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.எஸ்.ஸ்ரீதர்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – கே.வி. துரை
பாடல் வரிகள் – சிநேகன் | ஏகாதேசி | மாயா மகாலிங்கம் | நவக்கரை நவீன் பிரபஞ்சம்
ஆடை வடிவமைப்பாளர் – கிருஷ்ண பிரபு
ஸ்டில்ஸ் – இ.ராஜேந்திரன் காஸ்ட்யூமர் – சுபியர்
ஒப்பனை – வினோத் சுகுமாரன்
PRO – சுரேஷ் சந்திரா | ரேகா டி’ஒன்
விளம்பர வடிவமைப்பாளர் – வின்சி ராஜ்

கள்வன்

Gv Prakash Bharathiraja starrer Kalvan music updates

திரிஷா குறித்த சர்ச்சை வழக்கு..; மன்சூர் அலிகானை கண்டித்த ஹைகோர்ட்

திரிஷா குறித்த சர்ச்சை வழக்கு..; மன்சூர் அலிகானை கண்டித்த ஹைகோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் தனக்கும் திரிஷாவுக்கும் படுக்கை அறை காட்சிகள் இல்லை கற்பழிப்பு காட்சிகள் இல்லை என திரிஷா குறித்து பேசி இருந்தார் மன்சூர் அலிகான்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் இருந்தன. அதன் பிறகு மன்னிப்பு கேட்பது போல கேட்டிருந்தார் மன்சூர் அலிகான்.

அதன் பின்னர் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த விவகாரத்தில்…

நடிகர் மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

– உயர் நீதிமன்றம்

High court condemns Mansoor alikhan in Trisha issue

KGF- இல் மார்கழியில் மக்கள் இசையை தொடங்கும் பா ரஞ்சித்

KGF- இல் மார்கழியில் மக்கள் இசையை தொடங்கும் பா ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதோடு திரைப்படங்கள் தயாரிக்கவும் செய்கிறார்.

நீலம் பண்பாட்டு மையம் பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்திவருகிறார்.

வருடா வருடம் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சியும் நடத்திவருகிறார்.

பல்வேறு இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடனக்கலைஞர்கள், கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.

மார்கழியில் மக்களிசை 2023 ம் ஆண்டு இந்த வருடம் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது.

டிசம்பர் 23, கே ஜி எப் , டிசம்பர் 24 ஓசூர், டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்கள் சென்னையிலும் நடைபெறவிருக்கிறது.

முதல் நாள் நிகழ்ச்சியாக நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டை. கோலார் தங்க வயல், கர்நாடகா.
கே ஜி எப் பில் KGF கோலாகலமாக துவங்கவிருக்கிறது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், பாடகர்கள், கிராமிய கலைஞர்கள் என இந்தியா முழுவதிலிருந்தும் பலர் இதில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளில் திரைப்பட கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள், பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

வாருங்கள் கொண்டாடுவோம்.

பா ரஞ்சித்

Maargazhi makkal isai will be started in KGF by Ranjith

‘டங்கி’ பட ரிலீஸை திருவிழா போல கொண்டாடிய ஷாருக்கான் ரசிகர்கள்

‘டங்கி’ பட ரிலீஸை திருவிழா போல கொண்டாடிய ஷாருக்கான் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிசம்பர் 21 தேதியான இன்று மிகுந்த ஆரவாரத்துடன் ஷாருக்கானின் ‘டங்கி’ வெளியானது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் இணைந்திருக்கும் முதல் திரைப்படம் இது.

இந்தியாவில் இதன் முதல் காட்சி அதிகாலை 5.55 மணிக்கு மும்பையின் அடையாளமாக திகழும் கெயிட்டி கேலக்ஸி திரையரங்கில் திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் அவர்களுக்கே உரிய பாணியில் கொண்டாடி எல்லையற்ற மகிழ்ச்சியை உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக இணையத்தில் ஷாருக் கானின் ரசிகர்கள் ஏராளமான காணொளிகளை பகிர்ந்து வருகிறார்கள். அதில் மேளதாளத்துடனும், வானவேடிக்கைகளுடனும் பட வெளியீட்டை அவர்கள் கொண்டாடுவதற்காக திரையரங்குகளில் ஒன்று கூடியதை காண முடிந்தது. மேலும் இந்த திரையரங்க வளாகத்தில் ஷாருக்கானின் பெரிய கட்அவுட் ஒன்றும் இருந்தது.

தற்போது X‌ என அழைக்கப்படும் ட்விட்டரில் ரசிகர்கள் பகிர்ந்துள்ள வீடியோக்களில் ஷாருக்கின் ரசிகர்கள் ஒன்றாக நடனம் ஆடுவதை காண முடிகிறது. அதே நேரத்தில் மேளதாளத்தின் ஒலிக்கு ஏற்ப நடனமாடி தங்களின் மகிழ்ச்சியான மனநிலையையும் வெளிப்படுத்தினர்.

ஒரு சில ரசிகர்கள் டங்கி என எழுதப்பட்ட பதாகையை உயர்த்திப் பிடித்து இருப்பதையும் காண முடிந்தது. பட்டாசு வெடிப்பதற்காக சிறிய மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தின் பிரீமியர் காட்சிக்காக காத்திருந்த ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வெளியே நடனமாடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பான காணொளிகளை தொடர்ந்து கீழே காணலாம்.

இந்த வீடியோக்களுக்கு ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் பதிலளித்திருக்கிறார். படத்தின் வெளியீட்டிற்காக தயாராக இருந்த நடிகர் ஷாருக்கான்.. மும்பை
கெயிட்டி கேலக்ஸியில் ரசிகர்களின் வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கத்தில் மறு பதிவு செய்து, ” நன்றி தோழர்களே மற்றும் தோழிகளே.. இது ஒரு நல்ல நிகழ்ச்சி மற்றும் #டங்கி மூலம் நீங்கள் அனைவரும் மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.

நியூசிலாந்தில் உள்ள பார்வையாளர்கள் மட்டுமல்ல மேலும் பலரும் இதற்கான எதிர்வினைகளை இணையத்தில் பகிர தொடங்கியுள்ளனர். படம் வெளியான தருணத்திலிருந்து சிறந்த விமர்சனங்களும் பகிரப்பட்டு வருகின்றன.

ஷாருக் கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்தயேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Shahrukh fans celebrates Dunki release as festival

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் உடன் இணைந்த டபுள் ஹீரோயின்ஸ்

‘பிக்பாஸ்’ ஷாரிக் ஹாசன் உடன் இணைந்த டபுள் ஹீரோயின்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிளாப்-இன் ஃபில்மோடெயின்மென்ட் சார்பில் நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர். எழுதி, இயக்கி இருக்கும் திரில்லர் படம் “நேற்று இந்த நேரம்”.

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் என இரண்டு பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

நேற்று இந்த நேரம்

இந்த படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை நித்தின் ஆதித்யா & சாய் ரோஷன் கே.ஆர். இணைந்து எழுதியுள்ளனர்.

பார்ட்டி கொண்டாட போன இடத்தில் நண்பர்கள் மர்மமான முறையில் காணாமல் போக, அதன் பின்னணியில் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களை கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

கெவின் என் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷால் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை கோவிந்த்.என் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இந்த நேரம்

நேற்று இந்த நேரம் படத்தின் இசை உரிமத்தை ஜீ மியூசிக் சவுத் வாங்கியுள்ளது. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அறிவு, ஆதித்யா ஆர்.கே., ரவி ஜி ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இது ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

*டிரைலர்* – https://youtu.be/aR38JOp5C24

நேற்று இந்த நேரம்

Netru indha neram movie starring Sharikhhassan

More Articles
Follows